மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

இந்தியாவில் விற்பனையாகி பெரிய ஹிட் ஆகிய கார்களின் பெயர்களை மீண்டும் தங்களது புதிய கார்களின் பெயராக பயன்படுத்த பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது. சில நிறுவனங்கள் பழைய காரின் மாடலிலேயே சில மாற்றங்க

By Balasubramanian

இந்தியாவில் விற்பனையாகி பெரிய ஹிட் ஆகிய கார்களின் பெயர்களை மீண்டும் தங்களது புதிய கார்களின் பெயராக பயன்படுத்த பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது. சில நிறுவனங்கள் பழைய காரின் மாடலிலேயே சில மாற்றங்களை செய்து மீண்டும் ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறது. இந்த வகையில் இந்த செய்தியில் மீண்டும் புத்துயிர் பெற்று புதிய காராக வரவுள்ள பழைய கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

ஹூண்டாய் இயான் - சாண்ட்ரோ

ஹூண்டாய் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் இயான் காரின் விற்பனையை கூடிய விரைவில் நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் பழைய சான்ட்ரோ காரின் பெயரின் அந்நிறுவனம் தயாரித்துள்ள இதே கேட்டரிகரி காருக்கு அந்த பெயரை வைத்து மீண்டும் வரும் அக். 23ம் தேதி அறிமுகப்படுத்த வுள்ளது.

மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

இந்த கார் 1.1 லிட்டர் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் இயான் காரை விட பெரியதாகவும் எல்லா வகையிலும் சிறந்ததாகவும் இருகஅகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூ 3.5 லட்சம் முதல் 5.5 லட்சம் வரை விற்பனையாகும் எனவும் எதிர்பார்க்கலாம்.

மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

பழைய மாருதி எர்டிகா - புதிய மாருதி எர்டிகா

மாருதி நிறுவனத்தில் எர்டிகா கார் ஒரு சிறந்த தயாரிப்பு இந்த கார் முதன் முதலாக அறிமுகமாகும் போது இந்த காருக்கு போட்டியாக எந்த காரும் இல்லை. தற்போதும் ஒரு சில கார்களே உள்ளன. தற்போது அந்நிறுவனம் எர்டிகா காருக்கு புத்துயிர் கொடுக்க விரும்புகிறது. புதிய ஹெட்லைட், கிரில்,, மாற்றியமைக்கப்பட்ட பம்பர், ஆகிய பழைய காரில் இருந்து மாற்றம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

மேலும் காரின் உட்புறத்தை பொருத்தவரை டச் ஸ்கிரீஸ் இன்ஃபோடெயின்மென்ட், அதிகமான கேபின் வசதி, ஆகியன இடம் பெரும் என எதிர்பார்க்கலாம் பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை அதே பழைய காரில் உள்ள 1.4 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினும், டீசல் இன்ஜினை பொருத்தவரை பழைய காரில் இருந்த 1.3 லிட்டர் இன்ஜினிற்கு பதிலாக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் வரும் அக்.மாதம் விற்பனைக்கு வரலாம் எனவும், ரூ 6.5 லட்சம் என்ற மதிப்பில் இதன் விலை துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

பழைய ஹோண்டா சிஆர்-வி - புதிய 7 சீட்டர் சிஆர்-வி

ஹோண்டா சிவிக் தயாரிக்கப்படும் அதே பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் கார் தான் இந்த ஹோண்டா சிஆர்-வி. இந்த காரை புதிய வடிவில் 7 சீட்டர் காராக மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. காரின் வெளிப்புறத்தோற்றம் அதே மாதிரியாக இருந்தாலும் அதன் உட்புறத்தில் பெரிய க்ரோம் பாரை வைத்து அதன் ஒட்டு மொத்த லுக்கையுமே மாற்றியுள்ளது.

மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

இந்த காரில் புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல் ஆகியன பொருத்தப்பட்டுள்ளது. புதிய சிஆர்வி காரின் இன்ஜினை பொருத்தவரை 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 120 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும், டீசல் இன்ஜினாக 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 154 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் இது பொருத்தப்படுகிறது. இதன் டீசல் கார் ஆல்வீல் டிரைவாகவும், பெட்ரோல் கார் 2 வீல் டிரைவ்வாகவும் காட்சியளிக்கிறது. இந்த கார் வரும் அக். மாதம் ரூ 27 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

பழைய மாருதி வேகன் ஆர் - ஆல் - நியூ வேகன் ஆர்

இந்த செக்மெண்ட்டில் நீண்ட நாட்கள் விற்பனையில் இருந்த கார் இந்த கார் புதிய மாடல் உடன் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய காரை பொருத்தவரை அதே டால் பாய் டிசைன் தான். ஆனால் பழைய காரை விட அதிக கேபின் வசதி, அதிக பூவர் வசதி, மற்றும் எல்.இ.டி ஹெட்லைட், புதிய இன்ட்டிரீயர் தீம் மற்றம் டேஷ் போர்வு ஆகியன எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

இந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்உடன் 67 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இது புதிய ஹூண்டாய் சான்டரோ காருக்கு போட்டியாக வெளியாகவுள்ளது. இந்த கார் ரூ 4.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

பழைய மாருதி ஆல்டோ - புதிய ஆல்டோ

தற்போது விற்பனையாகும் ஆல்டோ கார் 2020ம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ் 6 எமிஷன் கட்டுப்பாட்டிற்கு பிறகு விற்பனை செய்யமுடியாது. இதனால் அந்நிறுவனம் புதிய மாடல் ஆல்டோ காரை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

மறுபிறவி எடுக்கும் பழைய கார்கள்... மீண்டும் மார்கெட்டை கலக்க போவது யார்?

மாருதி நிறுவனம் 660 சிசி திறன் கொண்ட ஒரு இன்ஜினை தயாரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த இன்ஜின் 51 பிஎச்பி பவரையும், 63 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துமாம். இந்த இன்ஜின் பிஎஸ் 6 கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வடிவமைக்கப்படும்.இந்த கார் அடுத்தாண்டு பிப்.,மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

English summary
some old cars are going to get it's new Face as new cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X