இவர்களும் வேர்ல்டு லெவல் பிஸ்னஸ்மேன்தான்.. இவங்க கார் கலெக்ஸனையும் கொஞ்சம் பாருங்க மல்லையா!
பல ஆயிரம் கோடிகள் சொத்து இருந்தும், இந்திய தொழிலதிபர்கள் சிலர் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றனர். மிகவும் சாதாரணமான கார்களைதான் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
பல ஆயிரம் கோடிகள் சொத்து இருந்தும், இந்திய தொழிலதிபர்கள் சிலர் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றனர். மிகவும் சாதாரணமான கார்களைதான் அவர்கள் பயன்படுத்துகின்றனர். இவர்களை எல்லாம் விஜய் மல்லையாவுக்கு நேர் எதிர் எனலாம். அப்படிப்பட்டவர்கள் பயன்படுத்தும் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தொழில் அதிபர்கள் பெரும்பாலானோர், விலை உயர்ந்த ஆடம்பரமான மற்றும் அதிநவீனமான கார்களைதான் பயன்படுத்துகின்றனர். இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு கம்பி நீட்டிய விஜய் மல்லையா அதற்கு ஓர் உதாரணம். அவரது கார் கலெக்ஸன் பெரியது.

ரோல்ஸ் ராய்ஸ் கோட்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம், பென்ட்லே ப்ளையிங் ஸ்பர், போர்ஸே பாக்ஸ்டர், பெராரி என நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த லக்ஸரி கார்களை விஜய் மல்லையா வைத்திருந்தார். ஆனால் ஒரு சில தொழில் அதிபர்கள் மட்டும் இந்த விஷயத்தில் விதிவிலக்காக உள்ளனர்.

பிஸ்னஸில் பெரிய அளவில் சாதனை செய்திருந்தாலும், அவர்கள் பயன்படுத்தும் கார்கள் மிக மிக எளிமையாக இருக்கிறது. அப்படி உலகம் முழுவதும் பிரபலமான 5 இந்திய தொழில் அதிபர்கள் பயன்படுத்தும் எளிமையான கார்கள் குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ரத்தன் டாடா-ஹோண்டா சிவிக்
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா. இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். பெராரி கலிபோர்னியா, கிறைஸ்லர், மெர்ஸிடஸ் என நமக்கு பொறாமையை ஏற்படுத்தும் பல கார்கள் அவரிடம் உள்ளன. அவ்வளவு ஏன், கேடிலாக் கூட அவரிடம் உள்ளது.

ஆனால் பல இடங்களுக்கு, சாதாரண ஹோண்டா சிவிக் காரில் ரத்தன் டாடா வந்ததை பார்க்க முடிந்திருக்கிறது. ரத்தன் டாடா மற்றொரு சாதாரண காரையும் பயன்படுத்தி வருகிறார். அது டாடா நெக்ஸான்.

நாராயண மூர்த்தி-ஸ்கோடா லயூரா
இந்திய ஐடி துறையின் சக்ரவர்த்தி நாராயண மூர்த்தி. இந்திய ஐடி துறையின் வளர்ச்சியில், நாராயண மூர்த்தியின் பங்கு அளப்பரியது. இவர் இன்போஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். ஆனால் மிகவும் எளிமையான வாழ்க்கையைதான் நாராயண மூர்த்தி விரும்புகிறார்.

கருப்பு நிற ஸ்கோடா லயூரா காரில் பல இடங்களுக்கு அவர் வந்திருப்பதை காண முடிந்திருக்கிறது. அவர் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு முக்கியமான கார் மஹிந்திரா ஸ்கார்பியோ. மஹிந்திரா ஸ்கார்பியோவும் கூட சாதாரணமான கார்தான்.

ஆனந்த் மஹிந்திரா-மஹிந்திரா டியூவி 300
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் இந்தியாவின் பிரபலமான மற்றும் வெற்றிகரமான பிஸ்னஸ்மேன்களில் ஒருவராக இருந்தபோதும் கூட, சாதாரணமான கார்களை பயன்படுத்துவதைதான் விரும்புகிறார்.

தற்போது அவர் மாடிஃபைடு மஹிந்திரா டியூவி 300 சப் 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரைதான் பயன்படுத்தி வருகிறார். இந்த காரின் பாடி கிட், ப்ரண்ட் மற்றும் ரியர் ஸ்டோன் கார்டு, ப்ரண்ட் பம்பர் எக்ஸ்டென்சன், சைடு பாடி கிளாடிங், ஹுட் ஸ்கூப் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது.

அஸிம் பிரேம்ஜி-மெர்ஸிடெஸ் பென்ஸ் E-கிளாஸ்
விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி. இந்தியாவின் உள்ள மிகவும் செல்வ செழிப்பான நபர்களில் அஸிம் பிரேம்ஜியும் ஒருவர். நாராயணமூர்த்தியை போல் இவரும் இந்திய ஐடி துறையின் சக்ரவர்த்திகளில் ஒருவர்தான்.

இவர் மெர்ஸிடெஸ் பென்ஸ் E-கிளாஸ் காரை பயன்படுத்துகிறார். ஆனால் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியரிடம் இருந்து, இந்த காரை செகண்ட் ஹேண்டில்தான் அஸிம் பிரேம்ஜி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தன் நில்கேனி-டொயோட்டா இன்னோவா
தொழிலதிபர், அரசியல்வாதி என நந்தன் நில்கேனிக்கு பல்வேறு முகங்கள் உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. இன்போஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் நந்தன் நில்கேனியும் ஒருவர்.

மேற்கண்ட தொழிலதிபர்களை போல் நந்தன் நில்கேனியும் எளிமையான வாழ்க்கையைதான் வாழ்கிறார். லாஸ்ட் ஜெனரேஷன் டொயோட்டா இன்னோவா எம்பிவி காரைதான் அவர் தினசரி பயன்படுத்தி வருகிறார். அவரிடம் டொயோட்டா காம்ரே காரும் உள்ளது. ஆனால் அதையும் மிகவும் விலை உயர்ந்த கார் என்றெல்லாம் சொல்லி விட முடியாது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications