2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

உலகம் முழுவதும் புவி வெப்பமயமாகுதலை பற்றி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. புவி வெப்பமயமாகுதல் என்பது காற்றில் கலக்கும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவுகள்தான்.

பூமியில் பல்வேறு வகையில் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு கலந்தாலும், உலகம் முழுவதும் அதிக கார்பன் டை ஆக்ஸைடு கலப்பதற்கு முக்கிய காரணம் வாகன பயன்பாடுதான்.

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

ஒவ்வொரு வாகனங்களில் இருந்தும் வெளியாகும் புகை நேரடியாக காற்றில் கலக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் எல்லாம் முடிவு செய்தன. அதற்காக வாகனங்களுக்கு தடையோ அல்லது விற்பனைக்கு தடையோ, கட்டுப்பாடோ விதிக்க முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கு வாகன பயன்பாடு மிக முக்கியமானதாகும்.

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

இதனால் அனைத்து நாடுகளும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையின் அளவை கட்டுப்படுத்தும் வகையில் வாகன தயாரிப்பு மற்றும் எரிபொருள் தயாரிப்பில் சில விதிகளை கடைபிடிக்கின்றன.

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

அதன் படி இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அந்த அமைப்பு வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையின் அளவை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளை வகுத்து வருகிறது.

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு பிஎஸ் 3 என்ற விதிமுறை அமலில் இருந்த போது இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் மாசு அதிக அளவில் இருப்பதாகவும், அதை வரும் 10 ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்தவில்லை என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் மோசமான விளைவுகளை இந்தியா சந்திக்கும் என்றும் ஆய்வுகள் வெளியாகின.

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு 2017ம் ஆண்டு பிஎஸ் 4 விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதாகவும் மேலும் அது 2020 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும்,

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

2020ம் ஆண்டு பிஎஸ் 5 நடைமுறையை விட்டுவிட்டு நேரடியாக பிஎஸ் 6 நடைமுறையை அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டள்ளதாகவும் அறிவித்தது.

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

இதன் மூலம் இந்தியாவில் வாகனங்களல் ஏற்படும் மாசுவை பெரும் அளவில் கட்டுப்படுத்த முடியும் என அரசு நம்பியது. இந்தியாவில் மாசு அதிகரிக்க முக்கிய காரணம் அரசு எதிர்பார்த்தைவிட அதிக அளவிலான வாகனங்கள் இந்தியாவில் விற்பனையானதுதான்.

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

இதன் காரணமாக மாசுவும் அதிகரித்தது. தற்போது பிஎஸ் 5ஐ விட்டு விட்டு நேரடியாக பிஎஸ் 6ஐ செயல்படுத்தன் மூலம் இந்த அதிகமான எண்ணிக்கையில் நடக்கும் வாகன விற்பனையால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த முடியும் என கருதி இந்த முடிவை எடுத்தது.

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

இந்த பிஎஸ் 6 என்பது வெறும் வாகன தயாரிப்பிற்கு மட்டும் அல்ல. எரிபொருள் தயாரிப்பிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. எரிபொருளுக்கான ஆக்டேன் ஆளவும் இதில் உயர்த்தப்படும்.

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

இந்நிலையில் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வந்தது. இதில் 2017ல் பிஎஸ் 4 நடைமுறைக்கு வந்தது போலவே 2020ல் பிஎஸ் 6 நடைமுறைக்கு வரும். மாசு கட்டுப்பாட்டில் எந்த வித கரிசனமும் காட்ட முடியாது.

2020ல் பிஎஸ் 4 வாகன விற்பனை நிறுத்தம்..! பிஎஸ் 6 நடைமுறைக்கு வர அனுமதி: சுப்ரீம் கோர்ட்

2020ம் ஆண்டு ஏப் 1ம் தேதிக்கு பிறகு பிஎஸ் 4 ரக வாகனங்களையும், எரிபொருளையும் கட்டாயம் விற்பனை செய்யகூடாது. அன்று முதல் பிஎஸ் 6 ரக வாகனங்கள் மற்றும் எரிபொருள்தான் கண்டிப்பாக விற்பனையாக வேண்டும் என கூறியது.

Most Read Articles
English summary
Nomore bs4 vehicles from 2020 court order. Read in Tamil
Story first published: Thursday, October 25, 2018, 14:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X