இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்!

டாடா டியாகோ ஜேடிபி காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கார் தீபாவளிக்கு முன்னதாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள், 108 பிஎச்பி பவரை அளிக்க வல்ல டர

டாடா டியாகோ காரின் சக்திவாய்ந்த மாடலாக வரும் ஜேடிபி மாடல் இறுதிகட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்போடு எடுக்கப்பட் ஸ்பை படங்களும் வெளியாகி இருக்கின்றன.

இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்!

டாடா டியாகோ மற்றும் டிகோர் ஆகிய இரண்டு கார்களின் சக்திவாய்ந்த மாடல்கள் ஜேடிபி என்ற பிராண்டில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த இரண்டு கார்களையும், கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. தற்போது இரு கார்களும் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்!

இந்த நிலையில், தீபாவளிக்கு முன்னதாக டியாகோ ஜேடிபி மாடலை களமிறக்க டாடா திட்டமிட்டுள்ள நிலையில்,டீம் பிஎச்பிதளத்தில் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளுடன் சாதாரண மாடலிலிருந்து புதிய டியாகோ ஜேடிபி மாடல் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. கருப்பு வண்ண கூரை, ஸ்பாய்லர், இரட்டை சைலென்சர் குழாய்கள், இரட்டை வண்ண பம்பர், ஸ்கிட் பிளேட் மாதிரியுடன் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்!

இந்த காரில் இரட்டை வண்ண அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்டுகள், கருப்பு வண்ணத்திலான சைடு மிரர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. முன்பக்கத்தில் பம்பர் அமைப்பிலும், ஏர்டேம் அணைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் கருப்பு வண்ண பின்னணியுடன் கூடிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. க்ரில் அமைப்பில் ஜேடிபி லோகோ இடம்பெற்றுள்ளது.

இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்!

உட்புறத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்ப்டடுள்ளது. ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சிவப்பு நிற வேலைப்பாடு அழகு சேர்க்கிறது. இருக்கை கவர்கள் மற்றும் ஸ்டீயரிங் வீல் கவரில் சிவப்பு வண்ண தையல்கள் பிரிமியம் கார் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. இந்த காரில் அலுமினியம் பெடல்கள், 5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய டாடா டியாகோ ஜேடிபி மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். சிறப்பான செயல்திறனை வெளிக்கொணரும் விதத்தில், புகைப்போக்கி அமைப்பு ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.

இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்!

தவிரவும், சக்திவாய்ந்த எஞ்சினுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், கடினமான சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால், இந்த கார் சிறந்த கையாளுமையை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்!

புதிய டாடா டியாகோ ஜேடிபி மாடல் ரூ.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ கார் போலவே, அதன் சக்திவாய்ந்த ஜேடிபி மாடலும் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.

Article Published On: Wednesday, October 10, 2018, 10:42 [IST]
English summary
Tata Motors is gearing up for the launch of the Tiago JTP in the Indian market during the festive season. Tata Motors has been testing the Tiago JTP on Indian roads for quite some time. Now, TeamBHP has spotted the production-spec Tata Tiago JTP being tested without any camouflage.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+