இதுக்குதான் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.. இப்படிக்கு மோடி சர்க்காரின் தீவிர பக்தர்கள்..

பெட்ரோல், டீசல் விலை உயர்வானது மோசமான தாக்கம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைதான் என்று சிலர் தம்பட்டம் அடித்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

இதுதவிர பெட்ரோல், டீசல் ஆகியவை மிக அதிகமான விலையில் விற்பனையாகி கொண்டிருப்பதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான வரிகளும் மிக முக்கிய காரணங்களாக உள்ளன என்பதை யாராலும் நிச்சயமாக மறுக்க முடியாது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் இந்த வரி விதிப்பானது, பொதுமக்களை நசுக்கும் வகையில், மிக அதிகமாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

இதில், வாட் வரியானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஒரே விலையில் விற்பனையாவது இல்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

அதுவும் மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என மிக தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் அவ்வாறு கொண்டு வரப்படும் பட்சத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஒரே ஒரு வரி மட்டுமே விதிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

இதன்மூலமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெகுவாக குறையும். ஆனால் வரிகள் மூலம் கிடைத்து வரும் அதிகப்படியான வருவாயை இழந்து விடக்கூடாது என்ற ஒற்றை காரணத்திற்காக மத்திய, மாநில அரசுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையானது செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு போலவே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இம்மியளவுக்கும் கூட அதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வானது வாகன விற்பனையில் நேரடியான தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. அதாவது பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவதால், புதிய வாகனங்கள் வாங்குவதை நாடு முழுவதும் உள்ள மக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

குறிப்பாக கார் விற்பனைதான் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது. கார் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மங்க தொடங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அரசின் புள்ளி விபரங்களே அதனை உறுதி செய்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலான கால கட்டத்தில், இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ அலுவலகங்கள்) பதிவு செய்யப்படும் புதிய கார்களின் எண்ணிக்கையானது சுமார் 20 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

அதாவது கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலான கால கட்டத்தில் எவ்வளவு புதிய கார்கள் பதிவு செய்யப்பட்டனவோ அதை விட தற்போது 3,000 கார்கள் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

புதிய கார்களின் பதிவு 20 சதவீதம் சரிவை சந்தித்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலான கால கட்டத்தில், மும்பை நகரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 7.50 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 8 ரூபாயும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

இதுகுறித்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது. இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம் தினம் புதிய உச்சங்களை தொட்டு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

குறிப்பாக அக்டோபர் முதல் வாரத்தில் இங்கு பெட்ரோல் விலை ரூ.91.34 ஆகவும், டீசல் விலை ரூ.80.10 ஆகவும் அதிகரித்தது. இவ்வாறான பெட்ரோல், டீசல் விலை உயர்வானது கார் விற்பனையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. எனவே பதிவு செய்யப்படும் புதிய கார்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது'' என்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

கார்கள் விற்பனை சரிவது என்பது ஒரு வகையில் நல்லதுதான். ஏனெனில் ஒவ்வொருவரும் கார்களை எடுத்து கொண்டு சாலைக்கு வருவதை காட்டிலும், பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கினால் பல்வேறு நன்மைகள் விளையும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

அதாவது சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பெட்ரோல், டீசலுக்கான தேவை குறைந்து அதன் விலை படிப்படியாக குறைய தொடங்கும். ஆனால் கார்கள் வாங்குவதை மக்கள் தவிர்ப்பது ஏன்? என்பதில்தான் அனைத்தும் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

மேற்கண்ட பலன்களை மனதில் வைத்து கார் வாங்குவதை மக்கள் தவிர்த்தால் அது பெருமைப்படக்கூடிய விஷயமே. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்ற காரணத்திற்காக மட்டுமே தற்போது மக்கள் கார் வாங்குவதை தவிர்க்கின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

எனவே இதுவும் எங்களின் சாதனை என்று யாராவது தம்பட்டம் அடித்து கொள்ளாமல் இருந்தால் சரி!! அதே சமயம் மக்களின் கவனம் டூவீலர்களின் மீது திரும்ப தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. டூவீலர்களுக்கு எளிதாக மாத தவணை கட்டி விடலாம். காரை காட்டிலும் நல்ல மைலேஜ் கிடைக்கும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

நகர பகுதிகளில் அமைந்துள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு கார்களில் சென்று வருவது கடினம். ஏனெனில் நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிக கடுமையாக அதிகரித்து வருகிறது. ஆனால் டூவீலர் என்றால், அவ்வப்போது கிடைக்கும் சிறிய இடைவெளிகளிலாவது எளிதாக புகுந்து சென்று வந்து விடலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

எனவேதான் மக்களின் கவனம் டூவீலர்களின் மீது திரும்பியுள்ளதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் எதிர்வரும் நாட்களில் புதிய கார்களின் பதிவு அதிகரிக்கும் என ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டுள்ளது. இந்த சமயத்தில் கார் விற்பனை அதிகரிக்கும். எனவே பதிவு செய்யப்படும் புதிய கார்களின் எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

அதற்கு ஏற்ற வகையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

ஏனெனில் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, 5 மாநில சட்டசபை தேர்தல் வெற்றியை பறித்து விடலாம் என்ற அச்சம் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு உள்ளதாக தெரிகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிகழ்த்திய மேஜிக் இதுதான்.. இதையும் மோடியின் சாதனை என்று சொல்வார்களோ?

இதன் காரணமாகதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில நாட்களாக குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே வரும் நாட்களில் புதிய கார்களின் பதிவு அதிகரிக்கும் என ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

பெட்ரோல் விலை இன்று விண்ணை முட்டி நிற்பத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் கொடுக்கும் அதிகமான பணம் எல்லாம் யாருக்கு செல்கிறது? யார் அந்த லாபத்தை பார்க்கிறார்கள்? இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் டீசல்கள் ஏற்றுமதியாகிறதா? அதற்கு என்ன காரணம்? இதனால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இத்தனை கேள்விகளுக்கான பதிலையும் கீழே பார்க்கலாம் வாருங்கள்.

ஆட்டோமொபைல் குறித்த செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

இந்தியாவில் இன்று பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஒரு சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.90ஐ தொட்டு விட்டது. இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிதான் என கூறப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

இதற்கிடையில் மத்திய, மாநில அரசுகளின் வரிகள் வேறு எக்கச்சக்கமாக இருக்கிறது. இதனால் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு நாள் பெட்ரோல் விலையை பார்த்து நெஞ்சு வலி வராத குறைதான்.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

நிலைமை இப்படி இருக்க பெட்ரோல் விலை கூடுவதால் அந்த கூடுதல் பணம் எல்லாம் யாருக்கு போகிறது? பெட்ரோலுக்கான அரசின் வரி எவ்வளவு? இதில் அதிகம் லாபம் அடைபவர்கள் யார்? என பார்க்கலாம் வாருங்கள்.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

இந்தியா நேரடியாக பெட்ரோலையும், டீசலையும் இறக்குமதி செய்வதில்லை. கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து பின்னர் அதை சுத்திகரித்து, பெட்ரோல், டீசலாக மாற்றி விற்பனை செய்கிறது. இதை இந்தியாவில் விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, சில நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

கடந்த நிதியாண்டில் மட்டும் கச்சா எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்காக 744 மில்லியன் ரூபாயை இந்தியா செலவிட்டுள்ளது. அதே நேரத்தில் 23,858 மில்லியன் ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. என்ன இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது என பார்க்கிறீர்களா? அது ஏன் என தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் மேலும் சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

ஆயில் கம்பெனிகளுக்கு வரும் கச்சா எண்ணெய்யின் விலையை ரீபைனரி கேட் விலை (ஆர்ஜிபி) என கூறுவோம். இது அந்த கச்சா என்ணெய்யை விற்பனை செய்பவரின் விலை. அதை ஏற்றுமதி செய்பவரின் விலை (இபிபி) மற்றம் இறக்குமதி செய்பவரின் விலை (ஐபிபி).

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

இதில் இறக்குமதி விலை என்பது அந்த கச்சா எண்ணெய்யின் விலை மட்டும் அல்ல. அதை இந்தியாவிற்குள் கொண்டு வரும் செலவு, அதற்கான இன்சூரன்ஸ், கஸ்டம்ஸ் வரி மற்றும் துறைமுக கட்டணம் என அனைத்தும் சேர்ந்தது தான் ஐபிபி. இருந்தாலும் ஐபிபியில் 80 சதவீதம் கச்சா எண்ணெய்க்கான விலைதான் இருக்கும்.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

வரி

இந்தியாவிற்குள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய 2.5 சதவீதம் கஸ்டம்ஸ் வரியாக விதிக்கப்படுகிறது. அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர் என்ற மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டால் அதற்கு 2.5 டாலர் வரி செலுத்த வேண்டும். 200 டாலர் என்ற மதிப்பில் இறக்குமதி செய்யப்படால் 5 டாலர் வரி செலுத்த வேண்டும்.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை பெட்ரோலாக மாற்றி விற்கும் போது அதற்கு கலால் வரியை விதிக்கிறது அரசு. கலால் வரி என்பது மத்திய அரசு விதிக்கும் வரி. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.17 எனவும், டீசலுக்கு ரூ.19 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

கடந்த 2015-2016ம் ஆண்டு சராசரியாக ஒர பேரல் கச்சா எண்ணெய் 46 டாலருக்கு வாங்கப்பட்டுள்ளது. 2017-2018ல் 48 டாலருக்கு வாங்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2015-2016ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் வரி எல்லாம் போக ரூ.11,242 கோடி லாபம் ஈட்டியது. 2017-18ம் ஆண்டில் ரூ.21,346 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்திய அரசின் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் 2015-16ம் ஆண்டில் ரூ.22,426 கோடி லாபம் ஈட்டியது. 2017-18ம் ஆண்டில் ரூ 33,612 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

மத்திய அரசு கலால் வரியை விற்பனையாகும் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கவில்லை. மாறாக விற்பனையாகும் அளவுகளின் அடிப்படையில் நிர்ணயித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.17 என நிர்ணயித்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை கூடினாலும், குறைந்தாலும் மத்திய அரசிற்கு லிட்டருக்கு ரூ.17தான் கலால் வரி.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

அரசு சம்பாதிக்கும் லாபம்

அதே சமயம் அரசும் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு வகையில் மறைமுக நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்துதான் வந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நவம்பரில் இருந்து ஜனவரி 2016க்கு இடையில் சுமார் 9 முறை கலால் வரியை உயர்த்தியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

சுமார் 2.96 சதவீதமாக இருந்த டீசலுக்கான வரியை 11.33 சதவீதமாக அதிகரித்தது. 2.7 சதவீதமாக இருந்த பெட்ரோல் வரி 9.48 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் மூன்று முறை கலால் வரியை சுமார் 6 ரூபாய் வரை உயர்த்தியது. தற்போது அந்த வரி கலால் வரியில் இருந்து நீக்கப்பட்டு சாலை கட்டுமான செஸ் வரியாக மாறியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

தற்போது பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.17 மற்றும் டீசலுக்கு லிட்டருக்க ரூ.19 என வரி வசூலிக்கப்படுகிறது. இந்த காலத்தில் வரி வருவாய் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

அரசு என்ன சொல்கிறது?

மத்திய அரசு கடந்த 2006ம் ஆண்டு ரங்கராஜன் என்பவர் தலைமையில் குழு அமைத்து, பெட்ரோல், டீசல் விலையை, அந்த குழுவை முடிவு செய்ய வைத்தது அதற்கு முன்னர் காஸ்ட் ப்ளஸ் என்ற ஃபார்முலா பின்பற்றப்பட்டது. இதன்பின் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு, ரங்கராஜன் தலைமயிலான குழு விலையை நிர்ணயித்தது. தற்போது எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானிக்கின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோல்களில் 80 சதவீதம்தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலம் பெறப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய்க்கு 2.5 சதவீதம் கஸ்டம்ஸ் வரி விதிக்கப்படும் நிலையில் 80 சதவீத்திற்கு மட்டும்தான் அந்த வரி எனில் இந்தியாவில் மொத்தம் விற்பனையாகும் பெட்ரோல், டீசலை ஒப்பிடும்போது ஒட்டுமொத்தத்திற்கு சராசரியாக 2 சதவீத வரி என எடுத்து கொள்ளலாம்.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

இந்திய அரசிற்கு சொந்தமான இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோல் டீசலை ஏற்றுமதி செய்வதில்லை. ஆனால் தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால் இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யை கொண்டு பெட்ரோல், டீசல் தயாரிக்க அவர்களுக்கு அனுமதியில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதை பெட்ரோல், டீசலாக மாற்றி ஏற்றுமதி செய்கின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

சமீபகாலமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோலின் விலை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையை விட குறைவாகதான் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை கச்சா எண்ணெய்க்கான பஞ்சம் தற்போது ஏற்படவில்லை. மாறாக இந்தியா ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு, மற்றும் அரசின் வரி விதிப்பு காரணமாக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வின் பின்னால் ஒரு சிதம்பர ரகசியம்…. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது யார் தெரியுமா?

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசலின் விலை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையை விட குறைவாக இருந்தாலும், அதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அதே பெட்ரோல், டீசலை இந்தியாவில் விற்பனை செய்தாலும், அரசின் வரி விதிப்பால் தற்போது உள்ள விலைக்கே விற்பனை செய்ய முடியும். மாறாக வெளிநாடுகளுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றுமதியாவதால் இந்திய அரசிற்கு வரி விதிப்பின் பெயரில் வருமானம்தான் வரும்.

Most Read Articles

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக கருதப்படும் ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Petrol, Diesel Price Rise: Mumbai Car Registrations Decline by 20 Percent. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X