ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் ஆடம்பர எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் மிக காஸ்ட்லியான எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக வந்திருக்கிறது. இந்த எஸ்யூவியில் 571 பிஎச்பி பவரை அ

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் ஆடம்பர எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் மிக காஸ்ட்லியான எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக வந்திருக்கும் புதிய ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் ஆர்க்கிடெக்ச்சர் ஆஃப் லக்சுரி என்ற டிசைன் கொள்கையில் இந்த புதிய ஆடம்பர ரக எஸ்யூவி தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஃபான்டம் -8 காரின் அடிப்படையிலான எஸ்யூவி மாடலாக இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி 5,341 மிமீ நீளமும்,, 2,164 மிமீ அகலமும், 1,834 மிமீ உயரமும் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 3,295 மிமீ வீல் பேஸ் உடையது. இதனால், உட்புறத்தில் மிக தாராளமான இடவசதியை அளிக்கும்.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

வடிவமைப்பில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் டிசைன் தாத்பரிங்களுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, லோகோ மற்றும் ஸ்பிரிட் ஆஃப் எக்டஸி சின்னம் ஆகியவை முத்தாய்ப்பான விஷயங்கள்.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்கள். பெரிய ஏர்டேக் அமைப்பும், வலிமையான பம்பருடன் சில்வர் ஸ்கிட் பிளேட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பிரம்மாண்ட வடிவிலான ஆடம்பர எஸ்யூவியில் 22 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை குழல் புகைப்போக்கி குழல்கள் மற்றும் ரியர் டிஃபியூசர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் மிக மிக உயர்தரமான இன்டீரியரும், வேலைப்பாடுகளும் வசீகரிக்கின்றன. பெரிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, மெமரி வசதியுடன் எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் இருக்கைகள், மசாஜ் வசதி மற்றும் பிரிமீயம் லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

பின் இருக்கை பயணிகளுக்காக 12.3 அங்குல டிவி திரை கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புளூ ரே பிளேயர் மற்றும் டிஜிட்டல் டெலிவிஷன், 18 ஸ்பீக்கர்களுடன் கூடிய உயர்தர மியூசிக் சிஸ்டம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவியில் நைட் விஷன் கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, அலெர்ட் அசிஸ்ட், பாதசாரிகள் குறித்த எச்சரிக்கை வசதி, 4 கேமராக்களுடன் காரை சுற்றிலும் கண்காணிக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதி உள்ளது. இந்த எஸ்யூவியில் 560 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இருக்கைகளை மடக்கினால் 1,930 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவியில் எங்கேயும், எப்போதும் என்பதற்கான ஆஃப்ரோடுக்கான விசேஷ டிரைவிங் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. பந்தய களம், கரடுமுரடான சாலைகள், சேறு நிறைந்த சாலைகள், மணல் மற்றும் பனிபடர்ந்த சாலைகளுக்காக விசேஷ டிரைவிங் மோடுகள் உள்ளன.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியின் கிரவுண்ட் கிளியரன்ஸை டிரைவிங் மோடுக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதற்காக, விசேச சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. இந்த எஸ்யூவி 540 மிமீ ஆழம் வரையிலான நீர் நிலைகளில் செல்லும். இந்த எஸ்யூவியை 40 மிமீ வரை கிரவுண்ட் கிளிரயன்ஸை குறைக்க முடியும். இதனால், ஏறி, இறங்கும்போது எளிதாக இருக்கும்.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவியில் 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி12 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 571 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழஹ்கும். இசட்எஃப் நிறுவனத்தின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.6.75 கோடி இந்திய எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. பெரும் பணக்காரர்களை வசீகரிக்கும் அனைத்து உயர்தர அம்சங்களும் இந்த புதிய மாடலில் இருக்கிறது. பென்ட்லீ பென்டைகா, லம்போர்கினி உரஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 3, 2018, 14:37 [IST]
English summary
Rolls Royce Cullinan launched in India. The Cullinan SUV is the first all-terrain vehicle from the British luxury car manufacturer and is priced at Rs 6.95 Crore, ex-showroom (India).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+