நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நிஸான் நிறுவனம் கிக்ஸ் என்ற புத்தம் புதிய எஸ்யூவி ரக கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு இன்று முதல் நிஸான் டீலர்களில்

நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் இன்று முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நிஸான் நிறுவனம் கிக்ஸ் என்ற புத்தம் புதிய எஸ்யூவி ரக கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி அண்மையில் குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் அறிமுகம் செய்தது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு!

இந்த நிலையில், நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு இன்று முதல் நிஸான் டீலர்களில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு ஏற்கப்படுகிறது. ரூ.25,000 முன்பணத்துடன் இந்த புதிய எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியானது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும், 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இப்போது இல்லை. எக்ஸ்இ, எக்ஸ்எல் மற்றும் எக்ஸ்வி ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி ஒற்றை வண்ணங்களிலும், இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கும். நாம் டெஸ்ட் டிரைவ் செய்த கருப்பு - சிவப்பு வண்ணக் கலவை மிக கவர்ச்சிகரமாக இருந்தது. அதேபோன்று பிற வண்ண தேர்வுகளும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 4 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் விளக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், மூடு லைட்டிங், கீ லெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு!

ரூ.11 லட்சம் முதல் ரூ.15 லட்ச வரையிலான விலைப் பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும். அடுத்த மாதம் அறிமுகமாகும் டாடா ஹேரியர் எஸ்யூவிக்கும் இது போட்டியாக இருக்கும்.

Article Published On: Friday, December 14, 2018, 12:07 [IST]
English summary
Nissan India dealerships have started accepting bookings for the Kicks SUV for an amount of Rs 25,000. The booking amount is entirely refundable and the SUV is scheduled for launch in January 2019, We have already driven it and you can check out our detailed Nissan Kicks Review to know everything about the five-seater SUV.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+