TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
தனியார் ஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளைக்கு ஆப்பு..!
இந்தியா முழுவதும் வெளியூரில் பஸ்களில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தனியார் ஆம்னி பஸ்களையே தேர்வு செய்கின்றனர்.
தனியார் பஸ்களில் உள்ள தரம், சரியான நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும் நேரம் தவறாமை, சொகுசான உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த பராமரிப்பு ஆகியவைதான் அரசு பஸ்களை விட்டு விட்டு தனியார் ஆம்னி பஸ்களை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணங்கள்.
அரசு பஸ்களை விட தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் விலை சற்று அதிகமாக இருந்தாலும் அதை பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் அதை தேர்வு செய்கின்றனர். ஆனால் இதை சாக்காக வைத்துக்கொண்டு தனியார் பஸ் நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் டிக்கெட்டிற்கான தட்டுப்பாடு ஏற்படும் போது மக்களிடம் டிக்கெட்டிற்கு அதிக பணம் வசூலித்து கொள்ளையடித்து வருகின்றனர்.
இந்த பிரச்னை தமிழகத்தில் மட்டும் அல்லாது இந்தியா முழுவதிலும் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் தனியார் ஆம்னி பஸ் ஆப்ரேட்டர்கள் இதே போன்ற செயலில் ஒவ்வொரு பண்டிகை அல்லது விடுமுறை காலங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு இது தெரிந்திருந்தும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதாக தெரியவில்லை. அவ்வப்போது வரும் புகார்களை வைத்து சோதனைகள் செய்வது, எச்சரிக்கை விடுவது என்று மட்டும் அவர்கள் சிறிய சிறிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் கொள்காபூர் பகுதியில் சமீபத்தில் நடந்த தீபாவளி பண்டிகை முடிந்து பலர் வெளியூர் செல்வதற்காக 7-12 தேதி வரையில் பஸ்களில் டிக்கெட்களை புக் செய்து வருகின்றனர்.
அவர்கள் பஸ் டிக்கெட்களை புக் செய்யும் போது அவர்கள் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை விட பல மடங்கு பணம் டிக்கெட்டிற்காக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த ஆர்டிஓ தீவிர விசாரணை நடத்தினார். அதில் வைபவ் டிராவல்ஸ், நித்தா டிராவல்ஸ், அசோகா டிராவல்ஸ், சிராங் டிராவல்ஸ் மற்றும் மோகன் டிராவல்ஸ் ஆகிய நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலையில் டிக்கெட்களை விற்றது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் தலா 29 நபர்களுக்கு குறையாமல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அதிக விலையில் டிக்கெட்களை விற்பனை செய்ததற்கு விளக்கம் கேட்டு அவர்களுக்கு ஆர்டிஓ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அடுத்த சில நாட்களுக்கு ஆம்னி பஸ்கள் கிளம்பும் இடங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அதிகமாக பணம் வசூலிக்கும் டிராவல்ஸ்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்களும் தாங்கள் வாங்கிய அல்லது வாங்கவுள்ள டிக்கெட்களுக்கு அதிக பணம் கோரியிருந்தால் உடனடியாக புகார் அளியுங்கள். அவர்கள் மீது தங்களால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் இது போன்று அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது இந்திய மோட்டார் வாகன சட்டப்படி அவர்களது பஸ் ஆப்ரேட்டர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.