ஓலா பயணிகளை பாதுகாக்க புதிய பாடிகார்டு.... இனி ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது...
இந்தியாவில் சமீபகாலமாக செல்போன் ஆப் மூலம் இயங்கும் கேப் சர்வீஸ்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இந்தியாவில் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிற
இந்தியாவில் சமீபகாலமாக செல்போன் ஆப் மூலம் இயங்கும் கேப் சர்வீஸ்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இந்தியாவில் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் பெங்களூருவை மையமாக கொண்டு துவங்கப்பட்ட ஓலா என்ற நிறுவனம் இன்று அபார வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. விரைவில் நியூசிலாந்திலும் அதன் சேவையை விரிவாக்கம் செய்யவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் செல்போன் மூலம் புக் செய்யப்படும் கேப்களில் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் நிலவுவதாக செய்திகள் வரத்துவங்கியுள்ளன. முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதபடியான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

எனவே ஓலா நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓலா கார்டியன் என்ற புதிய தொழிற்நுட்பத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளது. இது பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பை கண்காணிக்கும். இது தற்போது சோதனை முயற்சியாக பெங்களூரு, மும்பை, புனே ஆகிய நகரங்களில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இது குறித்து ஓலா நிறுவனம் கூறுகையில்"இது முற்றிலும் செயற்கை நுண்ணறிவு கொண்டு கணினி முறையில் இயங்ககூடியது. தற்போது இதை டில்லி மற்றும் கொல்கத்தாவிலும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம். 2018ம் ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு விடும்.

இந்த ஓலா கார்டியன், நீங்கள் ஓலா ட்ரிப்பை கன்ஃபார்ம் செய்தவுடன் உங்கள் ட்ரிப்பை கண்காணிக்கும். ரூட்டில் மாறுதல் ஏற்பட்டாலோ, எதிர்பாராத விதமாக நடுவழியில் நின்றாலோ, பயணிக்கும் நேரம் குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்தாலோ உடனடியாக இது ஓலா பாதுகாப்பு குழுவிற்கு தெரியப்படுத்தும்.

அதன் பின் ஓலா ஆய்வுக்குழு இந்த செயற்கை நுண்ணறிவு தரும் தகவல்களை ஆய்வு செய்து நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நிலைமையை அறிந்து, வாடிக்கையாளர்களுக்கு உதவுவார்கள். இந்தியாவில் தற்போது கேப்ஸ் மத்தியில் சற்று பாதுகாப்பு இன்மை உணரப்படுகிறது. அதை மாற்றவும் கேப்ஸை பாதுகாப்பானதாக மக்களை உணர செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல் ஓலா நிறுவனம் மாநில அரசு மற்றும் போலீசாரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு இல்லாத ரூட்களை கணக்கெடுத்து வருகிறது. அந்த ரூட்களில் எல்லாம் கேப்ஸ்களில் உள்ள மேப்கள் வழி காட்டாது.

அந்த வழியாக வாகனங்கள் சென்றாலும், ஓலா கார்டியன் அதை கண்டறிந்து உடனடியாக ஓலா பாதுகாப்பு குழுவிற்கு தெரியப்படுத்தி விடும். இந்த ஓலா கார்டியன் என்ற தொழிற்நுட்பம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளின் செல்போன் ஆப்பில் எஸ்ஓஎஸ் பட்டனை அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய பலனை வழங்கியது. டிரைவர்கள் தவறாக நடக்க முயன்றாலோ அல்லது பயணிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்ந்தாலோ அவர்கள் அதை பயன்படுத்த முடியும்.

தற்போது ஓலா இவ்வாறான பாதுகாப்பு வசதிகளை அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? கடந்த சில நாட்களுக்கு முன் கை குழந்தையுடன் ஓலாவில் பயணித்த ஒரு குடும்பத்தினரை சிறிய பிரச்னை காரணமாக கொட்டும் மழையில் நடுரோட்டில் தவிக்க விட்டு இறங்கி சென்றுள்ளார். இது செய்தியாக வெளியாகி வைரலாகியது அது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications