நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த எஸ்யூவியின் ஸ்பை படங்கள் இப்போது இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

By Saravana Rajan

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த எஸ்யூவியின் ஸ்பை படங்கள் இப்போது இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையை கண்டு அசந்து போன போட்டியாளர்கள் இந்த ரகத்தில் புதிய மாடல்களை களமிறக்கி வருகின்றனர். அதில், சிறிய பங்களிப்பை பெற்றுவிடலாம் என்ற கணக்குடன் காய் நகர்த்தி வருகின்றனர்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

அந்த வகையில், ஜப்பானை சேர்ந்த நிஸான் கார் நிறுவனம் ஹூண்டாய் க்ரெட்டா கார் மார்க்கெட்டை குறிவைத்து தனது கிக்ஸ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் சாலை சோதனைகள் இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கின்றன.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்திய மண்ணில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அலாய் வீல்களின் டிசைன் கூட தெரியாத அளவுக்கு மறைப்பு வேலைகள் செய்யப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியைவிட இந்தியாவில் வர இருக்கும் கிக்ஸ் எஸ்யூவியின் வெளிப்புற வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. காரின் பெல்ட் லைன் மற்றும் கார் கதவுகளுக்கான ஃப்ரேம் வடிவமைப்பில் சற்று வித்தியாசம் தெரிகிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று தெரிகிறது. வெளிநாடுகளில் இருப்பது போன்ற உட்புற டிசைன்தான் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மாடலிலும் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. உட்புறத்திலும் அதிக மறைப்பு வேலைகள் செய்யப்பட்டு சோதனை செய்யப்படுவதால், முழுமையாக சொல்ல முடியவில்லை.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி V பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் வரும் கிக்ஸ் எஸ்யூவியானது ரெனோ - நிஸான் கூட்டணி நிறுவனத்தின் B0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உற்பத்தி செலவீனத்தை குறைக்கும் விதத்தில் இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

இதே பிளாட்ஃபார்மில்தான் ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோ மற்றும் ரெனோ கேப்ச்சர் ஆகிய எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதே அடிப்படையில் வரும் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியும் மிக ஸ்முத்தான ரைடு குவாலிட்டி கொண்ட மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

ரெனோ டஸ்ட்டர், ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிகளில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

பெட்ரோல் எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும் வழங்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த காரின் பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் பொருத்தப்பட்டு இருக்கும். ஆட்டோமேட்டிக் மாடலிலும் வரும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. வெளிநாடுகளில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனிலும் விற்பனையாகிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி அதிக இடவசதி கொண்டதாக இருக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளும், சிறந்த பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கும்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Source: IAB

Article Published On: Tuesday, August 7, 2018, 11:28 [IST]
English summary
Japanese automaker Nissan is all set to introduce the Kicks SUV in the Indian market. CarandBike reports that the Nissan Kicks will be launched in the country in January 2019. The India-spec Nissan Kicks will be different from the globally sold model. Nissan will tweak the SUV to suit the Indian conditions.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+