ஆட்டோக்களில் இனி கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகள்! என்னவெல்லாம் என தெரிந்தால் அசந்து போவீர்கள்
கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் இனி ஆட்டோக்களிலும் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. என்னென்ன வசதிகள் என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியம் அடைவது உறுதி.
கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் இனி ஆட்டோக்களிலும் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. என்னென்ன வசதிகள் என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியம் அடைவது உறுதி.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக, ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர் (துல்லியமாக சொல்வதென்றால் 2,99,091 பேர்). உலக சுகாதார நிறுவனம் (World Health Organization-WHO) வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒவ்வொரு நாளும் சுமார் 820 பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுவே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் என கணக்கிட்டால், இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது 34ஆக உள்ளது.

எனவே சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

125சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS- Anti-lock Braking System) கட்டாயமாக இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது இதற்கு ஓர் உதாரணம் மட்டுமே.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமானது, வழக்கமான பிரேக்கிங் சிஸ்டம்களை காட்டிலும் மேம்பட்டது. இது வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். எனவேதான் 125சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளில் கட்டாயமாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல், இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. எனவே 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு விற்பனைக்கு வந்து கொண்டுள்ள 125சிசிக்கும் அதிகமான அனைத்து மோட்டார் சைக்கிள்களிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக இருக்கும்.

இவ்வாறு ஒவ்வொரு வாகனங்களிலும் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் இடம்பெறுவதை மத்திய அரசு படிப்படியாக கட்டாயமாக்கி கொண்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது ஆட்டோக்களுக்கும் பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 29,351 விபத்துக்களில் ஆட்டோக்கள் சிக்கின. இதில், 6,762 பேர் உயிரிழந்தனர். எனவேதான் ஆட்டோக்களுக்கும் தற்போது மிக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய நெறிமுறைகளின்படி, ஆட்டோக்களில் இனி கதவுகள் (Doors) கட்டாயம் இடம்பெற வேண்டும். ஓடி கொண்டிருக்கும் ஆட்டோக்களில் இருந்து பயணிகள் கீழே விழுவதை தடுப்பதற்காகவே கதவுகள் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இனி கார்களை போன்று ஆட்டோக்களிலும் சீட் பெல்ட் வசதி கட்டாயமாக இடம்பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்டோ டிரைவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்து கொண்டுதான், ஆட்டோக்களை இயக்க வேண்டும்.

இனிமேல் புதிதாக விற்பனைக்கு வரவுள்ள ஆட்டோக்களில் விசாலமான இட வசதி வழங்கப்பட வேண்டும். குறிப்பாக டிரைவர் மற்றும் பயணிகள் தங்கள் கால்களை சௌகரியமாக வைத்து கொள்வதற்கு ஏற்ற வகையில் (Leg room) இடவசதி வழங்கப்படுவது கட்டாயம்.

தற்போதைய நிலையில் பெரும்பாலான ஆட்டோக்களில், ஒரு ஹெட்லேம்ப் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால் இனி 2 ஹெட்லேம்ப்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

இந்தியாவில் பொது மக்களின் போக்குவரத்திற்கு, ஆட்டோக்கள் அளித்து வரும் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் 5 முதல் 6 லட்சம் வரையிலான ஆட்டோக்கள் விற்பனையாகி கொண்டுள்ளன.

ஆட்டோ ரிக்ஸா செக்மெண்ட்டில் பஜாஜ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஆட்டோ ரிக்ஸாக்களில் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எனவேதான் தற்போது இதுபோன்ற பாதுகாப்பு நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி ஆகியவற்றில்தான் பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. ஆனால் வருங்காலத்தில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாக்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் எல்லாம், எலெக்ட்ரிக் ஆட்டோக்களை உற்பத்தி செய்யும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில், மஹிந்திரா நிறுவனமானது, ட்ரியோ என்ற எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகமே செய்து விட்டது.

இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க வெறும் 50 பைசாதான் செலவு ஆகும் என வெளியாகி இருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 சீட்டர் (ரூ.1.36 லட்சம்) மற்றும் 5 சீட்டர் (ரூ.2.23 லட்சம்) ஆப்ஷன்களில் ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








