நிஸான் டெரானோ எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
நிஸான் டெரானோ எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பாடி டீக்கெல் அலங்காரம், உட்புறத்தில் புதிய சீட் கவர்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது
நிஸான் டெரானோ எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களை பெற்றிருக்கிறது.

நிஸான் டெரானோ ஸ்போர்ட் என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் கிடைக்கும். கவர்ச்சிகரமான பாடி டீக்கெல் ஸ்டிக்கர், கருப்பு வண்ண கூரை, புதிய பாடி கிளாடிங் சட்டங்கள் வெளிப்புறத்தை கவர்ச்சிகரமாக காட்டுகின்றன. பானட், முன்புற ஃபென்டர், பம்பர்களிலும், பின்புற கதவிலும் வரிக்கோடு ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் பிரிமியம் உணர்வை தருகிறது. இந்த காரில் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய விசேஷ சீட் கவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

நிஸான் டெரானோ ஸ்போர்ட் எடிசனில் நிஸான் கனெக்ட் என்ற பிரத்யேக சாஃப்ட்வேரை பெற்றிருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெற முடியும். இன்டெலிஜென்ட் மொபிலிட்டி பேக்கேஜில் 50 விதமான வசதிகளையும் பெறும் வாய்ப்பை இந்த ஸ்பெஷல் எடிசன் வழங்குகிறது.

ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய நிஸான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த காரின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 102 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் இரண்டுவிதமான பவரை வெளிப்படுத்தும் திறனில் கிடைக்கும். 84 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் மாடலானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். 108 பிஎச்பி பவரையும், 243 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

நிஸான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் மாடல் ரூ.12.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள நிஸான் டீலரை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் சீசனை முன்னிட்டு இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது நிஸான். கவர்ச்சிகரமான பாடி டீக்கெல் ஸ்டிக்கர் மற்றும் உட்புறத்தில் பிரிமியம் அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








