புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் லேண்ட்மார்க் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: விபரம்!
ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியின் லேண்ட்மார்க் எடிசன் என்ற விசேஷ மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது லேண்ட்ரோவர் நிறுவனம். அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Recommended Video

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் காரின் லேண்ட்மார்க் எடிசன் என்ற விசேஷ பதிப்பை லேண்ட்ரோவர் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரேஞ்ச்ரோவர் எவோக் சொகுசு எஸ்யூவியின் 6ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு லேண்ட்மார்க் எடிசன் என்ற சிறப்பு பதிவு வந்துள்ளது. எவோக் எஸ்யூவியின் எஸ்இ என்ற வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து இந்த ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த லேண்ட்மார்க் எடிசனில் விசேஷ ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டில் பாடி கலர் பிளாஸ்டிக் கிளாடிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிராஃபைட் அட்லஸ் என்ற விசேஷ பூச்சு கொண்ட க்ரில் அமைப்பு, பின்புறத்தில் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் ஆகியவை இதற்கு சிறப்பு சேர்க்கின்றன.

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் க்ளாஸ் பிளாக் என்ற பளபளப்பான கருப்பு வண்ண 18 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்த காரின் கூரையில் சாம்பல் வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. இதில், லுமினிசென்ட் மொரைன் புளூ என்ற நீல வண்ணம் சிறப்பான தேர்வாக இருக்கும்.

வெளிப்புறத்தில் பல்வேறு விசேஷ அம்சங்களை பெற்றிருப்பதை போலவே உட்புறத்திலும் பல சிறப்புகளை பெற்றிருக்கின்றன. கருப்பு வண்ண இன்டீரியர் அசத்துகிறது. அதில், அலுமினி பீடிங்குகளுடன் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

உயர்தர எபோனி லெதர் இருக்கைகள், தையல் வேலைப்பாடு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. கீலெஸ் என்ட்ரி வசதியும், கை அசைவுகளை கண்டுணர்ந்து திறக்கும் வசதி கொண்ட பின்புற கதவு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் லேண்ட்மார்க் எடிசன் மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை இந்த கார் 9 வினாடிகளில் எட்டும். மணிக்கு 195 கிமீ வேகம் வரை செல்லும்.

ரூ.50.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சாதாரண எவோக் எஸ்யூவியைவிட இந்த புதிய சிறப்பு பதிப்பு மாடல் கவர்ச்சிகரமாக இருப்பதுடன், கூடுதல் சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளது. இந்த கார் புதிய வண்ணங்களில் கிடைப்பதும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications