நிஸான் டெரானோ எஸ்யூவி விடைபெறுகிறது... பதிலியாக வரும் புதிய மாடல் விபரம்!!
நிஸான் டெரானோ எஸ்யூவிக்கு பதிலாக, புதிய கிக்ஸ் எஸ்யூவியை அறிமுகம் செய்ய நிஸான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் 18ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதிய கிக்ஸ் எஸ்யூவியில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சி
நிஸான் டெரானோ எஸ்யூவிக்கு பதிலாக, புத்தம் புதிய மாடலை அறிமுகம் செய்ய நிஸான் கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய மார்க்கெட்டில் சூப்பர் ஹிட் மாடலாக இருந்த ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக நிஸான் டெரானோ 2013ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நிஸான் டெரானோ எஸ்யூவியின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த சில மாதங்களாக நிஸான் டெரானோ எஸ்யூவியின் விற்பனை மிக சொற்ப எண்ணிக்கையில் வந்ததே இந்த முடிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், டெரானோவுக்கு பதிலாக புத்தம் புதிய கிக்ஸ் எஸ்யூவியை களமிறக்க நிஸான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

டெரானோவுக்கு மாற்றாக வரும் புதிய கிக்ஸ் எஸ்யூவியானது XL, XE மற்றும் XV ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 100 பிஎச்பி பவரையும், 148 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 85 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக விலை உயர்ந்த மாடலிலும் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். டாப் வேரியண்ட்டில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ரெனோ டஸ்ட்டர் மற்றும் டெரானோ மாடல்கள் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடல் என்ற பிம்பமும், டஸ்ட்டரைவிட விலை அதிகம் மற்றும் திருப்தியான சர்வீஸ் கட்டமமைப்பு வசதிகள் இல்லாததும், டெரானோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை. இந்த நிலையில், இந்த அனைத்து குறைகளையும் போக்கும் விதமாக, புதிய கிக்ஸ் எஸ்யூவியை நிஸான் அறிமுகம் செய்ய இருக்கிறது.

வரும் 18ந் தேதி புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. பண்டிகை காலத்தில் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்போரின் பட்டியலில் இந்த புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications