பயணித்த தூரத்திற்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கும் புதிய முறை!!

Written By:

பயண தூரத்தை கணக்கிட்டு அதற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் புதிய முறை விரைவில் சோதனை அடிப்படையில் அமலுக்கு வர இருக்கிறது.

பயன்படுத்திய தூரத்திற்கு மட்டுமே சுங்க கட்டணம்: புதிய திட்டம்!!

நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலீடு மற்றும் தூரத்தின் அடிப்படையில் இந்த சுங்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

பயன்படுத்திய தூரத்திற்கு மட்டுமே சுங்க கட்டணம்: புதிய திட்டம்!!

இந்த நிலையில், பயணிக்கும் தூரத்தை மட்டும் கணக்கிட்டு, அதற்குரிய சுங்கக் கட்டணத்தை செலுத்தும் முறையை டெல்லி- மும்பை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சோதனை அடிப்படையில் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லி- மும்பை இடையே இயக்கப்படும் சில டிரக்குகளில் இந்த கட்டண முறைக்கான சாதனங்கள் நிறுவப்பட்டு சோதனைகள் நடக்கின்றன. மேலும், இந்த டிரக்குகளுக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக கணக்கில் இருந்து கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும்.

பயன்படுத்திய தூரத்திற்கு மட்டுமே சுங்க கட்டணம்: புதிய திட்டம்!!

ஒருவேளை, கணக்கில் இருந்து ஆன்லைன் முறையில் பணம் எடுக்கப்படாவிட்டடால், டோல்கேட் பணியாளர்களுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும். அந்த டோல்கேட்டில் சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். ஓர் ஆண்டு காலத்திற்கு இந்த சுங்க கட்டண வசூல் முறை சோதனை செய்யப்பட இருக்கிறது.

பயன்படுத்திய தூரத்திற்கு மட்டுமே சுங்க கட்டணம்: புதிய திட்டம்!!

இது நடைமுறையில் வெற்றிபெற்றால், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இதே முறை பின்பற்றி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
NHAI to Launch Pilot Project for Implementation of “Pay as You Use” Tolling on Delhi-Mumbai Highway
Story first published: Saturday, April 14, 2018, 16:07 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark