புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவக்கம்!

அடுத்த மாதம் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், டீலர்களில் ரூ.50,000 முன்பணத்துடன் கிக்ஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவங்கி இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவக்கம்!

அடுத்த மாதம் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், டீலர்களில் ரூ.50,000 முன்பணத்துடன் கிக்ஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஆன்லைனில் முன்பதிவு இன்னும் துவங்கப்படவில்லை.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவக்கம்!

முன்பதிவை ரத்து செய்தால், முன்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என டீலர்கள் உறுதி தெரிவிக்கின்றனர். நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் மட்டுமே நேரடியாக புக்கிங் செய்யப்படுவதாக கார்தேக்கோ தளம் தெரிவித்துள்ளது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவக்கம்!

டஸ்ட்டர், டெரானோ ஆகிய எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட, நிஸான் - ரெனோ கூட்டணியின் B0 பிளாட்ஃபார்மில் புதிய கிக்ஸ் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மாடல் பரிமாணத்தில் சற்று பெரிய காராக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவக்கம்!

நிஸான் நிறுவனத்தின் வி வடிவிலான க்ரில் அமைப்பு, பெரிய ஏர்டேம், நேர்த்தியான ஹெட்லைட் அமைப்பு ஆகியவற்றுடன் முகப்பு டிசைன் கவர்கிறது. பம்பர் அமைப்பில் பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவக்கம்!

பின்னோக்கி சரியும் கூரை அமைப்பு, 17 அங்குல மெஷின் கட் அலாய் வீல்கள் ஆகியவை பக்கவாட்டு டிசைனுக்கு கவர்ச்சி சேர்க்கின்றன. பின்புறத்தில் முக்கோண வடிவிலான கச்சிதமான டெயில் லைட் க்ளஸ்ட்டர், வலிமையான பம்பர் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவக்கம்!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் 7.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸ்ட்டர், 360 டிகிரி கோண கேமரா ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவக்கம்!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவக்கம்!

டெரானோ எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்கள்தான் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவக்கம்!

இந்திய கார் சந்தையில் பின்தங்கி நிற்கும் நிஸான் கார் நிறுவனம் புதிய மாடல்களுடன் மார்க்கெட் பங்களிப்பை உயர்த்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு வழியாக அதிக எதிர்பார்ப்புடன் கிக்ஸ் எஸ்யூவியை களமிறக்க உள்ளது. டெரானோ எஸ்யூவியை விட விலை கூடுதலான மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 7, 2018, 13:46 [IST]
English summary
According to reports, Nissan India dealerships have started accepting bookings for the Kicks SUV. The new Nissan Kicks is scheduled to be launched in the Indian market in January 2019, with production already having started.
மேலும்... #நிஸான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+