பழைய வாகன பதிவு எண்ணை புதிய வாகனத்திற்கு பயன்படுத்தும் திட்டம்!

By Saravana Rajan

பழைய வாகனத்தின் பதிவு எண்ணை புதிய வாகனங்களுக்கு மாற்றிக் கொள்ளும் புதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

பழைய வாகன பதிவு எண்ணை புதிய வாகனத்திற்கு பயன்படுத்தும் திட்டம்!

புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கு பிரத்யேக பதிவு எண் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பழைய வாகனத்தின் பதிவு எண்ணை புதிதாக வாங்கும் வாகனத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வாகன உரிமையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

பழைய வாகன பதிவு எண்ணை புதிய வாகனத்திற்கு பயன்படுத்தும் திட்டம்!

இந்த திட்டத்தின்படி, பழைய வாகன பதிவு எண்ணை ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இதுபோன்று பழைய பதிவு எண்ணை புதிய வாகனத்திற்கு பயன்படுத்த விரும்புவோர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டி இருக்கும்.

பழைய வாகன பதிவு எண்ணை புதிய வாகனத்திற்கு பயன்படுத்தும் திட்டம்!

காருக்கு ரூ.5000 கட்டணமாகவும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.500 கட்டணமாகவும் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

பழைய வாகன பதிவு எண்ணை புதிய வாகனத்திற்கு பயன்படுத்தும் திட்டம்!

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், வாகன உரிமையாளருக்கு பழைய வாகன எண்ணை மாற்றிக் கொள்வதற்கான குறிப்புகளுடன், படிவம் ஒன்று பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

பழைய வாகன பதிவு எண்ணை புதிய வாகனத்திற்கு பயன்படுத்தும் திட்டம்!

இந்த படிவத்தை புதிய வாகனம் வாங்கும் டீலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு உங்களது புதிய வாகனத்திற்கு பழைய பதிவு எண்ணுடன் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

பழைய வாகன பதிவு எண்ணை புதிய வாகனத்திற்கு பயன்படுத்தும் திட்டம்!

அதேநேரத்தில், பழைய வாகனத்திற்கு வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகத்தின் மூலமாக புதிய பதிவு எண் வழங்கப்படும் என்று மத்திய போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழைய வாகன பதிவு எண்ணை புதிய வாகனத்திற்கு பயன்படுத்தும் திட்டம்!

அதேநேரத்தில், இந்த திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர், இந்த திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

பழைய வாகன பதிவு எண்ணை புதிய வாகனத்திற்கு பயன்படுத்தும் திட்டம்!

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பேன்ஸி பதிவு எண் வாங்கும் பணக்காரர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனெனில், பல லட்ச ரூபாய் கொடுத்து அவர்கள் பதிவு எண் பெறுகின்றனர். புதிய கார் வாங்கும்போது அதனை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.

Tamil
English summary
The Transport department has proposed a new draft which allows owners to transfer registration numbers from old to new vehicles. According to ET Auto, the old registered numbers can be transferred either to new four or two-wheelers.
Story first published: Monday, March 19, 2018, 16:09 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more