பல்டியடித்து சிதைந்து போன நிஸான் சூப்பர் கார்... பெங்களூர்- ஹைதராபாத் சாலையில் பயங்கரம்!

அனந்தபூரில், நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களையும், படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

Recommended Video

Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark

பெங்களூர்- ஹைதராபாத் நெடுஞ்சாலையில் நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

பல்டியடித்து சிதைந்தபோன நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார்... !!

பெங்களூர் - ஹைதராபாத் இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 44ல் நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார் ஒன்று அதிவேகத்தில் சென்றுள்ளது. அனந்தபூர் என்ற இடத்தில், கார் வந்ததை கவனிக்காமல் பாதசாரி ஒருவர் சாலையை கடக்க முற்பட்டதாக தெரிகிறது.

பல்டியடித்து சிதைந்தபோன நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார்... !!

இதையடுத்து, பாதசாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் காரை திடீரென வேறுபக்கமாக திருப்பி இருக்கிறார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, பல்டியடித்து பயங்கர விபத்தில் சிக்கியது.

பல்டியடித்து சிதைந்தபோன நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார்... !!

இந்த விபத்தில் கார் ஓட்டுனரும், அதில் பயணித்தவர்களும் காயங்களுடன் தப்பி விட்டதாக தெரிகிறது. ஆனால், அந்த சூப்பர் கார் ஒன்றுக்கும் உதவாத வகையில் மிக பலத்த சேதமடைந்துள்ளது.

பல்டியடித்து சிதைந்தபோன நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார்... !!

திறந்த அமைப்புடைய டிரக் ஒன்றில் அந்த கார் ஏற்றப்பட்டு இருந்துபோது எடுக்கப்பட்ட படங்களையே நீங்கள் செய்தியில் பார்க்கிறீர்கள். சரி செய்ய முடியாத அளவுக்கு அந்த கார் சேதமடைந்திருப்பதை காண முடிகிறது.

பல்டியடித்து சிதைந்தபோன நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார்... !!

இந்தியாவில் ஒரு சில நிஸான் ஜிடி-ஆர் கார்களே இருக்கின்றன. அதில், ஒரு கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இந்த கார் ரூ.1.99 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. அடக்க விலை ரூ.3 கோடியை நெருங்கும்.

பல்டியடித்து சிதைந்தபோன நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார்... !!

நிஸான் ஜிடி-ஆர் கார் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கார் மாடல்களில் ஒன்று. இந்த காரில் 3.8 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 637 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இருக்கிறது.

பல்டியடித்து சிதைந்தபோன நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார்... !!

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் காரில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 315 கிமீ வேகம் வரை செல்லும். இதுபோன்ற சூப்பர் கார்களை இந்திய சாலைகளில் பயன்படுத்தும்போது பன்மடங்கு கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

பல்டியடித்து சிதைந்தபோன நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார்... !!

ரேஸ் டிராக்குகளில் மட்டுமே இதன் வல்லமைகளை சோதிக்க முடியும். சாதாரண மற்றும் நெடுஞ்சாலைகளில் இந்த காரை கவனமாக ஓட்டுவது அவசியமாகிறது. குறிப்பாக, நெடுஞ்சாலைகளை ஒட்டி இருக்கும் கிராமங்களை கடந்து செல்லும்போது அதிக கவனத்துடன் செல்வது அவசியம்.

பல்டியடித்து சிதைந்தபோன நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார்... !!

மேலும், இதுபோன்ற சூப்பர் கார்களை இந்திய நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது மிகவும் நிதானத்தை கடைபிடித்தால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும். இந்த விபத்து குறித்து கூடுதல் தகவல்கள் கிடைத்தால் விரைவில் பகிர்ந்து கொள்கிறோம்.

பல்டியடித்து சிதைந்தபோன நிஸான் ஜிடிஆர் சூப்பர் கார்... !!

காரில் எவ்வளவு பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், அதிவேகம் ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்த நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார் விபத்து சம்பவமும் பாடமாக அமைந்துள்ளது. விலை உயர்ந்த கார் அல்லது விலை குறைவான கார் சீரான வேகம் நிச்சயம் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A Nissan GT-R has crashed on the Bangalore-Hyderabad Highway (NH-44). From the pictures, it is evident that the GT-R has been totalled beyond repair.
Story first published: Tuesday, January 23, 2018, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X