ஆபரேஷன் இந்தியா! மாருதி, ஹுண்டாய்க்கு போட்டியாக பலே திட்டத்துடன் கால் பதிக்கும் பிஎஸ்ஏ!
ஐரோப்பாவை கலக்கி கொண்டுள்ள பிஎஸ்ஏ ஆட்டோமொபைல் நிறுவனம், விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பாவை கலக்கி கொண்டுள்ள பிஎஸ்ஏ ஆட்டோமொபைல் நிறுவனம், விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபரேஷன் இந்தியாவிற்காக, பிஎஸ்ஏ குரூப் பல்வேறு திட்டங்களை வகுத்து, தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் பிஎஸ்ஏ. ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் பிஎஸ்ஏ குரூப்தான். பாரீஸ் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஎஸ்ஏ நிறுவனம், 2017ம் ஆண்டில் 30 லட்சத்து 63 ஆயிரம் வாகனங்களை தயாரித்துள்ளது.

பிஎஸ்ஏ நிறுவனம் அடுத்ததாக இந்தியாவில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை பிஎஸ்ஏ குரூப் தொடங்கி விட்டது. அனேகமாக 2019ம் ஆண்டில் இந்திய கார் மார்க்கெட்டில், பிஎஸ்ஏ நிறுவனம் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 2 ஆண்டுகளுக்கு தங்களின் பிராண்ட் இமேஜை உயர்த்தி கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட பிஎஸ்ஏ குரூப் திட்டமிட்டுள்ளது. அதன்பின் அதிக எண்ணிக்கையிலான தயாரிப்புகளை பிஎஸ்ஏ நிறுவனம் மார்க்கெட்டில் களமிறக்கும்.

அதாவது பிஎஸ்ஏ குரூப் முதலில், இந்தியா முழுவதும் மிக முக்கியமான நகரங்களில், 'எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களை' நிறுவவுள்ளது. இதன்பின் அடுத்த 3-4 ஆண்டுகளில், நாடு முழுவதும் 80 முதல் 100 வரையிலான டீலர்ஷிப்களை அமைக்க பிஎஸ்ஏ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

பிஎஸ்ஏ நிறுவனமானது தனது இந்தியா ஆபரேஷனுக்கான, முக்கிய அதிகாரிகள் குழுவை நியமனம் செய்ய தொடங்கிவிட்டது. இதற்காக டாட்டா மோட்டார்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் சிலரை பிஎஸ்ஏ நிறுவனம் ஏற்கனவே இழுத்து விட்டது.

பிஎஸ்ஏ நிறுவனம் முதலில் சிட்ரான் சி84 அல்லது சிட்ரான் சி5-ஏர் கிராஸ் ஆகியவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள தனது பிளாண்ட்டில், வாகனங்களை அசெம்பிள் செய்யவும் பிஎஸ்ஏ குரூப் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இதற்கான இறுதி அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

பிஎஸ்ஏ குரூப் களத்தில் இறக்கும் புதிய எஸ்யூவி கார், ஜீப் காம்பஸ், ஹுண்டாய் டக்ஸான் மற்றும் விரைவில் லான்ச் ஆகவுள்ள ஸ்கோடா கரோக் ஆகிய கார்களுக்கு கடும் போட்டியாக விளங்கும்.

இந்தியாவில் கால் பதிப்பது தொடர்பாக பிஎஸ்ஏ நிறுவன வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்தியாவில் தங்களின் திட்டங்கள் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருவதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூடுதல் தகவல்களை வெளியிட மறுத்து விட்டனர்.

மாருதி மற்றும் ஹுண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக திறம்பட போட்டியிடும் வகையிலும், இந்திய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தயாரிப்புகளை டிசைன் செய்ய மற்றும் உருவாக்கவும், டிசிஎஸ் நிறுவனத்துடனும் பிஎஸ்ஏ குரூப் கைகோர்த்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








