கிக் ஏற்றும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!!

அடுத்த ஆண்டு நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த 5 சீட்டர் எஸ்யூவியின் உட்புறம் மிகவும் சவுகரியமான இடவசதியை அளிக்கும்.

By Saravana Rajan

அடுத்த ஆண்டு நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த அட்டகாசமான எஸ்யூவி குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கிக் ஏற்றும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!!

இந்திய மார்க்கெட்டில் பின்தங்கி இருக்கும் நிஸான் கார் நிறுவனம் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதில், நிஸான் கிக்ஸ் எஸ்யூவியும் இடம்பிடித்துள்ளது. இந்த புதிய எஸ்யூவி அடுத்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கிக் ஏற்றும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!!

வெளிநாடுகளில் இருக்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியைவிட இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மாடலில் சில மாற்றங்களை செய்து அறிமுகம் செய்ய நிஸான் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர் உள்ளிட்ட மாடல்களுக்கு எதிராக இது நிலைநிறுத்தப்படும்.

கிக் ஏற்றும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!!

இந்த 5 சீட்டர் எஸ்யூவியின் உட்புறம் மிகவும் சவுகரியமான இடவசதியை அளிக்கும். தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளையும், சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கும். மேலும், அதிக அளவில் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கான பூட் ரூம் இடவசதியையும் பெற்றிருக்கும்.

கிக் ஏற்றும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியானது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

கிக் ஏற்றும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!!

பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் அறிமுகம் செய்யப்படும். வெளிநாடுகளில் இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் கிடைத்தாலும், இந்தியாவில் கொடுக்கப்படுவது சந்தேகம்தான்.

கிக் ஏற்றும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் இந்திய மார்க்கெட்டில் கிக்ஸ் எஸ்யூவியை மிக முக்கிய மாடலாக நிஸான் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 6, 2018, 13:56 [IST]
English summary
According to reports that the Nissan Kicks will be launched in the country in January 2019.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+