ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல!

ராங் சைடில் வந்த கார் ஒன்றை சரமாரியாக தாக்கி உண்டு இல்லை என்றாக்கிய பாதசாரி ஒருவரின் வீடியோ, பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராங் சைடில் வந்த கார் ஒன்றை சரமாரியாக தாக்கி உண்டு இல்லை என்றாக்கிய பாதசாரி ஒருவரின் வீடியோ, பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள் ராங் சைடில் (Wrong-side) வாகனம் இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். விரைவாக செல்ல வேண்டும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ள கூடாது என்பது போன்ற காரணங்களுக்காகதான் அவர்கள் ராங் சைடில் பயணம் செய்கின்றனர்.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

எதிரே வரும் வாகனத்துடன் நேருக்கு நேராக மோதி விடக்கூடிய அபாயம் உள்ளது என்பதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல் தொடர்ச்சியாக பலர் ராங் சைடில் வாகனங்களை இயக்கி கொண்டுதான் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படபோவதில்லை.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

சரியான திசையில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. ஆனால் ராங் சைடில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இம்மியளவுக்கும் கூட அதனை பொருட்படுத்துவதே இல்லை.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

இந்த சூழலில் கோவா மாநில தலைநகர் பனாஜியில் உள்ள ஒரு சாலையில், மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் ஒன்று ராங் சைடில் வந்தது. இதனை கண்ட பாதசாரி ஒருவர் மிக கடுமையாக ஆத்திரமடைந்தார். உடனடியாக சாலையின் நடுவே சென்ற அவர், ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காரை வழிமறித்து நிறுத்தினார்.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

சம்பவம் நடைபெற்ற சாலையில் நிரந்தரமான டிவைடர் எதுவும் இல்லை. ஆனால் அனைத்து வாகனங்களும் அதனதன் லேன்களில் சரியாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக சாலையின் நடுவில் ஆங்காங்கே சற்றே இடைவெளி விட்டு கூம்புகள் மட்டும் வைக்கப்பட்டிருந்தன.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

முன்னதாக ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காரை பின்னோக்கி செல்லும்படி அந்த பாதசாரி கூறினார். அப்போது எதிர் திசையில் ஒரு கார் வந்தது. உடனே அந்த காரை முன்னோக்கி வரும்படி அந்த பாதசாரி வலியுறுத்தினார்.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காருக்கான வழியை அடைக்க வேண்டும் என்பதற்காகவே எதிர் திசையில் வந்த காரை முன்னோக்கி கொண்டு வந்து நிறுத்தும்படி அந்த பாதசாரி கூறினார். ஆனால் எதிர் திசையில் வந்த காரின் டிரைவருக்கு சற்றே தயக்கம் இருந்திருக்கலாம் என தெரிகிறது.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

அவர் காரை முன்னோக்கி செலுத்தவில்லை. அப்படியே காரை நிறுத்தி கொண்டார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த பாதசாரி, ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காரை தனது கைகளாலும், கால்களாலும் சரமாரியாக தாக்க தொடங்கினார்.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

இதனால் ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காரின் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ரிவர்ஸ் கியர் போட்டு காரை பின்னோக்கி செலுத்தினார். இதன் காரணமாக கூம்புகளுக்கும், எதிரே வந்து நின்று கொண்டிருந்த காருக்கும் இடையே சற்று இடைவெளி கிடைத்தது.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

இதனை பயன்படுத்தி கொண்டு அந்த ஸ்விப்ட் காரின் டிரைவர் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால் ஸ்விப்ட் கார் அங்கிருந்து செல்லும் வரை, அந்த பாதசாரி அதனை தாக்கி கொண்டேதான் இருந்தார். இந்த சம்பவங்கள் எல்லாம் எதிரே வந்த காரின் டேஷ் போர்டு கேமராவில் பதிவாகியிருந்தன. கிரன் சிட்னிஸ் என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

