இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவிக்க நிதி ஆயோக் வியூகம்..!!

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகனத்துறையை முற்றிலும் மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் மின்சார வகானங்களை பயன்படுத்த ஏதுவாக பல திட்டங்களும் ஆராயப்பட்டு வருகின்றன.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

உலகளவில் பெட்ரோல், டீசல் வாகனங்களால் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் மின்சார வாகன பயன்பாட்டை உருவாக்க நிதி ஆயோக் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

அதன்படி, மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்காக மத்திய அரசு மூன்று சிறப்பு சலுகைகளை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

அதில் முதலாவதாக மின்சார வாகனங்களின் பதிவு எண் பலகைகள் பச்சை நிறத்தில் வழங்க நிதி ஆயோக் திட்டமிட்டு வருகிறது.

மேலும் இதனால் மின்சார வாகன பயனாளிகள் சாலைகளில் செல்ல மற்றும் இயங்க சிறப்பு சலுகைகள் இருக்கும்.

Trending On DriveSpark Tamil:

காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் பெறக்கூடிய முக்கிய வசதிகள்!

பைக்கில் வந்தர்கள் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்... பதட்டம்!

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

தொடர்ந்து மின்சார வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்களில் பார்க்கிங் இலவசமாகும். தவிர, சுங்கச் சாவடிகளை கடக்கும் போது மின்சார வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

இதுபோன்ற பல சலுகைகளை மின்சார கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவிக்க மத்திய அரசின் நிதி ஆயோக் ஆலோசித்து வருகிறது.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

கூடவே, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் மின்சார வாகனங்களை நிறுத்து வைக்க பிரத்யேக இடம் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

மின்சார வாகனங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக விலை குறைப்பு, வரி குறைப்பு மற்றும் மானியங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

மக்களை மின்சார வாகனங்களை வாங்க ஊக்குவிக்க மத்திய அரசு எடுக்கும் இந்த முயற்சி நிச்சயம் வெற்றியடையும் என்பதே ஆட்டோ துறை வல்லுநர்களின் கருத்து.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, மின்சார வகான இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் 64 சதவீத எரிபொருளை சேமிக்க முடியும்.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

மத்திய அரசு விடாப்பிடியாக இருந்து பயனாளிகளை மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி திருப்பினால், 2030ம் ஆண்டிற்குள் வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசு அளவை 37 சதவீதம் வரை குறைக்க முடியும்.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

மின்சார வாகன பயன்பாட்டிற்கு பிறகு பெட்ரோல், டீசல் கட்டணங்களில் ரூ. 6000 கோடி அமெரிக்க டாலர்களை இந்திய அரசு சேமிக்க முடியும்.

Trending On DriveSpark Tamil:

பட்டபகலில் கத்தி முனையில் உரிமையாளரை மிரட்டி பஜாஜ் டோமினார் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்..!

இந்தியாவில் அம்பாஸிடர் காரை மீண்டும் அறிமுகம் செய்யும் முடிவில் பீஜோ..!!

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

நிதி ஆயோக்கின் திட்டப்படி, மின்சார வாகன பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்க இன்னும் கட்டமைப்பை பலப்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.

விரைவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்..!!

அதில் அரசு கவனம் செலுத்தினால், 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை ஒரளவிற்கு வெற்றிக்கரமாக நிலைநிறுத்த முடியும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: Nithi Ayog Thinks About To Give Special Privileges for Electric Vehicles In India. Click for Details...
Story first published: Tuesday, January 9, 2018, 11:00 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark