புகாட்டி சிரோன் காரைவிட பவர்ஃபுல் ஹைப்பர் காரை தயாரிக்கும் பினின்ஃபரீனா!
புகாட்டி சிரோன் காரைவிட அதிசக்திவாய்ந்த ஹைப்பர் கார் மாடலை மஹிந்திராவின் கீழ் செயல்பட்டு வரும் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் உருவாக்கி வருகிறது. PF0 என்ற புதிய ஹைப்பர் கார், பேட்டரியில் இயங
புகாட்டி சிரோன் ஹைப்பர் காரைவிட அதிசக்திவாய்ந்த கார் மாடலை மஹிந்திராவின் அங்கமாக செயல்படும் பினின்ஃபரீனா நிறுவனம் தயாரித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கான உலகின் அதிசக்திவாய்ந்த கார் மாடல்களில் ஒன்றாக புகாட்டி சிரோன் விளங்குகிறது. பேரை கேட்டாலே அதிருதுல்ல என்பது போல, புகாட்டி சிரோன் பெயரை சொன்னதுமே, கார் பிரியர்களின் உடல் சிலிர்த்துவிடும். இந்த கார் 1,500 பிஎஸ் (1479 பிஎச்பி) பவரையும், 1,600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் W16 எஞ்சின் பயன்படுத்ததப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், புகாட்டி சிரோன் காரைவிட அதிசக்திவாய்ந்த ஹைப்பர் கார் மாடலை மஹிந்திராவின் கீழ் செயல்பட்டு வரும் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் உருவாக்கி வருகிறது. PF0 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய ஹைப்பர் கார், பேட்டரியில் இயங்கும் மின்சார மாடலாக உருவாக்கப்படுவதும் மேலும் ஒரு ஆச்சரியத்தை தரும் விஷயம்.

பினின்ஃபரீனா PF0 காரின் நான்கு சக்கரங்களில் பொருத்தப்பட இருக்கும் 4 மின்மோட்டார்களும் சேர்ந்து அதிகபட்சமாக 1,900 பிஎஸ் பவரையும், 2,300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்ததாக இருக்கும். பெட்ரோலில் இயங்கும் புகாட்டி சிரோன் காரைவிட பேட்டரியில் இயங்கும் பினின்ஃபரீனா PF0 ஹைப்பர் கார் 420 பிஎஸ் கூடுதல் பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றதாக இருக்கும்.

இந்த அதிசக்திவாய்ந்த பினின்ஃபரீனா PF0 எலெக்ட்ரிக் ஹைப்பர் காருக்கான டிரான்ஸ்மிஷனை குரோஷியாவை சேர்ந்த ரிமாக் சூப்பர் கார் நிறுவனம்தான் தயாரித்து கொடுத்துள்ளது. இதன் மின் மோட்டார்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் செயல்திறன் வியக்க வைப்பதாக இருக்கிறது.

இந்த புதிய மின்சார ஹைப்பர் கார் மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2 வினாடிகளிலும், 300 கிமீ வேகத்தை 12 வினாடிகளுக்குள்ளும் எட்டிவிடும் வல்லமை வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. டெஸ்லா மாடல் எஸ் பி100டி மாடலில் பயன்படுத்தப்படும் பேட்டரியை விட 25 சதவீதம் அளவுக்கு அளவிலும், செயல்திறனிலும் சிறப்பான பேட்டரி இந்த ஹைப்பர் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

இந்த ஹைப்பர் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 482 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். குயிக் சார்ஜர் மூலமாக இந்த காரின் பேட்டரியை 25 நிமிடங்களிலிருந்து 40 நிமிடங்களுக்குள் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

இந்த ஹைப்பர் காரில் கார்பன் ஃபைபர் பாடி மற்றும் சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆக்டிவ் ரியர் விங் அமைப்பு, இந்த காருக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள பைரெல்லி நிறுவனத்தின் PZero டயர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 150 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனைக்கு வர இருக்கிறது.

மஹிந்திராவின் கீழ் செயல்படும் ஃபினின்ஃபரீனா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை தொடர்ந்து சொகுசு வகை மின்சார கார்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த கார்கள் மஹிந்திரா மூலமாக இந்தியாவிலும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


Click it and Unblock the Notifications








