மிக மோசமான மறுவிற்பனை மதிப்புடைய புதிய கார் மாடல்கள்!

குறைவான மறுவிற்பனை மதிப்புடன் விற்பனையாகும் கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

Recommended Video

Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

சில புதிய கார் மாடல்கள் வாங்கிய ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே மிக மோசமான ரீசேல் மதிப்பை பெற்றுவிடுகின்றன. அந்த கார்களின் பட்டியலையும், நல்ல ரீசேல் மதிப்புடைய கார்களின் பட்டியலை இந்த செய்தியில் காணலாம்.

ஃபியட் புன்ட்டோ

ஃபியட் புன்ட்டோ

கட்டுமானம், பாதுகாப்பில் சிறந்த கார் ஃபியட் புன்ட்டோ. ஆனால், இந்த காரின் விற்பனை மிக மோசமான நிலையை எட்டி இருக்கிறது. அத்துடன் ஃபியட் நிறுவனத்தின் வர்த்தகமும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் இந்த கார் வாங்குவதை தவிர்க்கலாம்.

ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா காரும் விற்பனையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. தரமான கட்டமைப்பு கொண்ட கார் மாடல் என்று கார் பிரியர்கள் மத்தியில் பெயர் எடுத்தாலும், ஃபியட் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை திருப்திகரமாக இல்லாததே, இந்த காரின் மதிப்பு குறைவதற்கு காரணமாகி விட்டது.

டாடா நானோ

டாடா நானோ

அடுத்து நமது பட்டியலில் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் விற்பனையில் இருக்கும் மாடல் டாடா நானோ ஜென்எக்ஸ். அசிங்கமான தோற்றம், திராணி இல்லாத எஞ்சின் போன்றவை இந்த காரின் தோல்விக்கு காரணங்கள். மேலும், ஒரு லட்ச ரூபாய் கார் என்று கூறி வந்த இந்த கார் தற்போது விலையிலும் மதிப்பு வாய்ந்ததாக இல்லை.

டாடா போல்ட்

டாடா போல்ட்

பெரும் எதிர்பார்ப்புடன் வந்த டாடா போல்ட் காருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இதனால், இந்த காரின் விற்பனை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. எனவே, இந்த காருக்கு ரீசேல் மதிப்பு நிச்சயம் குறைவாக கிடைக்கும். எனவே, இந்த காரையும் தவிர்ப்பது உத்தமம்.

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியும் மறுவிற்பனை மதிப்பில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த காரை பலர் விரும்பி வாங்கி நீண்ட கால அடிப்படையில் பயன்படுத்தினாலும், மீண்டும் விற்பனை செய்ய நினைக்கும்போது போதிய மதிப்பை பெற்றுத் தருவதில்லை.

 மஹிந்திரா நூவோஸ்போர்ட்

மஹிந்திரா நூவோஸ்போர்ட்

மஹிந்திரா குவான்ட்டோ என்ற பெயரில் அறிமுகமாகி, தோல்வி கண்ட மாடலை புதுப்பித்து நூவோஸ்போர்ட் என்ற பெயரில் மஹிந்திரா களமிறக்கியது. ஆனால், அப்போதும் கூட இந்த கார் எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை. மேலும், இந்த காருக்கான மறுவிற்பனை மதிப்பும் குறைவாக உள்ளது.

மஹிந்திரா வெரிட்டோ வைப்

மஹிந்திரா வெரிட்டோ வைப்

ரெனோ கார் நிறுவனம் பிரிந்தபோது, அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட லோகன் காரை வெரிட்டோ என்ற பெயரிலும், அந்த காரில் மாற்றங்களை செய்து ஹேட்ச்பேக் ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வெரிட்டோ வைப் காரையும் தவிர்ப்பது நல்லது. வெரிட்டோ வைப் காருக்கு மிக மோசமான ரீசேல் மதிப்பு இருக்கிறது.

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ காரின் விற்பனையும் வெறும் 500க்கும் கீழாக இருக்கிறது. இந்த காருக்கும் போதிய வரவேற்பு இல்லை. இதனால், இந்த காரின் மதிப்பு வெகுவாக குறைத்து கேட்கப்படுகிறது. இந்த காரின் டிசைன்தான் இதற்கு எதிரியாக இருக்கிறது.

நிஸான் டெரானோ

நிஸான் டெரானோ

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் சிறிய மாற்றங்களை செய்து நிஸான் நிறுவனம் டெரானோ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்த எஸ்யூவியின் விற்பனையும் மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது. மேலும், டஸ்ட்டரைவிட அதிக விலை கொண்ட இந்த எஸ்யூவிக்கு ரீசேல் மதிப்பு குறைவாகவே இருக்கிறது.

ரெனோ லாட்ஜி

ரெனோ லாட்ஜி

மாருதி எர்டிகாவைவிட சற்று இடவசதி கூடுதலாகவும், டொயோட்டா இன்னோவா காரைவிட விலை குறைவாகவும் களமிறக்கப்பட்ட ரெனோ லாட்ஜி காருக்கும் வரவேற்பு எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த காரின் விற்பனை மதிப்பும் குறைவாகவே இருக்கிறது.

டட்சன் கோ

டட்சன் கோ

மிக மோசமான கட்டுமானத் தரம், குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ்

மினி எம்பிவி கார் என்ற விளம்பரத்துடன் வந்தாலும், மூன்றாவது வரிசை ஒப்புக்கு கொடுக்கப்பட்டதும், போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததும் இந்த டட்சன் கோ ப்ளஸ் காருக்கும் வரவேற்பு இல்லை. இந்த காரின் ரீசேல் மதிப்பும் மிக குறைவாகவே இருக்கிறது.

குறைவான ரீசேல் மதிப்புடைய கார் மாடல்கள்!

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் சில மாடல்கள் தரத்தில் சிறப்பானவையாக இருந்தாலும், விற்பனைக்கு பிந்தைய சேவையில் பின்தங்கி இருப்பதே, யூஸ்டு மார்க்கெட்டில் வரவேற்பு இல்லாத நிலை இருக்கிறது. அதேபோன்று, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களின் சில கார் மாடல்களுக்கும் போதிய ரீசேல் மதிப்பு கிடைப்பதில்லை என்பது துரதிருஷ்டவசதமானதே.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 16, 2018, 12:11 [IST]
English summary
Poor Resale Value Cars In India 2018.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+