புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 அறிமுக விபரம்!
வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மாடல், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பத
புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு வர இருப்பது குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் பிரிமியம் அம்சங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக நன்மதிப்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது. இந்த நிலையில், பட்ஜெட் கார் மார்க்கெட்டில் தொடர்ந்து பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருவதால், கிராண்ட் ஐ10 காரின் மார்க்கெட்டிற்கு நெருக்கடி ஏற்படும் அபாயம் இருக்கிறது.

இதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் போன்றே, புதிய கிராண்ட் ஐ10 கார் வடிவமைப்பில் புதிய மாடலாக மெருகேற்றப்படுவதுடன், அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும். தற்போதைய மாடலைவிட பின் இருக்கை பயணிகள் கால் வைப்பதற்கான லெக் ரூம் இடவசதியில் சிறப்பாக இருக்கும்.

ஏற்கனவே, புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, ஸ்பை படங்களும் வெளியாகி வருகின்றன. ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, ஹூண்டாய் எலான்ட்ரா இடைசீர்திருத்த மாடலின் டிசைன் தாத்பரியங்கள் புதிய கிராண்ட் ஐ10 காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிகிறது.

தற்போதைய மாடலைவிட உட்புறம் மிகவும் பிரிமியமாக மாற்றப்பட்டு இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், சன்ரூஃப் ஆகியவை புதிய கிராண்ட் ஐ10 காரில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும்,, டீசல் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும்,, 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சென்ட்ரல் டோர் லாக்கிங், விபத்தின்போது கதவுகள் தானாக திறக்கும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாக இருக்கும். மேலும், டாடா டியாகோ உள்ளிட்ட சற்றே குறைவான பட்ஜெட் கார் மார்க்கெட்டையும் தன்வசப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