நகர பகுதிகளில் உள்ள சாலைகள் ஆகட்டும் அல்லது தேசிய நெடுஞ்சாலைகள் ஆகட்டும் ராங் சைடில் பயணிப்பது என்பது இந்தியாவில் ஒரு பொதுவான விஷயமாகவே மாறிவிட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக ராங் சைடில் வரும் வாகனங்களால் விபத்து நிகழ்ந்து உயிர் பலி ஏற்படுகிறது.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

அதே நேரத்தில் நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் ராங் சைடில் வரும் வாகனங்களினால் போக்குவரத்து நெரிசலும், தேவையில்லாத குழப்பமும் ஏற்படுகிறது. சில சமயங்களில் ராங் சைடு வாகனங்களால் போக்குவரத்து அப்படியே ஸ்தம்பித்து நின்று விடுகிறது.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

ராங் சைடில் செல்வதன் மூலமாக நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் ராங் சைடில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிக்கும், எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கும் அது பாதுகாப்பானது அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

ராங் சைடில் பயணம் செய்வது என்பது இந்தியாவில் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. எனவே ராங் சைடில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்தை நமது சட்டம் போலீசாருக்கு வழங்கியுள்ளது.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

ஆனால் மிக அதிக அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படுவது கிடையாது. அத்துடன் ஒரு சில போலீசார் பணத்தை பெற்று கொண்டு, ராங் சைடில் வரும் வாகன ஓட்டிகளை அனுப்பி விடுகின்றனர். இது போன்ற காரணங்களால்தான் தொடர்ந்து பலர் ராங் சைடில் வாகனங்களை இயக்கி கொண்டே உள்ளனர்.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

ராங் சைடில் வரும் வாகனங்களால், வாகன ஓட்டிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட வீடியோவில் கண்ட பாதசாரியே மிகுந்த ஆத்திரத்தில்தான் இருந்தார். அந்த நேரத்தில் ஸ்விப்ட் காரில் இருந்தவர்கள் வெளியே வந்திருந்தால் ஒருவேளை கைகலப்பு நிகழ்ந்திருக்க கூடும்.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படியான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. என்றாலும் கடந்த சில மாதங்களுக்கு முன், ராங் சைடில் வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தியதால், இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட விபரீதம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

மஹிந்திரா தார் கார் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் ராங் சைடில் வந்து கொண்டிருந்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் அந்த மஹிந்திரா தார் காரை தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மஹிந்திரா தார் டிரைவர், காரை விட்டு இறங்கி வந்து, இரு சக்கர வாகன ஓட்டியை தாக்க தொடங்கினார்.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

எனினும் தவறை தட்டிக்கேட்ட அந்த இரு சக்கர வாகன ஓட்டிக்கு உதவி செய்ய ஒருவர் கூட முன்வரவில்லை என்பதுதான் துரதிருஷ்டம். ஆனால் நல்ல வேளையாக கோவாவில் ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காரை தடுத்து நிறுத்திய பாதசாரிக்கு அவ்வாறான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

இதர வாகன ஓட்டிகளுடனான தேவையில்லாத வாக்குவாதம், கைகலப்புகளுக்கும் கூட ராங் சைடு டிரைவிங் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்பதை இந்த சம்பவங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே ராங் சைடில் பயணம் செய்வதை நிறுத்தினால் இது போன்ற பிரச்னைகளையும் தவிர்த்து விட முடியும்.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

அத்துடன் போலீசார் விதிக்கும் அபராதங்களில் இருந்தும் தப்பித்து விடலாம். ஆம், உண்மைதான். சாலையில் சண்டையிட்டு கொள்ளும் வாகன ஓட்டிகளால் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே அவ்வாறான வாகன ஓட்டிகளின் புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் போலீசாருக்கு அனுப்பலாம்.

ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல..

அதன்பின் அந்த புகைப்படங்கள் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்திவிட்டு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பர். இந்தியாவின் சில மாநிலங்களில் மட்டும் தற்போது இந்த நடைமுறை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

புதிய மாருதி ஸ்விப்ட்-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Pedestrian Attacks a Maruti Suzuki Swift Car For Driving On The Wrong-side In Goa. Read in Tamil
Story first published: Saturday, October 27, 2018, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X