கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

கடந்த சில நாட்களுக்கு முன் டில்லியில் ஓடும் வாகனங்கள் எந்த ரக எரிபொருளில் இயங்குகிறது என்பதை குறிக்கும் வண்ணம் ஹாலோகிராம் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

டில்லியில் ஏற்படும் காற்று மாசு காரணமாக அரசு மீது தொடரப்பட்ட வழக்கில் அரசு அளித்த விளக்கங்களை ஏற்று இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

அதன் படி இளநீல கலர் ஸ்டிக்கர்களை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கும், ஆரஞ்ச நிற ஸ்டிக்கர்களை டீசல் வாகனங்களுக்கும் ஒட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

இது கடந்த அக். 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆலோசனையை முதலில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைதான் கோர்ட்டில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி வழங்கியிருந்தது.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காற்று மாசு காரணமாக அரசு மீது வழக்கு தொடர்ந்த வக்கீல் அபரஜித்சிங் இந்த ஹாலோகிராம் ஸ்டிக்கர் உத்தரவு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என வாதிட்டார்.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, இந்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும், இதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தது.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

இதையடுத்து கோர்ட் இன்னும் இரண்டு வாரத்திற்குள் இந்த உத்தரவில் மாற்றம் செய்யப்பட வேண்டியவற்றை குறித்து மனு தாக்கல் செய்ய கூறி உத்தரவிட்டது.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

டொயோட்டா நிறுவனம் தற்போது ஹைபிரிட் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த ரக கார்களுக்கு எந்த கலர் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்ற விளக்கம் இந்த தீர்ப்பில் இல்லை.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

இது பெட்ரோல் கார் என்றோ டீசல் கார் என்றோ வகைப்படுத்த முடியாது. இது ஹைபிரிட் கார் வகையாகும். இதனால் இதில் என்ன கலர் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

அதற்கு முந்திய மனுவில் அரசு தரப்பில் கார்களுக்கு கலர் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்ற திட்டத்தை அரசு வரவேற்பதாக அறிவித்திருந்தது. இதன் மூலம் எளிதாக அதிக மாசுவை ஏற்படுத்தும் கார்களை கண்டறிய முடியும் எனவும் அரசு கூறியிருந்தது.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

கோர்ட் உத்தரவிட்டுள்ள ஸ்டிக்கரின் படி அதில் காரின் பதிவு செய்யப்பட்ட எண் பிரிண்ட் ஆகியிருக்க வேண்டும் என்பதால் காரின் வயதையும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

இதே போன்று கலர் கோடு ஸ்டிக்கர் பாரீஸில் கடைபிடிக்கப்படுகிறது. அதன் மூலம் அந்நகரின் மாசுவை அவர்களால் எளிதாக கண்டறிந்து அதற்க தகுந்த நடைமுறைகளை எடுக்க முடிகிறது என்று எதிர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஆட் - ஈவன் திட்டத்தை விட சிறந்த பலனை தரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கார்களில் கலர் ஹாலோகிராம் ஸ்டிக்கர்… அரசிற்கு கோர்ட் குட்டு

இறுதியாக கோர்ட் தற்போது பொதுமக்களுக்கு இந்த கலர் ஸ்டிக்கர் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதை அரசுதான் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். விளம்பரங்கள் செய்து, இது குறித்த செய்தியை வெளியிட்டு மக்களுக்கு இதை கொண்டு சேர்க்க வேண்டியது அரசின் கடமை அதை உடனடியாக செய்ய சொல்லி அரசிற்கு உத்தரவிட்டது.

Most Read Articles
English summary
people wants to know about hologram stickers court says.Read in Tamil
Story first published: Thursday, October 11, 2018, 13:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X