புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது!

இந்தியாவில் லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி ரூ.83.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து ரூ.1.45 கோடி வரையிலான விலை பட்டியலில் கிடைக்கிறது. இந்த நிலையில், லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் வெலார் எஸ்யூவிய

புத்தாண்டு பரிசாக லேண்ட்ரோவர் வெலார் சொகுசு எஸ்யூவியின் விலை ரூ.14 லட்சம் குறைய இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது

லேண்ட்ரோவர் நிறுவனம் ரேஞ்ச்ரோவர் பிராண்டில் 4 எஸ்யூவி உயர்ரக எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அதில், லேட்டஸ்ட் மாடலான வெலார் இந்தியாவில் 24 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சொகுசு எஸ்யூவி ரக கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது

இந்தியாவில் லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி ரூ.83.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து ரூ.1.45 கோடி வரையிலான விலை பட்டியலில் கிடைக்கிறது. இந்த நிலையில், லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் வெலார் எஸ்யூவியானது இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.

புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது

மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள டாடா குழுமத்தின் ஆலையில் இந்த புதிய எஸ்யூவியின் உற்பத்தி அடுத்த மாதம் துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால், இந்த எஸ்யூவியின் விலை வேரியண்ட்டை பொறுத்து ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.14 லட்சம் வரை விலை குறைய இருக்கிறது.

புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது

இதன்படி பார்த்தால் லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவியின் விலை ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சத்திற்குள் ஆரம்ப விலை இருக்கும். இது நிச்சயம் போட்டியாளர்களுக்கு நெருக்கடியைும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பையும் வழங்கும்.

புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது

லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவியானது எவோக் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மாடல்களுக்கு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள் க்வாட் டெயில் லைட்டுகள், சைகை மூலமாக திறக்கும் வசதி கொண்ட டெயில்கேட், சாய்மான வசதியுடன் இருக்கைகள் உள்ளிட்ட பல சிறப்புகளை பெற்றுள்ளது.

புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது

இந்த எஸ்யூவியில் நவீன ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம், ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறது.

புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது

லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவியானது பெட்ரோல், டீசல் மாடல்களில் இந்தியாவில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 248 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது.

புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது

டீசல் மாடலானது 178 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனிலும், 296 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 3.0 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. மூன்று எஞ்சின் ஆப்ஷன்களிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது

டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் லேண்ட்ரோவர் மற்றும் ஜாகுவார் நிறுவனங்கள் தங்களது கார் மாடல்களை தொடர்ந்து இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் உத்தியை கையாண்டு வருகின்றன. இதனால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு சரியான தேர்வை வழங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 20, 2018, 10:15 [IST]
English summary
Range Rover Velar Prices May Reduce By Up To Rs 14 Lakh.
மேலும்... #லேண்ட்ரோவர்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+