ரூ 7.5 லட்சம் செலவில் புதிய லாம்போர்கினி; இந்தியர் அசத்தல்
ஜெப்பூரில் வெறும் 7.5 லட்சம் ரூபாயல் புதிய லாம்போர்கினி கார் தயார் செய்யப்பட்டுள்ளது அதை பற்றி உங்களுக்கு தெரியுமா? இவ்வளவு சீப்பான விலையில் எப்படி சூப்பர் கார் தயார் செய்ய முடியும் நினைக்கிறீர்களா ச
ஜெப்பூரில் வெறும் 7.5 லட்சம் ரூபாயல் புதிய லாம்போர்கினி கார் தயார் செய்யப்பட்டுள்ளது அதை பற்றி உங்களுக்கு தெரியுமா? இவ்வளவு சீப்பான விலையில் எப்படி சூப்பர் கார் தயார் செய்ய முடியும் நினைக்கிறீர்களா செய்தியை முழுமையாக படியுங்கள்

நீங்கள் உங்கள் காரில் சில மாடிஃபிகேஷன் செய்ய வேண்டும் என்றால் அப்படி என்ன செய்வீர்கள் அதிக வேகத்திற்காக இன்ஜினை டியூன் செய்வீர்கள், காரின் பின்பகுதியில் ஸ்பாய்லர்ஸ் பொருத்துவீர்கள், காரில் சில கிராபிக் டிசைன்கள், கார் அலாய் வீலில் சில டிசைன்கள் என ஒரு சில வகையான மாடிபிகேஷனை செய்திருப்பீர்கள்.

ஆனால் ஜெய்ப்பூரில் ஒருவர் தனது 2005 மாடல் ஹோண்டா சிட்டி காரை லாம்போர்கினி காராக மாற்றியுள்ளார். தெரியுமா? அச்சு அசலாக காட்சியாளிக்கும் இந்த காரில் லாம்போர்கினி ஆவேன்டேடார் என்ற மாடல் காரின் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லாம்போர்கினி காரில் உள்ளது போலவே எலக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பம்பர், காரின் பக்கவாட்டில் இருக்கூடிய ஸ்கிட்ஸ், க்ரவுண்ட் கிளியரன்ஸ் என எல்லாம் பக்காவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காரில் முக்கிய அம்சமாக லாம்போர்கினியில் உள்ள மேற்கூரையை பின்புறமாக எலெட்ரானிக் முறையில் மடித்து வைக்கும் வகையிலான வசதியும் இந்த காரில் உள்ளது. மேலும் ஒரிஜினல் லாம்போர்கினி ஆவேன்டேடாரில் உள்ளது போல சிஸர் டைப் டோர்கள் என இந்த காரில் உள்ள வசதியை கண்ட பலர் அசந்துவிட்டனர்.

இந்த காரில் இவ்வளவு மாடிஃபிகேஷன்னை செய்தது ஜெய்பூரை சேர்ந்த ஜீப் லவ்வர்ஸ் என்ற நிறுவனம் தான். கடும் உழைப்பிற்கு பிறகு இந்த மாடிபிகேஷனை செய்த இந்நிறுவனம் இதற்காக ஆன விலையை கேட்டால் நீங்கள் அசந்து போய் விடுவீர்கள்

வெறும் 7.5 லட்ச ரூபாக்கு இந்த மாடிபிகேஷனை மேற்கொண்டுள்ளனர். இவ்வளவு குறைந்த விலையில் லாம்போர்கினி போன்ற ஒரு மாடல் காரை இவ்வளவு நேர்த்தியாக வடிவமைப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை. இந்த கார் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அதை நீங்கள் கீழே காணலாம்.
வெறும் ரூ 7.5 செலவில் தயாரிக்கப்பட்ட இந்த லேம்போர்கினியில் அனைத்தும் ஒரிஜினல் லாம்போர்கினி காரை போலவே கொடுக்கப்பட்டுள்ளுது. ஒரிஜினல் காரின் காப்பி என்றே இந்த கூறலாம். ஹோண்டா சிட்டி காரை கொண்டுஇந்த கார் வடிவகைமக்ப்பட்டாலும் ஹோண்டா சிட்டி காரின் பெர்பாமென்ஷில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை. வெளிப்புறத்தோற்றத்தில் மட்டுமே மாற்றம் செய்துள்ளோம்.

இந்த காரை ரோட்டில் ஓட்டினால் ரோட்டில் போகும் அனைவரது கண்களும் அந்த கார் மீது தான். அவ்வளவு நேர்த்தியாக மாடிஃபிகேஷன் செய்தவர்களின் உழைப்பு நிச்சயம் பாராட்டிற்குரியதே.டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








