ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலையை குறைக்க மக்கள் எடுத்த நூதன முடிவு..! இந்தியாவில் இது நடந்தால்?
இந்தியாவில் பெட்ரோல் விலை விண்ணை முட்டி நிற்க ஆஸ்திரேலியாவிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து அந்நாட்டு பொதுமக்கள் நூதனமான போராட்டம் ஒன்றில் களம் இறங்கியுள்ளனர். பெட்ரோல் விலையால் வேலையை இ
இந்தியாவில் பெட்ரோல் விலை விண்ணை முட்டி நிற்க ஆஸ்திரேலியாவிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து அந்நாட்டு பொதுமக்கள் நூதனமான போராட்டம் ஒன்றில் களம் இறங்கியுள்ளனர். பெட்ரோல் விலையால் வேலையை இழந்த ஒரு பெண்ணால் துவக்கப்பட்ட போராட்டம் இன்று உலக அளவில் வைரலாகியுள்ளது. இது குறித்த செய்தியை கீழே காணலாம்.

இந்தியாவில் இன்று பெட்ரோல் விலை விண்ணை முட்டி நிற்கிறது. இந்திய மக்கள் பெரும்பாலானோரின் வாழ்வு பெட்ரோலை மையமாக கொண்டே இயங்குவதால் இந்தியாவிற்கு பெட்ரோல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

இந்த பெட்ரோல் விலையேற்றத்திற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலையேற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அந்த விலை ஏற்றம் என்னவோ கடைசியாக மக்கள் தலையில்தான் விழுகிறது.

இதற்கிடையில் மத்திய மாநில அரசுகளின் வரிச்சுமை மிக அதிகமாக இருக்கிறது. பெட்ரோலுக்காக நீங்கள் செலவு செய்யும் பணத்தில் இருந்து வரியை கழித்து விட்டால், நீங்கள் செலவு செய்த பணத்தில் பாதி கூட வராது. பெட்ரோல் விலை அவ்வளவு குறைவுதான். அதன் மீது செலுத்தப்படும் வரிதான் மிக அதிகம்.

சரி இந்தியாவில் மட்டும்தான் இந்த நிலையா? என்று யோசித்தால் இல்லை ஆஸ்திரேலியாவிலும் பெட்ரோலுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக தெரிகிறது.

தற்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 153 சென்ட் அதாவது 1.53 டாலருக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.80 ஆகும். இந்த விலை ஆஸ்திரேலியாவில் 4 ஆண்டு உச்சமாகும்.

இதனால் ஆஸ்திரேலிய மக்களும் அரசு மீது அதிக அதிருப்தியில் உள்ளனர். சமூக வலைதளங்களில் இது குறித்து அதிகம் விவாதித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு ஆசிரியர் தான் பணி செய்யும் இடத்திற்கு சென்று வர வாரம் 500 கி.மீ பயணம் செய்கிறார். தற்போது பெட்ரோல் விலை உயர்வு காரணமாக அவர் தனது வேலையை இழந்து விட்டார்.

இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் அக்.26ம் தேதி (இன்று) தேசிய எரிபொருள் நிறுத்தம் என்ற பெயரில் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டார்.

இது பெரும் வைரலாக பரவியது. இந்த போஸ்டின் படி அக். 26ம் தேதி யாரும் பெட்ரோல், டீசல்களை எந்த பெட்ரோல் பங்கிலும் போட வேண்டாம். இதன் மூலம் ஒரு பெரும் எதிர்ப்பை வெளிக்காட்டலாம் என்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் அதில் இவ்வாறு ஒரு நாள் நாம் ஒன்று கூடி நமது எதிர்ப்பை வெளிகாட்டினால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலைகள் எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், தற்போது உள்ள விலையேற்றத்தை கணக்கில் கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு சுமார் 1.60 லட்சம் பேர் ஆதரவு அளிப்பதாகவும், நாங்கள் அந்த நாளில் பெட்ரோல், டீசல் போடப்போவதில்லை என்றும் உறுதி அளித்திருந்தனர்.

பலர் இது ஒரு நல்ல துவக்கம் என்றும், ஒரு நாள் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டால் அரசு எவ்வளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டும் என அவர்கள் உணர வேண்டும் என்றும், அதற்கு ஆதரவாக பல்வேறு பதிவுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலையை குறைக்க மக்களிடம் பெரும் அளவிற்கு ஆர்வம் எழுந்திருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. மக்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து இது போன்ற போராட்டங்களில் இறங்கி வருகின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல் விலையேற்றத்திற்காக பெரிய அளவில் போரட்டங்களோ அல்லது எதிர்ப்பு தெரிவிப்போ நடக்கவில்லை. விலையேறும் புதிதில் பல எதிர்ப்புகள் தெரிவிப்பதோடு நின்று விடுகிறது. மக்கள் பலம் தான் அரசை பெட்ரோல் மீதான வரியில் இருந்து விலக்கு அளிக்க வழி வகுக்கும்.

இப்படியாக இந்தியாவில் பெட்ரோலுக்கு அதிகமாகன விலை உள்ள நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலுக்கு மக்கள் செலுத்தும் பணம் எல்லாம் யாருக்கு செல்கிறது. பெட்ரோல் விலைக்கு பின்னால் உள்ள ரகசியங்கள் என்ன? பெட்ரோல் ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள குழப்படி என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இந்தியாவில் இன்று பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஒரு சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.90ஐ தொட்டு விட்டது. இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிதான் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் மத்திய, மாநில அரசுகளின் வரிகள் வேறு எக்கச்சக்கமாக இருக்கிறது. இதனால் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு நாள் பெட்ரோல் விலையை பார்த்து நெஞ்சு வலி வராத குறைதான்.


Click it and Unblock the Notifications