கமிஷனருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்

போலீஸ் கமிஷனருக்கே அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அசத்தியுள்ளனர். என்ன நடந்தது என முழுமையாக தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியம் நிச்சயம்.

போலீஸ் கமிஷனருக்கே அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அசத்தியுள்ளனர். என்ன நடந்தது என முழுமையாக தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியம் நிச்சயம்.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர்.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாததே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றுவதே கிடையாது.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பெரும்பாலான போலீசாரும் கூட போக்குவரத்து விதிமுறைகள் எதையும் முறையாக பின்பற்றுவது இல்லை என்பதே உண்மை. அத்துடன் தவறு செய்யும் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் போலீசார் மீது புகார்கள் உள்ளன.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

இந்தியாவில் போலீஸ் வாகனம் ஒன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது என்பது வழக்கத்திற்கு மாறான ஒரு விஷயம் அல்ல. ஏனெனில் பெரும்பாலான போலீஸ் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறி கொண்டுதான் உள்ளன.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய போலீஸ் வாகனம் ஒன்றிற்கு அபராதம் விதிப்பது என்பது இந்தியாவில் வழக்கத்திற்கு மாறான ஒரு விஷயம்தான். அதுவும் போலீஸ் உயரதிகாரி ஒருவரின் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

அரிதிலும் அரிதான இந்த சம்பவம் ஐதராபாத் நகரில் நடைபெற்றுள்ளது. ஐதராபாத் நகரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக பணியாற்றி வருபவர் அனில் குமார். அரசாங்கம் இவருக்கு வழங்கிய அதிகாரப்பூர்வ கார் (டொயோட்டா பார்ச்சூனர்) 'நோ பார்க்கிங்' பகுதியில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

இதனை அபினய் தேஷ்பாண்டே என்ற பத்திரிக்கையாளர் பார்த்து படம் எடுத்து விட்டார். உடனடியாக அந்த படத்தை டிவிட்டரில் வெளியிட்டார். அதில், ''இந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படுமா? இடம்: மகன்களி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் நேரம்: 2018 நவம்பர் 15 மதியம் 3 மணி'' என குறிப்பிட்டிருந்தார்.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

அத்துடன் ஐதராபாத் போக்குவரத்து காவல் துறையையும் 'டேக்' செய்தார். உடனடியாக இந்த புகைப்படம் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என சமூக வலை தளங்களில் வைரலாக பரவி தொடங்கியது. எனவே ஐதராபாத் போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாக இதற்கு பதில் அளித்தனர்.

அதில், 'சட்டத்திற்கு முன்பாக அனைவரும் சமம்' என குறிப்பிட்டிருந்தனர். அத்துடன் நோ பார்க்கிங் ஏரியாவில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த போக்குவரத்து கூடுதல் கமிஷனரின் காருக்கு அபராதம் விதித்ததற்கான சலானின் ஸ்க்ரீன் ஷாட் போட்டோவையும் இணைத்திருந்தனர்.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

the news minute வெளியிட்டுள்ள செய்தியின்படி, TS 09 PA 3330 என்ற பதிவு எண் கொண்ட போக்குவரத்து கூடுதல் கமிஷனரின் காருக்கு 235 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட டொயோட்டா பார்ச்சூனர் கார் தெலங்கானா டிஜிபி அலுவலகத்தின் கீழாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

ஆனால் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அனில் குமார் அதனை தனது அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தி வருகிறார். மகன்களி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆய்வு பணி ஒன்றிற்காக சென்றபோதுதான் அவரது கார் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

போக்குவரத்து கூடுதல் கமிஷனருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை பலர் வரவேற்றுள்ளனர். அதே சமயம் அபராத தொகையை செலுத்த அவர் தனது பணத்தை பயன்படுத்தினாரா? அல்லது அரசாங்க பணத்தை பயன்படுத்தினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

இதுதொடர்பாக டிவிட்டர் பயனாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் டிவிட்டரில், ''ஐபிஎஸ் அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை பாராட்டுகிறேன். ஆனால் அபராத தொகையை செலுத்தியது யார்? இது அரசாங்க வாகனம் என்பதால், மக்களின் வரிப்பணம் அபராதமாக செலுத்தப்பட்டதா?

போக்குவரத்து விதிமீறிய போலீஸ் கமிஷனர் வசமாக சிக்கினார்... தண்டனை கிடைக்க யார் காரணம் தெரியுமா?

சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்'' என கூறியுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இதே கருத்தைதான் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

More from DriveSpark

மஹிந்திரா அல்டூராஸ் ஜி4 பிரீமியம் எஸ்யூவி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Saturday, November 17, 2018, 16:29 [IST]
English summary
Police Commissioner's Vehicle Fined For No Parking By Hyderabad Traffic Police. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+