ரெனோ க்விட் அடிப்படையிலான எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

ரெனோ நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் RBC என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய கார் நிஸான்- ரெனோ கூட்டணியின் CMF-A பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக வீல் பேஸ் மற்றும்

ரெனோ க்விட் காரின் அடிப்படையிலான புதிய பட்ஜெட் எம்பிவி காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்கள், ஸ்பை படங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ க்விட் அடிப்படையிலான எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

இந்தியர்களின் நாடித்துடிப்பை அறிந்துகொண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது ரெனோ கார் நிறுவனம். அந்தவகையில், அந்நிறுவனம் அறிமுகம் செய்த க்விட் கார் சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில், அதன் அடிப்படையிலான புதிய மினி எம்பிவி காரையும் விரைவில் களமிறக்க உள்ளது.

ரெனோ க்விட் அடிப்படையிலான எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

ரெனோ நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் RBC என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய கார் நிஸான்- ரெனோ கூட்டணியின் CMF-A பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக வீல் பேஸ் மற்றும் பரிமாணத்தில் பெரியதாக மாற்றம் கண்டுள்ளது.

ரெனோ க்விட் அடிப்படையிலான எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

முகப்பு பிரம்மாண்டமாக இருந்தாலும், ரெனோ க்விட் காரின் வடிவமைப்பு தாத்பரியங்களுடன் இந்த கார் வர இருப்பது ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது. ஆனால், பக்கவாட்டிலும், பின்புறத்திலும் எம்பிவி கார்களுக்குரிய மிடுக்குடன் வடிவமைப்பை பெற்றிருக்கும்.

ரெனோ க்விட் அடிப்படையிலான எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

தோற்றத்தில் ரெனோ க்விட் சாயலுடன் வந்தாலும் இன்டீரியர் முற்றிலும் புதிதாக இருக்கும். மேலும், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட பல நவீன வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ரெனோ க்விட் அடிப்படையிலான எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

புதிய ரெனோ எம்பிவி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். அதேபோன்று, மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ க்விட் அடிப்படையிலான எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

புதிய ரெனோ ஆர்பிசி எம்பிவி கார் ரூ.7 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. மாருதி எர்டிகாவைவிட குறைவான விலையில், ரெனோ க்விட் கார் சாயலுடன் இந்த கார் வர இருப்பது ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

Image Source:1,2&3

More from DriveSpark

Article Published On: Monday, December 17, 2018, 13:05 [IST]
English summary
The new Renault MPV (based on the entry-level Kwid) has been spotted testing once again on Indian roads. At this point, not much is known about the upcoming 'Renault Kwid MPV', but reports say that it is codenamed as 'RBC'. The French automotive company already sells the Lodgy in the MPV market.
மேலும்... #ரெனால்ட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+