புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகமாகிறது!!
எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா மிகச் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. சரியான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய 7 சீட்டர் மாடலாக இருப்பதன் காரணமாக, வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இரு
எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா மிகச் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. சரியான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய 7 சீட்டர் மாடலாக இருப்பதன் காரணமாக, வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், மாருதி எர்டிகா கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் இரண்டாம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. சில தினங்களுக்கு முன் இந்த புதிய மாருதி எர்டிகா கார் இந்தோனேஷிய சாலைகளில் சாலை ஓட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகின.

இந்த சூழலில், வரும் 19ந் தேதி இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் இந்தோனேஷியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அங்கு 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், தற்போதைய மாடலைவிட புதிய மாருதி எர்டிகா கார் 60மிமீ வரை நீளம் கூட்டப்பட்டு இருக்கிறது.

இதனால், மூன்றாவது வரிசை இருக்கையின் இடவசதி மேம்பட்டிருக்கும் என்று தெரிகிறது. தற்போது நெருக்கடியாக உள்ள மூன்றாவது வரிசை இருக்கையில் பெரியவர்களும் சவுகரியமாக அமர்ந்து செல்ல இந்த கூடுதல் நீளம் வழி ஏற்படுத்தி கொடுக்கும்.

புதிய க்ரில் அமைப்பு மற்றும் மறுவடிவமைப்பு பெற்ற பின்புறம் ஆகியவையும் புதிய மாருதி எர்டிகா காரின் முக்கி அம்சங்களாக இருக்கும். இன்டீரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளும் சேர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வரும்போது தற்போது பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்படும். அதேநேரத்தில், 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்களின்படி, வரும் ஆகஸ்ட் மாத வாக்கில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications