லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

சூப்பர் லக்ஸரி கார்களில் இருக்கும் வசதிகள் பிரம்மிப்பானதாக இருக்கும். அத்தகைய கார்களின் விலை மிக மிக அதிகம் என்பதால், எளிதில் வாங்க முடியாது.

By Arun

சூப்பர் லக்ஸரி கார்களில் இருக்கும் வசதிகள் பிரம்மிப்பானதாக இருக்கும். அத்தகைய கார்களின் விலை மிக மிக அதிகம் என்பதால், எளிதில் வாங்க முடியாது. ஆனால் குறைவான பட்டிஜெட்டில் கிடைக்கும் சில சாதாரண கார்களில் கூட, ஸ்டியரிங் வீலை தொடாமல் காரை ஓட்டுவது, வெறும் கை சைகை மூலமாக இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்துவது என லக்ஸரி கார்களில் இருக்கும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. அத்தகைய கார்கள் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

ஸ்கோடா ஆக்டாவியா

பார்க்கிங் அஸிஸ்ட்

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டாவியா கார், பார்க்கிங் அஸிஸ்ட் வசதியை வழங்குகிறது. ''ஹேண்ட் ஃப்ரீ பார்க்கிங்'' என்ற வசதி இந்த செடான் காரில் உள்ளது. அதாவது ஸ்டியரிங் வீலை தொடாமலேயே காரை பார்க்கிங் செய்யலாம்.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

ஸ்கோடா ஆக்டாவியா காரில் உள்ள சென்சார்கள், பார்க்கிங் செய்யவுள்ள இடத்தை முதலில் ஸ்கேன் செய்யும். பின்னர் எந்த திசையில் காரை செலுத்த வேண்டும் என்பதை, டிரைவருக்கு டிஸ்ப்ளே செய்யும். எனவே ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை மட்டும் டிரைவர் பயன்படுத்தினால் போதும்.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

பார்க்கிங் செய்யப்படும் இடத்தை பொறுத்து, பர்ஸ்ட் கியர் போடுவதா? அல்லது ரிவர்ஸ் கியர் போடுவதா? என்பதையும், பார்க்கிங் அஸிஸ்ட் வசதி டிரைவரிடம் கேட்கும். மெர்ஸிடெஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உள்ளிட்ட ஹை-எண்ட் லக்ஸரி கார்களில் இத்தகைய வசதி காணப்பட்டுள்ளது. எனவே இதனை ஒரு வரம் என்று சொன்னாலும் மிகையாகாது.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

ஹுண்டாய் கிரெட்டா

வயர்லெஸ் போன் சார்ஜிங்

ஹுண்டாய் நிறுவனம், கிரெட்டா ஃபேஸ்லிப்ட் காரை சமீபத்தில் சில கூடுதல் வசதிகளுடன் லான்ச் செய்தது. இதில் உள்ள ஒரு கவர்ச்சிகரமான வசதிதான் வயர்லெஸ் போன் சார்ஜிங்.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

இதற்கென காரில் வழங்கப்பட்டுள்ள இடத்தில், போனை வெறுமனே வைத்தால் போதுமானது. அதுவே மிக வேகமாக சார்ஜ் ஏறிகொள்ளும். இதற்கு எந்தவிதமான ஒயரும் தேவையில்லை. ஆடி க்யூ7, மெர்ஸிடெஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் போன்ற லக்ஸரி கார்களில்தான், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

டொயோட்டா யாரிஸ்

கெஸ்டர் கண்ட்ரோல் இன்போடெயின்மெண்ட்

புதிதாக லான்ச் செய்யப்பட்ட டொயோட்டா யாரிஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 7 ஏர்பேக்குகள் உள்பட பல வசதிகள் உள்ளன. இந்த செடான் காரில் உள்ள முக்கியமான வசதிகளில் ஒன்று, கெஸ்டர் கண்ட்ரோல் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

டொயோட்டா யாரிஸ் காரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் திரையை வெறும் கைகளில் சைகை காட்டுவதன் மூலமாகவே கண்ட்ரோல் செய்யலாம். புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார்களில் இத்தகைய வசதிகள் உள்ளன.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

காரை ஓட்டி கொண்டிருக்கும்போது, இன்கம்மிங் கால்களை அட்டெண்ட் செய்வதற்கோ, ரேடியோ ஸ்டேஷனை மாற்றுவதற்கோ, பட்டனை தேடி கொண்டிருக்க தேவையில்லை. டச் ஸ்கீரினை தொட வேண்டிய அவசியமும் இல்லை.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

வெறுமனே கையால் சைகை காட்டினால், கெஸ்டர் கண்ட்ரோல் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமே இந்த வேலைகளை எல்லாம் செய்து விடும். எனவே நீங்கள் சாலையில் மட்டும் கண்களை வைத்து கவனம் செலுத்தலாம். சாலையில் இருந்து கண்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

டாட்டா நெக்ஸான்

விரிஸ்ட் பேண்ட் கீ

இந்தியாவில் விரிஸ்ட் பேண்ட் கீ வழங்கிய முதல் மலிவான விலை கார் டாட்டா நெக்ஸான்தான். இந்த கீ வாட்ச் போல மணிக்கட்டில் கட்டிக்கொள்ளக்கூடியது. இதன்மூலம் காரை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம். அதுமட்டுமின்றி காரை ஸ்டார்ட் செய்யவும் விரிஸ்ட் ப்ரேண்ட் கீ-யை பயன்படுத்தலாம்.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

