பழைய வாகனங்களுக்கு விடைக்கொடுக்க விரைவில் வருகிறது வாகன ஸ்கிராப்பிங் கொள்கை ..!!

பழைய வாகனங்களுக்கு விடைக்கொடுக்க விரைவில் வருகிறது வாகன ஸ்கிராப்பிங் கொள்கை ..!!

By Azhagar

பழைய கார்களை ஸ்கிராப் செய்வதற்கான கொள்கை வரைவு தயார் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

பழைய மற்றும் மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் கொண்டுள்ள உரிமையாளர்கள், தங்களின் வாகனங்களை ஸ்கிராப் செய்து கொள்ள வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

அதன்படி மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் உட்பட 15 வருட பழைய வாகனங்களால் சுகாதார பாதிப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

இப்படி பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய துவங்கினால், சுற்றுப்புற சீர்கேடு மற்றும் சுகாதாரம் பாதிப்பு ஆகியவை நீங்கும் என மத்திய அரசு விரும்புகிறது.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான கொள்கை நடைமுறைக்கு வந்தால் புதிய வாகனங்கள் தயாரிப்பதற்கான செலவீனங்கள் குறையும்.

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

அதாவது இனி, புதிய வாகனங்கள் தயாரிக்க, பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ததன் மூலம் கிடைத்த உலோகம், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் ஃப்பைபர் போன்ற மூல பொருட்களை வைத்து உருவாக்கலாம்.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

இதற்காக இந்திய அரசு, வி-விஎம்பி அல்லது வால்யுன்டரி வெய்ஹிள் ஃப்லீட் மாடர்னைசேஷன் புரோக்ராம் (Voluntary Vehicle Fleet Modernisation Programme (V-VMP)) என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

நவீனமயமாக்கல் நோக்கத்திற்காக வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை அவர்களாகவே முன்வந்து ஸ்கிராப் செய்து கொள்வதே இத்திடத்தின் நோக்கம்.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

வி-விஎம்பி கொள்கை குறித்த அனைத்து வரையறைகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்பு பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டுள்ளதாக தெரிகிறது.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

2005ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன் மற்றும் பின் வாங்கப்பட்ட சுமார் 28 மில்லியன் அதாவது 2.80 கோடி வாகனங்கள் வி-விஎம்பி கொள்கையின் கீழ் ஸ்கிராப் செய்யப்படவுள்ளன.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்பட்டால், இந்தியளவில் சுமார் 65 சதவீத காற்று மாசு ஏற்படுவது குறையும் என்று கூறுகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

பழைய வாகனங்களின் உலோகங்கள் (மெட்டல்களை) ஸ்கிராப் செய்வதன் மூலம், ஒவ்வொரு வருடமும் 11,500 கோடி ரூபாய் மதிப்பிலான ரா மெட்டீரியல் எனப்படும் மூலப்பொருள்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

கிடைக்கப்பெற்ற மூலப்பொருட்களை வைத்து புதிய வாகனங்களை தயாரிக்கலாம். வி-விஎம்பி திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரூ. 10,000 கோடிக்கும் அதிகமான வரி வரும் என்பது மத்திய அரசின் கணக்கு.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

காற்று மாசை தடுக்க பழைய ரக வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கு ஆதரவு குவிந்து வருகிறது. ஆனால் இதிலும் ஒரு சோகமான செய்தியும் அடங்கியுள்ளது.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

அதாவது ஸ்கிராப் செய்ய தகுதியுள்ள வாகனங்களாக மத்திய அரசு கூறியுள்ள பட்டியலில் ஹோண்டா சிட்டி டைப் 2 வி-டெக், ஃபியட் பேலியோ எஸ்10, மாருதி சுஸுகி பலேனோ (செடான்) மற்றும் மாருதி 800 போன்ற கார்களும் அடக்கம்.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

நவீன வாகனங்களை காட்டிலும், பழைய வாகனங்கள் 10% முதல் 12% வரை அதிக மாசு வெளிபடுத்துபவையாக உள்ளன.

10 வருடங்களுக்கும் கூடுதலாக பழமையான வாகனங்கள் பிஎஸ்-1 மாசு விதிமுறைகளை மட்டுமே பின்பற்றுபவையாக இருக்கும்.

விரைந்து வரும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை: நிதின் கட்கரி

மாசு வெளிப்பாடு அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வாகனங்கள் நவீனமயமாக்கல் தொடர்பான திட்டங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே பல ஆட்டோ துறை ஆர்வலர்களின் கோரிக்கை.


சந்தைக்கு வர தயார் நிலையில் காட்சி தந்த புதிய மின்சார கார் மாடல்கள்!

சந்தைக்கு வர தயார் நிலையில் காட்சி தந்த புதிய மின்சார கார் மாடல்கள்!

