பி.எம்.டபிள்யூ சூப்பர் காரில் மும்பையை வலம் வந்த சச்சின்
உலக புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது பி.எம்.டபிள்யூ ஐ8 காரில் மும்பை நகரில் வலம் வரும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
உலக புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது பி.எம்.டபிள்யூ ஐ8 காரில் மும்பை நகரில் வலம் வரும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

உலக புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சனின் மிகப்பெரிய கார் ரசிகர் என்பது நமக்கு அவருக்கு கார் ஓட்டுவது என்றாலே அலாதி பிரியம். அவ்வப்போது அவர் கார் ஓட்டும் போட்டோக்கள் வெளியாகும்.

இவர் இந்தியாவிற்கு பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ளார். மேலும் இவரிடம் இருக்கும் கார்களில் பெரும்பாலானது. பி.எம்.டபிள்யூ கார்கள் தான்.

அந்த வகையில் இவர் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் ஐ8 என்ற சூப்பர் காரையும் இவர் சொந்தமாக வைத்துள்ளார். அவ்வப்போது அந்த காரின் மும்பை மாநகரில் வலம் வருவார். அவ்வாறு அவ்வாறு அவர் கடந்த ஞாயிற்று கிழமையன்று மும்பையில் பி.எம்.டபிள்யூ காரில் வலம் வந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். 1:37 வது நிமிடத்தில் இருந்து சச்சின் சூப்பர் காரின் வலம் வரும் காட்சிகள் உள்ளன.
இந்த காரை சச்சின் ஓட்டி வருவது தான் வீடியோவில் தெரிந்தது. வேறு யாரும் இந்த காருக்குள் இருந்தார்களா அல்லது சச்சின் மட்டும் தனியாக இந்த காரை ஓட்டி வந்தாரா என்ற தகவல் முழுமையாக தெரியவில்லை. அவர் தனியாக இந்த காரை ஓட்டி வந்ததாகவே கூறப்படுகிறது.

சச்சின் வைத்திருக்கும் பி.எம்.டபிள்யூ ஐ8 சூப்பர் கார் வெள்ளை நிற கார் தான். ஆனால் சச்சனின் அதை ஆல்டர் செய்து சிவப்பு கலர் பெயிண்ட்டில் ஆங்காங்கே நீல கலர் கோடு போட்டது போல ஆல்டர் செய்து பயன்படுத்தி வருகிறார்.

அவர் வைத்துருக்கம் கார் ஹைபியர்டு கார். இது 1.5 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன்,231 பிஎச்பி பவர் மற்றும் 320 என்.எம்., டார்க் திறன் கொண்டது. மேலும் பெட்ரோல் இன்ஜின் எலட்ரானிக் மோட்டாரால் மேட் செய்யப்பட்டுள்ளது. இது 131 பிஎச்பி பவர், மற்றும் 250 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த இரண்டு இன்ஜினும் சேர்ந்த மொத்தமாக 362 பிஎச்பி பவர் மற்றும் 570 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இந்த கார் 4.4 நொடிகளில் 0-100 வேகத்தை பிக்கப் செய்யக்கூடியது. இதற்கு இந்த காரின் குறைந்த எடை தான் முக்கிய காரணம். இந்த கார் கார்பன் பைபர் என்ற மெட்டிரியலால் கட்டமைக்கப்பட்டுள்ளது. காரின் சேஸிசில் உள்ள கேபின் டப் பகுதியும் கார்பன் பைபரால் ஆனது அதனால் அது வாகனத்தின் உறுதியை மேலும் அதிகமாக்கியுள்ளது.

பி.எம்.டபிள்யூ ஐ8 தான் உலகின் அதிகமாக விற்பனையாகும் பிளக் இன் ஹைபியர்டு கார். அதன் தனித்துவமான பவர் டெரைன், மற்றும் ஸ்டைல் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கார்களின் பிரியரான கிரிக்கெட் வீரர் சச்சினிடம் பி.எம்.டபிள்யூ 760 எல்ஐ எம் - ஸ்போர்ட், பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 எம், பி.எம்.டபிள்யூ எம் 6 க்ரான் க்கூப், பி.எம்.டபிள்யூ எம்5, பிஎம்.டபிள்யூ எம்5 30 ஆகிய கார்களை சொந்தமாக வைத்திருக்கிறார். மேலும் அவரது முதல் காரான மாருதி 800 காரையும் இன்னும் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்.

நிஸான் ஜி.டி - ஆர் மற்றும் ஃபெராரி 360 மொடினா ஆகிய கார்களை அவர் சில ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தி வந்தார். தற்போது அந்த கார்களை விற்று விட்டார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் படிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications