400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா!!

மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் பினின்ஃபரீனா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் புதிய ஹைப்பர் கார் கான்செப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. PFO என்ற பெயரில் இந்த புதிய கார் காட்ச

By Saravana Rajan

மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் பினின்ஃபரீனா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் புதிய ஹைப்பர் கார் கான்செப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா!!

இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் கார் டிசைன் செய்து கொடுப்பதில் பாரம்பரியம் மிக்கது. பிஎம்டபிள்யூ, ஃபெராரி உள்ளிட்ட பல கார் நிறுவனங்களுக்கு முத்தாய்ப்பான பல கார் மாடல்களை வடிவமைத்து கொடுத்துள்ளது.

400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா!!

இந்த நிலையில், பினின்ஃபரீனா நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்தியது. அத்துடன், அதிக முதலீடு செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனம் சொந்தமாக கார் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.

400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா!!

இதன்படி, வரும் 22ந் தேதி முதல் 26ந் தேதி வரை அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் நடைபெற இருக்கும் பெபுள் பீச் கான்கர்ஸ் டி எலிகன்ஸ் என்ற ஆட்டோமொபைல் திருவிழாவில் புதிய எலக்ட்ரிக் ஹைப்பர் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. பினின்ஃபரீனா PFO என்ற பெயரில் இந்த புதிய கார் காட்சிக்கு வர இருக்கிறது.

400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா!!

மேலும், வாங்குவதற்கு தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய ஹைப்பர் கார் கான்செப்ட்டை காண்பிப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. பினின்ஃபரீனா நிறுவனத்தின் சிசிடாலியா, மோடுலோ மற்றும் சின்டெஸி உள்ளிட்ட கான்செப்ட் கார் மாடல்களின் வடிவமைப்பு தாத்பரியங்களை தழுவி இந்த கார் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா!!

கார்பன் ஃபைபர் பாகங்கள் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கும். இந்த எலக்ட்ரிக் ஹைப்பர் காரின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், 0 -100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் இரண்டு நொடிகளுக்கு உள்ளாக எட்டும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது நிச்சயம் உலகின் அதிசெயல்திறன் வாய்ந்த தயாரிப்பு நிலை கார் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா!!

அத்துடன், இந்த கார் மணிக்கு 400 கிமீ வேகத்தை தாண்டி செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இதன்படி பார்த்தால், புகாட்டி சிரோன் காருக்கு நேர் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இது பேட்டரியில் இயங்கும் மின்சார ஹைப்பர் கார் மாடலாக வருகிறது.

400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா!!

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 480 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பதும் இந்த கார் மீதான ஆவலைத் தூண்டுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய எலக்ட்ரிக் ஹைப்பர் காரின் தயாரிப்பு நிலை மாடல் முறைப்படி அறிமுகம் செய்யப்படும்.

400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா!!

2020ம் ஆண்டு உற்பத்தி துவங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் உள்ள காம்பியானோ என்ற இடத்தில் உள்ள ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. மொத்தமாகவே 150 கார்கள் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

Most Read Articles
English summary
Pininfarina to Showcase hypercar concept in US soon.
Story first published: Friday, August 17, 2018, 15:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X