புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் வெளிப்புறம் கவர்ச்சியாக இருப்பது போலவே, உட்புறமும் மிக பிரிமீயமாக கவரும் வகையில் இருக்கிறது. இந்த எஸ்யூவியில் கருப்பு மற்றும் பழுப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டுள்

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் ஏராளமான சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

எஸ்யூவி கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை மனதில் கொண்டு புத்தம் புதிய கிக்ஸ் எஸ்யூவியை நிஸான் நிறுவனம் அடுத்த மாதம் விற்பனைக்கு களமிறக்க உள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியில் ஏராளமான சிற்பபு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் வெளிப்புறம் கவர்ச்சியாக இருப்பது போலவே, உட்புறமும் மிக பிரிமீயமாக கவரும் வகையில் இருக்கிறது. இந்த எஸ்யூவியில் கருப்பு மற்றும் பழுப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

ஆன்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் நிஸான் கனெக்ட் செயலிகளை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும். மேலும், இந்த சிஸ்டத்தின் திரை மூலமாக இந்த காரில் கொடுக்கப்பட்டும் இருக்கும் 360 டிகிரி கேமரா பதிவுகளை துல்லியமாக பார்க்க முடியும்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

இதன் ரக கார்களில் முதல்முறையாக 360 டிகிரி கேமரா இந்த காரில் இடம்பெற்றுள்ளது. சொகுசு கார்களில் காணக்கிடைக்கும் 360 டிகிரி கோண கேமரா மூலமாக, காரின் சுற்றுப் புறத்தை முழுமையாக கண்காணித்து எளிதாக பார்க்கிங் செய்ய முடியும்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

இந்த காரில் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட்,யுஎஸ்பி போர்ட் மற்றும் 12 வோல்ட் சாக்கெட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரியர் ஏசி வென்ட்டுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த எஸ்யூவியில் அனலாக் டாக்கோமீட்டர் மற்றும் எரிபொருள் மானியும், நடுவில் இருக்கும் மின்னணு திரை ஸ்பீடோமீட்டராகவும் செயல்படுகிறது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், கூல்டு க்ளவ் பாக்ஸ், பவர் ஸ்டீயரிங் மற்றும் ஸ்டோரேஜ் வசதிகள் நிரம்ப பெற்றுள்ளது. இந்த காரில் 6 நிலைகளில் மேனுவலாக மாற்றும் ஓட்டுனர் இருக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

இந்த எஸ்யூவியில் டைனமிக் கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 3 ஏர்பேக்குகள், ஃபாலோ மீ ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், ஈக்கோ டிரைவிங் மோடு ஆகிய தொழில்நுட்பங்கள் உள்ளன.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 106 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் 110 பிஎச்பி பவரையும் வெளிப்பபடுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வருகிறது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு நாளை மறுதினம், அதாவது டிசம்பர் 14ந் தேதி முதல் முன்பதிவு நிஸான் டீலர்களில் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். இந்த புத்தம் புதிய எஸ்யூவி ரக காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் விரைவில் படிக்கலாம்.

Article Published On: Wednesday, December 12, 2018, 13:49 [IST]
English summary
Nissan Kicks Interiors Revealed — It Even Gets A 360 Camera!
மேலும்... #நிஸான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+