இந்த பேண்ட் மூலம் மணியையும் பார்த்து கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு தூரம் நடந்து செல்கிறீர்கள்? என்பது போன்ற தகவல்களையும் இந்த பேண்ட் காட்டும். ஜாக்குவார் எப்-பேஸ் கார், விரிஸ்ட் பேண்ட் கீ வசதியை வழங்குகிறது. ஆனால் ஹுண்டாய் நிறுவனம் சமீபத்தில் கிரெட்டா காரை இந்த வசதியுடன் லான்ச் செய்தது.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

டாட்டா ஹெக்ஸா

ஹில் டெஸண்ட் கண்ட்ரோல்

மிகவும் சவாலான மலைப்பாதைகளில் கீழே இறங்கும்போது, ஹில் டெஸண்ட் கண்ட்ரோல் மிகுந்த பயன் அளிக்கும். அத்தகைய கடினமான பயணங்களில், காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை, ஹில் டெஸண்ட் கண்ட்ரோல் உறுதிபடுத்துகிறது.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

மலைப்பாதைகளில் கீழே இறங்கும்போது, ஹில் டெஸண்ட் கண்ட்ரோலை ஆன் செய்து கொள்ளலாம். இதன்மூலம் டிரைவர் ஸ்டியரிங் வீலை மட்டும் கண்ட்ரோல் செய்தால் போதுமானது. பிரேக் மற்றும் இன்ஜின் கண்ட்ரோலை, ஹில் டெஸண்ட் பார்த்து கொள்ளும்.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

அதாவது சூழ்நிலைக்கு ஏற்ற வேகத்தில் மட்டும் காரை செலுத்தும். இதன்மூலம் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவதை தவிர்க்க முடியும். லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் போன்ற உயர்ரக கார்களில்தான் இந்த வசதி உள்ளது.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

ஃபோர்டு எகோ ஸ்போர்ட்

ஃபோர்டு எமர்ஜென்ஸி சர்வீஸ்

பிகோவில் இருந்து அனைத்து ஃபோர்டு கார்களும், ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யக்கூடிய வகையிலான, SYNC என்ற ஆப் லிங்க் உடன்தான் வருகின்றன. இந்த ஸ்மார்ட் ஆப், ஒருவேளை விபத்து நிகழ்ந்தால், அதை உணர்ந்து கொண்டு, எமர்ஜென்ஸி சர்வீஸை அழைக்கும்.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

அதுமட்டுமின்றி சம்பவ இடத்தையும் உடனடியாக ஷேர் செய்யும். நெருக்கடியான தருணங்களில், பொன்னான நேரத்தை இதன் மூலம் மிச்சம் பிடிக்கலாம். அனைத்து ரோல்ஸ் ராய்ஸ் கார்களும், இந்த வசதியுடன் வருகின்றன.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

மஹேந்திரா எக்ஸ்யூவி 500

டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

மஹேந்திரா எக்ஸ்யூவி 500 காரில், சன்ரூப் உள்பட பல வசதிகள் உள்ளன. இந்த காரில் உள்ள மற்றொரு முக்கியமான வசதி டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS). டயர் அழுத்தம் தொடர்பான தகவல்களை, காரின் முன்பகுதியில் உள்ள டிஸ்ப்ளே மூலமாக, இந்த சிஸ்டம் டிரைவருக்கு சொல்லும்.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

இதன்மூலம் கார் டயரின் அழுத்தத்தை டிரைவர் மிக சரியான அளவில் பராமரிக்க முடியும். இதனை செய்வதனால் கார் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, டயர் வெடித்து விபத்தில் சிக்குவதை தவிர்க்கலாம். வால்வோ எக்ஸ்சி 90, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் உள்ளிட்ட லக்ஸரி கார்களில் இந்த வசதிகள் உள்ளன.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

ஸ்கோடா சூப்பர்ப்

அம்பெர்லா ஹோல்டர்

ஸ்கோடா சூப்பர்ப் ப்ரில்லியண்ட் கார். இந்த காரில் அதிவேகத்தில் செல்லலாம். பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும். இதில், சில தனித்துவமான வசதிகளும் உள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் காரை தவிர்த்து, குடை வைத்து கொள்வதற்கான ஹோல்டரை வழங்கும் இந்தியாவின் ஒரே கார் ஸ்கோடா சூப்பர்ப்தான்.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

ஸ்கோடா சூப்பர்ப் காரின் டோர் பேனலில் குடையை வைத்து கொள்வதற்கு என தனியாக இடம் வழங்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கார் இத்தகைய வசதியுடன் வருகிறது. ஆனால் 2 கார்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது.

லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!!

ரோல்ஸ் ராய்ஸ் அம்பெர்லா ஹோல்டரானது, ஈரமாக உள்ள குடையை காய வைத்து கொடுக்கும். ஆனால் ஸ்கோடா சூப்பர்ப் காரில், அதனை செய்ய முடியாது.

Most Read Articles
English summary
‘Regular’ cars with ‘Super-Luxury’ car features: Tata Hexa-Range Rover to Ford EcoSport-Rolls Royce. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X