மே 10ல் அறிமுகமாகிறது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி!

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி வரும் 10ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி ஃபான்டம் சொகுசு செடான் காரின் அடிப்படையிலான புதிய எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது. கல்லினன் என்ற பெயர

By Saravana Rajan

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி வரும் 10ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. உலகின் அதி சொகுசான எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

மே 10ல் அறிமுகமாகிறது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி!

எஸ்யூவி கார்களுக்கு உலக அளவில் அதிக வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், உயரிய சொகுசு கார் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமும் எஸ்யூவி கார் தயாரிப்பில் இறங்க முடிவு செய்தது. அதன்படி ஃபான்டம் சொகுசு செடான் காரின் அடிப்படையிலான புதிய எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது. ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி மாடல் வர இருக்கிறது.

மே 10ல் அறிமுகமாகிறது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி!

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முத்தாய்ப்பான டிசைன் தாத்பரியங்கள் மற்றும் உண்மையான ஆஃப்ரோடு எஸ்யூவியின் தொழில்நுட்ப மற்றும் தகவமைப்புகளுடன் இந்த புதிய மாடல் வர இருக்கிறது.

மே 10ல் அறிமுகமாகிறது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி!

முன்பக்கத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. செவ்வக வடிவிலான ஹெட்லைட் அமைப்பும் ரோல்ஸ்ராய்ஸ் டிசைன் தாத்பரியத்தை பிரதிபலிக்கிறது.

மே 10ல் அறிமுகமாகிறது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி!

உயர்த்தப்பட்ட முன்புற பானட் அமைப்பு, கூர்மையான ஃபென்டர் அமைப்பு போன்றவை எஸ்யூவி மாடலுக்கு உரிய நிலையை காட்டுகிறது. பக்கவாட்டில் பிரம்மாண்டமான வீல் ஆர்ச்சுகள் வலிமையை காட்டுகிறது.

மே 10ல் அறிமுகமாகிறது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி!

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி கரடுமுரடான சாலைகளில் செல்வதற்கான ஆஃப்ரோடு தகவமைப்புகள் கொண்ட மாடலாகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு தக்கவாறு ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் இதர தகவமைப்புகளை பெற்றிருக்கும்.

மே 10ல் அறிமுகமாகிறது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி!

வரும் 7ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவியை அடுத்த சில மாதங்களில் வாடிக்கையாளர்கள் ஓட்டிப்பார்க்கும் வாய்ப்பை ரோல்ஸ்ராய்ஸ் வழங்க இருக்கிறது.

மே 10ல் அறிமுகமாகிறது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி!

கடந்த மூன்று ஆண்டுகளாக மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த எஸ்யூவி முதல்முறையாக பொது தரிசனத்திற்கு வர இருப்பது ரோல்ஸ்ராய்ஸ் பிரியர்கள் மற்றும் சொகுசு எஸ்யூவி கார் ஆர்வலர்கள் மத்தியிலும் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 7, 2018, 10:03 [IST]
English summary
Rolls Royce has confirmed the global reveal of their first SUV, the Cullinan, on 10th May 2018. The Rolls Royce Cullinan is said to be the most luxurious SUV to hit the market
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+