TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது: ஜனவரியில் அறிமுகம்!
நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
எஸ்யூவி கார்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பை மனதில் வைத்து புத்தம் புதிய எஸ்யூவி மாடலை நிஸான் நிறுவனம் இந்தியாவில் களமிறக்க உள்ளது. அண்மையில் இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த எஸ்யூவி, வரும் ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்தநிலையில், இந்த புத்தம் புதிய எஸ்யூவியின் உற்பத்தி சென்னையில் உள்ள நிஸான் ஆலையில் துவங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நிஸான் எஸ்யூவியின் டிசைன் மிகச் சிறப்பாக இருக்கிறது. முன்புறத்தில் வலிமையான க்ரில் அமைப்பு, நவீன கார்களுக்குரிய தோற்றத்தை தரும் ஹெட்லைட் வடிவமைப்பு, பம்பர் ஆகியவை கம்பீரமான தோற்றத்தை தருகிறது. மேலும், முகப்பு முப்பரிமாண தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
பக்கவாட்டில் மிக கவர்ச்சியாக இருக்கிறது கிக்ஸ். காரணம், வலிமையான வீல் ஆர்ச்சுகள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் பிரத்யேக வண்ணத்திலான கூரை அமைப்பு ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.
பின்புறத்தில்மிக அழகான டெயில் லைட் க்ளஸ்ட்டர், சரிவான விண்ட் ஷீல்டு அமைப்பு, மிக வலிமையான பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவை எஸ்யூவிக்கு உரிய தோரணையை தருகின்றன. மொத்தத்தில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வசீகரமாக இருக்கிறது.
இந்த புதிய எஸ்யூவியானது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 102 பிஎச்பி பவரையும், 145 என்எம் அளிக்க வல்ல 1.6 லிட்டர் எஞ்சினும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.
டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் இரண்டு விதமான ட்யூனிங்கில் கிடைக்கும். .ஒன்று 84 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு மாடல் 109 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மாடலிலும் வருகிறது.
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் வர இருக்கிறது. ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.
ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் டெரானோ எஸ்யூவிக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.