ரூ 122 கோடியில் உலகின் விலை உயர்ந்த கார் அறிமுகம்; அப்படி என்னதான் இருக்கு அந்த காரில் ?

ரூ 122 கோடியில் உலகிலேயே மிக விலை உயர்ந்த காரான பகானி ஸ்சோண்டா எச்பி பார்செட்டா என்ற கார் அறிமுகமாகியுள்ளது. உலகிலேயே மொத்தம் 3 கார்கள் தான் தயாரிக்கப்படவுள்ளது.

By Balasubramanian

ரூ 122 கோடியில் உலகிலேயே மிக விலை உயர்ந்த காரான பகானி ஸ்சோண்டா எச்பி பார்செட்டா என்ற கார் அறிமுகமாகியுள்ளது. உலகிலேயே மொத்தம் 3 கார்கள் தான் தயாரிக்கப்படவுள்ளது. அந்த 3 கார்களும் விற்பனையாகிவிட்டன. 3.1 நொடியில் 0-100 கி.மீ. வேகத்தை பிக்கப் செய்யக்கூடிய வகையில் இந்த காரின் இன்ஜின் திறன் உள்ளது.

ரூ 122 கோடியில் உலகின் விலை உயர்ந்த கார் அறிமுகம்; அப்படி என்னதான் இருக்கு அந்த காரில் ?

இத்தாலி நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமான பகானி ஆட்டோமொபிலி என்ற நிறுவனம் பகானி ஸோண்டா எச்பி பார்செட்டா என்ற உலகின் அதிக விலை காரை இங்கிலாந்தில் குட்வுட் பெஸ்டிவல் ஆப் ஸ்பீடு என்ற ரேஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது.

ரூ 122 கோடியில் உலகின் விலை உயர்ந்த கார் அறிமுகம்; அப்படி என்னதான் இருக்கு அந்த காரில் ?

இந்த காரின் விலை தற்போது 13.5 மில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் இந்திய மதிப்பு சுமார் ரூ 122 கோடியாகும். சுமார் 800 பிஎஸ் பவர் கொண்ட இந்த ஹைப்பர் கார் உலகிலேயே அதிக விலை உள்ள காராக கருதப்படுகிறது.

ரூ 122 கோடியில் உலகின் விலை உயர்ந்த கார் அறிமுகம்; அப்படி என்னதான் இருக்கு அந்த காரில் ?

இந்த கார் உலகிலேயே மொத்தம் 3 கார்களை மட்டும் தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த 3 கார்களும் தற்போது விற்பனையாகிவிட்டன. இந்த பகானி ஸோண்டா எச்பி பார்செட்டா காரில் நடுத்தர பவர் கொண்ட இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது.

ரூ 122 கோடியில் உலகின் விலை உயர்ந்த கார் அறிமுகம்; அப்படி என்னதான் இருக்கு அந்த காரில் ?

இந்த காரின் ரூப் எதுவும் இல்லாமல் ரூப்லெஸ் ஆப்ஷனாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான காற்றை பெற்று கொண்டே காரில் பயணிக்க விரும்புபவர்கள் மட்டும் இந்த காரை பயன்படுத்த முடியும். ரூப்கள் ஒரு ஆப்ஷனாக கூட இந்த காரில் வழங்கப்படுவதில்லை.

ரூ 122 கோடியில் உலகின் விலை உயர்ந்த கார் அறிமுகம்; அப்படி என்னதான் இருக்கு அந்த காரில் ?

இந்த காரின் சிறப்பு அம்சம் என்றால் சிறிய விண்ட் ஸில்டு பொருத்தப்பட்டுள்ளது. கார்பன் டைட்டானியம் காம்போசைட் காம்போனென்ட்ஸ் கொண்டு வடிவைமக்கப்பட்டுள்ளது. இந்த கார்களின் வீல்களும் கான்ட்ரஸ்ட் கலரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் இடது பக்க வல் சில்வர் கலரிலும், வலது பக்க வீல் நீல நிறத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை ஹைப்பர் டிசைனனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மெர்ஸிடியஸ் ஏஎம்ஜி எம் 120 காரில் உள்ள 7.3 லிட்டர் வி 12 நேச்சுரல் அஸ்பர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பின் 640 பிஎஸ் பவரை வெளிப்படுத்துகிறது. இந்த காரின் மொத்த எடை 1250 கிலோ மேலும் இந்த காரில் 0-100 கி.மீ. வேகத்தை வெறும் 3.1 நொடியில் எட்டி விடும்.

ரூ 122 கோடியில் உலகின் விலை உயர்ந்த கார் அறிமுகம்; அப்படி என்னதான் இருக்கு அந்த காரில் ?

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சஸ்பென்ஸனை பொருத்தவரை 4 வீல்களுக்கு தனிதனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் காயில் ஸ்பிரிங் உடன் கூடிய அப்பர் ராக்கர் ஆர்ம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான ஒலின்ஸ் ஷாக்ஸ், அன்டி ரோல்பார், மற்றும் 380 மிமீ வென்டிலேட்ட் டிஸ்க் பிரேக்ஸ், முன்பக்கம் 6 பிஸ்டன் கேலிபர்ஸ், பின்பக்கம் 4 பிஸ்டர் கேலிபர்ஸ் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.

ரூ 122 கோடியில் உலகின் விலை உயர்ந்த கார் அறிமுகம்; அப்படி என்னதான் இருக்கு அந்த காரில் ?

உலகிலேயே மொத்தமே இந்த மாதிரியான கார் மொத்தம் 3 தான் தயாரிக்கப்படுகிறது. அதற்கான விற்பனையும் முடிந்து விட்டது. காரை டெலிவரி செய்ய வேண்டியது தான் பாக்கி .

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, July 25, 2018, 16:28 [IST]
English summary
At Rs 122 crore, Pagani introduces worlds most expensive car. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+