TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பை படங்கள் மற்றும் அறிமுக விபரம்!
புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பை படங்கள் மீண்டும் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. படங்களையும், அறிமுக விபரத்தையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஹூண்டாய் சான்ட்ரோ கார் கடந்த 2014ம் ஆண்டு விற்பனை நிறுத்தப்பட்டது. பட்ஜெட் கார் வாங்குவோரின் தேர்வில் முதன்மையாக விளங்கிய இந்த மாடல் விற்பனை நிறுத்தப்பட்டது ஏமாற்றத்தை தந்தது.
இந்த நிலையில், ஹூண்டாய் சான்ட்ரோ விட்டுச் சென்ற இடத்தை நிரப்பும் முயற்சியில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இறங்கி இருக்கிறது. வடிவமைப்பு, வசதிகளில் முற்றிலும் புதிய மாடலை ஹூண்டாய் சான்டரோ காருக்கு நிகரான இடத்தில் களமிறக்க உள்ளது ஹூண்டாய்.
மேலும், வாடிக்கையாளர்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்ற சான்ட்ரோ பிராண்டு பெயரிலேயே புதிய மாடலை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த கார் தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் ஏஎச்-2 என்ற பெயரில் இந்த புதிய மாடல் அழைக்கப்படுகிறது. டெல்லி அருகே சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய காரின் ஸ்பை படங்கள் மீண்டும் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. படத்தில் காண்பது படி, பழைய ஹூண்டாய் சான்ட்ரோவுக்கும், புதிய மாடலுக்கும் நிச்சயம் வடிவமைப்பிலும், வசதிகளிலும் ஒற்றுமை இல்லை என்பது மீண்டும் புலனாகிறது.
புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் 70 குதிரைசக்தி திறனையும், 100 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் தரும் என்பது கிடைத்துள்ள தகவல். பெட்ரோல் மாடல் தவிர்த்து சிஎன்ஜி எரிவாயு மாடலிலும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கார் ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி வேகன் ஆர், மாருதி செலிரியோ, ரெனோ க்விட் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
Source: AutomotiveIndia