இதுவரை இல்லாத அளவு இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான மின்சார கார் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. பார்வையாளர்களிடத்திலும் மின்சார கார்கள் மீதான ஆர்வம் அதிகம் இருந்ததை காண முடிந்தது. இந்த நிலையில், சந்தைக்கு தயார் நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

01. மஹிந்திரா இ-கேயூவி100

01. மஹிந்திரா இ-கேயூவி100

மஹிந்திரா நிறுவனத்தின் பட்ஜெட் எஸ்யூவி மாடலாக விற்பனையில் இருக்கும் கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. இந்த புதிய மின்சார கார் விற்பனைக்கு தயாரான நிலைக்கு ஏற்ற அம்சங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஜிபிஎஸ் டிராக்கிங், ஏசியை வெளியிலிருந்து கட்டுப்படுத்தும் வசதி உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

சந்தைக்கு வர தயார் நிலையில் காட்சி தந்த புதிய மின்சார கார் மாடல்கள்!

புதிய மஹிந்திரா கேயூவி100 மின்சார மாடலில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் பயணிக்க முடியும். குயிக் சார்ஜர் மூலமாக ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஆகும் வசதியும் இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தனிநபர் மார்க்கெட்டை குறிவைத்து வர இருக்கும் முதல் எஸ்யூவி மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.

02. மஹிந்திரா இ2ஓ நெக்ஸ்ட்

02. மஹிந்திரா இ2ஓ நெக்ஸ்ட்

மஹிந்திரா இ2ஓ மின்சார காரின் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் இந்த இ2ஓ நெக்ஸ்ட். வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய ஹெட்லைட் அமைப்பு, க்ரில் அமைப்பு மற்றும் புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அத்துடன், சற்றே பெரிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

சந்தைக்கு வர தயார் நிலையில் காட்சி தந்த புதிய மின்சார கார் மாடல்கள்!

4 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட மஹிந்திரா இ2ஓ நெக்ஸ்ட் காரில் 3 பேஸ் இன்டக்ஷன் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் 19kW சக்தியையும், 70 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த காரின் 15kW பேட்டரியானது 140 கிமீ தூரம் பயணிப்பதற்கான திறனை வழங்குகிறது. மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும். தற்போதைய மாடலின் விலையை விட சற்றே கூடுதலாக வர வாய்ப்புள்ளது.

03. டாடா டியோகா இவி

03. டாடா டியோகா இவி

ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய கார் நிறுவனம் என்றால் அது டாடா மோட்டார்ஸ்தான். அடுத்த தலைமுறை கார்களுக்கான கான்செப்ட் மாடல்கள், கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார்கள் மட்டுமின்றி, புதிய மின்சார மாடல்களை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. டாடா மோட்டார்ஸ் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா டியாகோ காரின் மின்சார மாடல் எல்லோரையும் பெரிதும் கவர்ந்தது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

சந்தைக்கு வர தயார் நிலையில் காட்சி தந்த புதிய மின்சார கார் மாடல்கள்!

தயாரிப்பு நிலைக்கு ஏற்றதாக நிறுத்தப்பட்டிருந்த இந்த கார் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்த கார் ஏற்கனவே இங்கிலாந்தில் வைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டது குறித்த தகவல்கள் வந்தன. இந்த சூழலில் டாடா டியாகோ காரின் மின்சார மாடல் விரைவில் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ரூ.8 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

04. டாடா டீகோர் இவி

04. டாடா டீகோர் இவி

டாடா டீகோர் காரின் மின்சார மாடலும் ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்தது. குஜராத் மாநிலம் சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டார்ஸ் கார் ஆலையில் இந்த புதிய மின்சார காரின் உற்பத்தி ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது நினைவிருக்கலாம்.

சந்தைக்கு வர தயார் நிலையில் காட்சி தந்த புதிய மின்சார கார் மாடல்கள்!

முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்படும் டாடா டீகோர் மின்சார கார்கள் மத்திய அரசுத் துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் பயன்பாட்டிற்காக சப்ளை செய்யப்பட இருக்கின்றன. முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதைத்தொடர்ந்து, தனிநபர் பயன்பாட்டிற்கும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

05. யுனிட்டி ஒன்

05. யுனிட்டி ஒன்

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் யுனிட்டி ஒன் என்ற மின்சார கார். நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சத்தை பெற்றிருக்கும் இந்த மாடல் 2 சீட்டர் மற்றும் 5 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் ரூ.71.4 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது

சந்தைக்கு வர தயார் நிலையில் காட்சி தந்த புதிய மின்சார கார் மாடல்கள்!

இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். 2 சீட்டர் மாடல் 2019ம் ஆண்டிலும், 5 சீட்டர் மாடல் 2020ம் ஆண்டிலும் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.1,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

06. ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி

06. ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி

ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த ஹூண்டாய் கோனா எஸ்யூவியின் மின்சார மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் 27ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், கோனா எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டது தெரிந்தது. இந்த நிலையில், ஹூண்டாய் கோனா எஸ்யூவியின் மின்சார மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கு முன்னோட்டமாக மின்சார மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சந்தைக்கு வர தயார் நிலையில் காட்சி தந்த புதிய மின்சார கார் மாடல்கள்!

புதிய ஹூண்டாய் கோனா எஸ்யூவிக்கான பேட்டரி, மின்மோட்டார், டிரான்ஸ்மிஷன் போன்ற முக்கிய பாகங்களை எல்ஜி நிறுவனம் சப்ளை செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது ஹூண்டாய் கோனா எஸ்யூவி. ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Old Cars Scrapping Policy Almost Complete Says Union Transport Minister, Nitin Gadkari. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X