ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றம் தந்த மத்திய பொது பட்ஜெட்!

Written By:

பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ஆட்டோமொபைல் துறையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல விஷயங்களை அறிவிப்பார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 

ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றம் தந்த மத்திய பொது பட்ஜெட்!

பெரு நகரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் விதத்தில் பெட்ரோல், டீசல் கார்களின் பயன்பாட்டை குறைத்து, மின்சார கார் பயன்பாட்டை ஊக்கும் விக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கும், ஊக்கம் அளிப்பதற்கு ஏதுவான திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றம் தந்த மத்திய பொது பட்ஜெட்!

ஆனால்,அதுகுறித்து எந்த அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இதனால், மின்சார கார் தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றம் தந்த மத்திய பொது பட்ஜெட்!

மின்சார கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் அளிப்பதற்கான FAME திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும், மின்சார கார்களுக்கு தற்போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றம் தந்த மத்திய பொது பட்ஜெட்!

ஆனால், அதுகுறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. மின்சார கார் உற்பத்தித் துறைக்கும் வரிச் சலுகை உள்ளிட்ட எந்த அம்சங்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால், மின்சார கார் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் கார் நிறுவனங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றம் தந்த மத்திய பொது பட்ஜெட்!

மேலும், மின்சார கார் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தால், டெஸ்லா உள்ளிட்ட வெளிநாட்டு மின்சார கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்திய சந்தையில் கால் பதிக்கும் வாய்ப்புகள் இருந்தது. அந்த வாய்ப்புகள் குறைந்துபோய் இருக்கிறது.

ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றம் தந்த மத்திய பொது பட்ஜெட்!

மின்சார கார் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு, வெளிநாட்டிலிருந்து மின்சார கார்களுக்கான மின்மோட்டாரை இறக்குமதி செய்யும்போது முதல் ஓர் ஆண்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், எதிர்பார்ப்பும் இருந்தது. அதுபற்றிய அறிவிப்பும் இல்லாதது, இந்த துறையில் புதிய நிறுவனங்கள் களமிறங்குவதற்கான வாய்ப்புகளை மங்கச் செய்துள்ளது.

ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றம் தந்த மத்திய பொது பட்ஜெட்!

இறக்குமதியாகும் கார்கள் மீதான மறைமுக வரிகளும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் சொகுசு கார்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுகுறித்தும் அறிவிப்பு இல்லை.

ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றம் தந்த மத்திய பொது பட்ஜெட்!

பொதுபட்ஜெட்டில் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மறைமுக தாக்கமாக இருசக்கர வாகன விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றம் தந்த மத்திய பொது பட்ஜெட்!

கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு உறுதுணையான திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவே கருதப்படுகிறது. குறிப்பாக, மின்சார வாகன உற்பத்திக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
பொது பட்ஜெட் 2018, மத்திய பட்ஜெட், மின்சார வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல் துறைக்கான திட்டங்கள்
Story first published: Thursday, February 1, 2018, 14:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark