தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

டில்லியில் மேற்கு எக்ஸ்பிரஸ்வே திறந்து வைத்த மோடி இந்தியா நீர் வழி போக்குவரத்தில் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், சாகர் மாலா திட்டம் முழுவதுமாக நிறைவேற்றப்படும் என்றும் பேசியுள்ளார். சாகர்மாலா திட்டத

டில்லியில் மேற்கு எக்ஸ்பிரஸ்வே திறந்து வைத்த மோடி இந்தியா நீர் வழி போக்குவரத்தில் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், சாகர் மாலா திட்டம் முழுவதுமாக நிறைவேற்றப்படும் என்றும் பேசியுள்ளார். சாகர்மாலா திட்டத்தின் படி தமிழகத்திற்கு சீர்காழி மற்றும் இணையம் பகுதியில் துறைமுகம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இந்தியாவில் ஆண்டிற்கு ஆண்டு போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினமும் செயல் இழக்கும் வாகனங்களை விட புதிதாக விற்பனையாகும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியிருக்கிறது.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இந்த வாகனங்களை எல்லாம் உட்கொள்ளும் வகையில் கட்டமைப்பு வசதிகள் அதிகமான அளவில் செய்யப்பட்டு வருகின்றன. அதிகமாக வாகனங்கள் பயன்படுத்தப்படும் ரூட்களில் புதிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகள் கட்டமைக்கப்படுகிறது.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி டில்லியில் இருந்து அருகே உள்ள சில மாநிலங்களை இணைக்கும் கிழக்கு பெரிபெரல் எக்ஸ்பிரஸ் வே என்ற திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். இது குறித்து இந்தியாவே பேசியது. பல்வேறு அம்சங்களுடன் இந்த சாலை கட்டமைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இந்நிலையில் டில்லியில் இருந்து மேற்கு பகுதிகளை இணைக்க மேற்கு பெரிபேரல் எக்ஸ்பிரஸ் வே-வை திறந்து வைத்தார். இந்த சாலை டில்லி -ஆம்பாலா-அமிர்தசரஸ், டில்லி-ஆக்ரா-வாரணாசி-டன்குனி, டில்லி-ஜெய்பூர்-ஆமதாபாத்-மும்பை மற்றும் டில்லி-ஹிஸர்-பாஸில்கா-இந்தியா-பாக்., எல்லைப்பகுதி ஆகிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இதன் மூலம் டில்லி-உ.பி-ராஜஸ்தான் இடையே செல்லும் வாகனங்கள் டில்லி டிராபிக்கிற்குள் வராமல் நேரடியாக செல்ல முடியும். இதனால் டிராபிக் குறைவதோடு மாசு ஏற்படுவதும் பெரும் அளவில் குறையும்.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இந்த சாலை மத்திய மாநிலங்களில் இருந்து வட மாநிலங்களையும், மேற்கு மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

சுமார் ரூ.1,915 கோடி திட்டமதிப்பில் 2009ம் ஆண்டே முடிக்கப்பட வேண்டிய இந்த பணி பல கட்டங்களாக இழுக்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்டதை வித 9 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

மேலும் இந்த சாலை ஹரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களையும் இணைக்கிறது. இந்த சாலைகளை சுற்றியுள்ள சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் 5 புதிய நகரங்களை உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இதற்கிடையில் இந்த மேற்கு பெரிபேரல் எக்ஸ்பிரஸ்வே சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி : "மக்களின் போக்குவரத்தை சுலபமாக்குவதே மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கம். இந்த சாலை மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மேலும் சுற்றுச்சுழலில் ஏற்படும் மாசு குறையும். இது மட்டும் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கான பயணம் சுலபமாகும். இதனால் இதன் மூலம் பயன்பெறும் ஒவ்வொருவரின் வாழ்வும் மேம்படும்.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இது போன்று சாலைகள், ரயில்வேகள், ஹைவே மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளுடன் தற்போது நீர் வழி போக்குவரத்தையும் அதிகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு குறைவான விலையில் வேகமாக பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

தற்போது புதிய வகை எலெக்ட்ரிக் ரயில்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை மேம்படுத்தி வருவதும் இந்த மாற்றத்திற்கான ஒரு படிதான். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பு இந்தியாவில் பெருகியதும் மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட்டு விட்டு மெதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இந்த ஆட்சியில் மத்திய அரசு 37 ஆயிரம் கி.மீ. ஹைவே/எக்ஸ்பிரஸ் வே அமைக்க சுமார் ரூ.3 லட்சம் கோடி செலவு செய்துள்ளோம். இது மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் நீரால் இணைக்க சாகர்மாலா என்ற திட்டத்தை வகுத்து தற்போது தேசிய அளவில் முதலாவது நீர் வழி போக்குவரத்து வாரணாசியில் துவங்கப்பட்டுள்ளது" என கூறினார்.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

அவரது பேச்சில் சாகர்மாலா திட்டத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார் பார்த்தீர்களா? இந்த திட்டம் எதிர்கால இந்தியாவில் நீர் வழி போக்குவரத்திற்காக வித்தாக அமைய போகும் திட்டம் என்ற பேச்சு நிலவி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

சாகர் மாலா திட்டம் கடந்த 2003ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது கொண்டு வரப்பட்டது. இந்த திட்டமானது இந்தியாவில் நீர் வழி போக்குவரத்தை மேம்படுத்துவதையே கொள்கையாக கொண்டது.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இத்திட்டதை முழுமையாக செயல்படுத்த 577 புராஜெக்ட்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதை செய்வதற்காக சுமார் 8 லட்சம் கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்றது.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இந்த சாகர்மாலா திட்டம் என்பது தற்போது இருக்கும் துறைமுகங்களை நவீனப்படுத்துவது, புதிய துறைமுகங்களை அமைப்பது, துறைமுகங்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவது, துறைமுக இணைப்புகளை கட்டமைப்பது. கடலோர மக்களுக்கான வாழ்வாதார பிரச்னைகளை சீர் செய்வதுதான் சாகர் மாலாவின் அடிப்படை திட்டம்.

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்

இதன்படி இந்தியாவில் 6 புதிய துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. மேற்கு வங்கத்தில் சாகர் தீவு, ஓடிசாவில் பாராதீப், தமிழ்நாட்டில் சீர்காழி, இணையம், கர்நாடகாவில் பேலிகேரி, மஹாராஷ்டிராவில் வாதவன் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படுகிறது.

ட்ரெண்டிங் டிரைவ்ஸ்பார்க் யூ டியூப் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ டியூப் சேனலை பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
English summary
Sagarmala will surely come to tamilnadu modi says. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X