ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி

தானியங்கி கார்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

By Balasubramanian

தானியங்கி கார்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. டெஸ்லாவிற்கு போட்டியாக ஆப்பிள் கார்களை களம் இறக்க இரண்டு நிறுவனங்களும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி

கடந்த 2015ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தானியங்கி வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு வருவதாக அறிவித்தது. தற்போது அந்நிறுவனம் அதற்காக ஃபோக்ஸ்வாகன் காருடன் ஒப்பதம் ஒன்றை போட்டுள்ளது.

ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி

முதலில் ஆப்பிள் நிறுவனம் காரின் சேஸிஸ் மற்றும் வீல்களை பொருத்தி தரமட்டும் வேறு ஒருநிறுவனத்தை நாடும் எண்ணத்தில் இருந்தது. காரின் மற்ற பாகங்களை தயாரிக்க 1000 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்தது ஆனால் அந்த குழுவால் முழு காரையும் குறிப்பிட்ட காலத்திற்குள் தயார் செய்யமுடியவில்லை.

ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி

இதையடுத்து அந்நிறுவனம் முழுமையாக ஒரு காரை வாங்கி அதில் அவர்கள் தயாரிக்கும் சென்சார்களையும் சில சாட்ப்வேர்களையும் இன்ஸ்டால் செய்து இதன் மூலம் தானிங்கி கார்களை இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து தான் கார் தயாரிக்க நியமித்த குழுவின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளது.

ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் லெக்ஸஸ் கார்களை வாங்கி அதில் தனது சென்சார்களை பொருத்தி அவை எவ்வாறு வேலை செய்கின்றன என அமெரிக்காவில் சோதனை நடத்தி வருகிறது. இதற்காக அந்நாட்டு அரசு கடந்த 2016ம் ஆண்டு ஆனுமதியளித்தது.

ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி

தற்போது லெக்ஸஸ் கார்களுடன் சோதனை நடத்தி வரும் ஆப்பிள் நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவில்லை. மாறாக ஜப்பான் கார் நிறுவனமான நிஸான், சீன கார் நிறுவனமான பிஒய்டி ஆட்டோ, பிரிட்டன் கார் நிறுவனமான மெக்லார்ன் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் எதுவும் ஒத்து வரவில்லை.

ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி

தொடர்ந்து ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததையோட்டி அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் தயாரிக்கும் கார்களுடன் ஆப்பிள் சாட்வேர் மற்றும் சென்சாரை பொருத்தி சோதனையிடவுள்ளது.

ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி

இதற்கான ஆய்வை தற்போது இத்தாலியில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமான டி6 என்ற வேனில் இந்த சாப்ட்வேர் மற்றம் சென்சார்களை பொருத்தி டிசைன் செய்துள்ளது.

அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா? எல்லாம் யார் வீட்டு காசு?ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி

முதற்கட்டமாக டெஸ்லா கார்களில் உள்ளது போல் எப்பொழுது வேண்டுமானாலும் டிரைவர் காரை தன் கட்டுப்பாட்டில் எடுக்கலாம் என்ற முறையில் கார்கள் தயார் செய்யப்படவுள்ளன. இந்த இரு நிறுவனமும் சேர்ந்து நடத்தி வரும் இந்த ஆய்வு வெற்றியடையும் பட்சத்தில் அடுத்தகட்டமாக கார்கள் விற்பனைகாக தயார் செய்யப்படும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Rumour: Apple signs deal with VW for autonomous cars.Read in Tamil
Story first published: Sunday, May 27, 2018, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X