மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை... வசூல் வேட்டையில் களமிறங்கிய போலீசார்

மோடி மற்றும் அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மோடி மற்றும் அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

இந்தியாவில் சாலை விபத்துக்கள் என்பது சர்வ சாதாரணமான ஒரு நிகழ்வாகி விட்டது. இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக, ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

இதனால் சாலை விபத்துக்களின் காரணமாக, உலகிலேயே அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இன்று இந்தியா உருவெடுத்து நிற்கிறது. பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததே விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

இந்தியாவை பொறுத்த மட்டில், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதும் சர்வ சாதாரணம். பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு, இந்த 2 போக்குவரத்து விதி மீறல்கள்தான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

இதுதவிர வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பு உபகரணங்களை, இந்திய மக்கள் சரியாக உபயோகப்படுத்துகிறார்களா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் சொல்லியாக வேண்டும்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சீட் பெல்ட். இந்திய மக்கள் பெரும்பாலானோர், காரில் பயணிக்கும்போது, சீட் பெல்ட் அணிவதே இல்லை. உண்மையை சொல்வதென்றால், சீட் பெல்ட்டின் முக்கியத்துவம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

விபத்து நேரும் சமயங்களில், காரில் பயணிப்பவர்களின் உயிரை சீட் பெல்ட் காக்கும். ஒருவேளை விபத்து நடைபெறும் நேரத்தில், சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்து, உயிரிழப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சீட் பெல்ட்டை, இந்தியாவில் பெரும்பாலானோர் பயணங்களின்போது பயன்படுத்துவதே கிடையாது. சீட் பெல்ட் அணியாமல் இருப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களும், சற்று வித்தியாசமான ரகத்தை சேர்ந்தவைதான்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

நாங்கள் சிறிது தூரம்தான் பயணிக்க போகிறோம். அதற்குள் என்ன ஆகிவிடப்போகிறது? என்பதே பலரின் எண்ணமாக உள்ளது. ஆனால் விபத்து என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதனால்தான் அதற்கு விபத்து என பெயர். என்றாலும் பலர் இதனை புரிந்து கொள்வதே இல்லை.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

இதுதவிர சீட் பெல்ட் அணிவதால் அசௌகரியமாக உணர்வதாகவும் சிலர் கூறி வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அவ்வாறான தண்டனைகள் எதுவும் வழங்கப்படுவது கிடையாது.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

அத்துடன் டிரைவர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என்கிற தவறான கருத்தும் இந்தியாவில் நிலவி வருகிறது. ஆனால் இது உண்மையல்ல. பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதி இந்தியாவில் உள்ளது.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

ஆனால் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்கள் மீது, பெரிய அளவிலான நடவடிக்கைகள் எதுவும் இந்தியாவில் எடுக்கப்படுவது இல்லை. இங்கு சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதற்கு இதுவும் மிக முக்கியமான காரணம்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

எனவே சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே நாடு முழுவதும் ஆங்காங்கே போலீசார் வாகன தணிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

இந்த சூழலில், மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு நடவடிக்கைகளில் நெடுஞ்சாலை பாதுகாப்பு ரோந்து பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்பின் அக்டோபர் மாதம் முதல் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை, அதாவது கடந்த 3 மாத காலத்தில், சீட் பெல்ட் அணியாத 6,608 கார் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த 6,608 கார் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், பின் இருக்கையில் பயணித்தவர்களை, சீட் பெல்ட் அணியும்படி வலியுறுத்தாத கார் டிரைவர்களும் அடங்குவர்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

ஒவ்வொரு கார் டிரைவருக்கும் தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி 6,608 கார் டிரைவர்களிடம் இருந்து மொத்தம் 13,21,600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் இனி நாடு முழுவதும் எடுக்கப்படும்'' என்றனர்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

திரையுலகை கடந்து அனைவர் மத்தியிலும் நற்பெயர் எடுத்துள்ள தல அஜீத்குமாருடன் அவரது ரசிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வைரலாக பரவியது. இந்த படத்தில் தல அஜீத் காருக்குள் அமர்ந்திருந்தார். அவரது ரசிகர் வெளியே நின்று கொண்டிருந்தார்.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

அப்போது தல அஜீத் சீட் பெல்ட் அணிந்திருந்ததை தெளிவாக பார்க்க முடிந்தது. இதேபோல் காரில் ஏறிய உடன் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்வார்? என்ற வீடியோ ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

இதில், காரில் ஏறிய உடனேயே பிரதமர் நரேந்திர மோடி சீட் பெல்ட் அணியும் காட்சிகள் பதிவாகியிருந்தது. பத்திரிக்கை தகவல் பணியகம் என்ற அமைப்பு இந்த வீடியோவை வெளியிட்டு, சீட் பெல்ட் அணியும்படி அனைவரையும் வலியுறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடி, அஜீத் போல் செய்யாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்...

அஜீத், மோடி போன்ற பிரபலமான மனிதர்களின் சிறு சிறு நடவடிக்கைகளின் மூலம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் பலர் சீட் பெல்ட் அணிவதில்லை. ஆனால் இனி சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Over 6,000 Car Drivers Fined For Ignoring Seat Belt Rule On The Mumbai-Pune Expressway. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X