சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்

சவுதி அரேபியாவில் நேற்று முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டனர். சுமார் 30 ஆண்டுகளின் அந்நாட்டு பெண்களின் கனவுகள் தற்போது நிஜமாகியுள்ளது.

By Balasubramanian

சவுதி அரேபியாவில் நேற்று முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டனர். சுமார் 30 ஆண்டுகளின் அந்நாட்டு பெண்களின் கனவுகள் தற்போது நிஜமாகியுள்ளது. முதல் நாளே அந்நாட்டை சேர்ந்த ஒரு பெண் ரேஸ் டிராக்கில் எப்-1 ரக கார ஒட்டி அசத்தியுள்ளார். இது குறித்த விரிவான செய்திகளை கீழே படியுங்கள்

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்

இஸ்லாமிய மதப்படி பெண்கள் கார்களை ஓட்டுவது பாவம் என குறிப்பிட்டு பல இஸ்லாமிய நாடுகள் பெண்கள் கார் ஓட்ட தடை விதித்திருந்தனர். ஆனால் இது குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் கடந்த 1990ம் ஆண்டுகளிலேயே பல இஸ்லாமிய நாடுகளில் இந்த தடை நீக்கப்பட்டது.

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்

ஆனால் சவுதி அரேபியாவில் மட்டும் அந்த தடை தொடர்ந்து இருந்து வந்தது. இதனால் அந்நாட்டு பெண்கள் தாங்கள் வெளியே செல்லவோ, அல்லது வெளியூர்களுக்கு செல்லவோ, ஏன் தங்கள் குழந்தைகளுக்களை பள்ளிக்கு அழைத்து செல்லவோ அவர்கள் தங்கள் கணவர், தந்தை, சகோதரர், டிரைவர் என யாராவது ஒருவரது உதவியை நாட வேண்டியது இருந்தது.

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்

இதனால் பெண்களுக்கு வாகனம் ஓட்ட உரிமம் வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்தது. மற்ற இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் வாகனம் ஓட்ட கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே அனுமதி கிடைத்துவிட்டாலும், சவுதியில் அதற்கான அனுமதியை பெற பெண்கள் சுமார் 30 ஆண்டுகள் போராடி வந்தனர்.

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்

சில பெண்கள் சவுதியில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தனர். ஆனால் அவர்களும் சவுதியில் கார் ஓட்ட அனுமதியில்லை. பெண்களை கார் ஓட்ட அனுமதிப்பது என்பது பாவ செயலாகவும், பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஈடான குற்றமாகவும் கருதப்பட்டது.

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்

பெண்களின் இந்த 30 ஆண்டு போராட்டத்தின் வெற்றியாக கடந்தாண்டு கார் ஓட்டுவதில் பெண்களுக்கு இருந்த தடை நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் ஓட்டுநர் லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பபட்டன.

இதையடுத்து நேற்று (ஞாயிற்று கிழமை) பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டது. சர்வதேச லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் கார் ஓட்டி வருகின்றனர். சவுதியில் கார் ஓட்ட தற்போது பெண்களுக்கும் லைசன்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்

தற்போது சவுதியில் உள்ள பெரும்பாலான பெண்களிடம் லைசன்ஸ் இல்லை என்றாலும் அவர்கள் எல்லாம் தற்போது அதற்கான உரிமையை பெற்று விட்டனர். இனி அவர்கள் எப்பொழுது நினைத்தாலும் கார் ஓட்ட லைசன்ஸ் பெற்று காரை ஓட்டலாம்.

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்

உலகில் பெண்கள் கார் ஒட்ட இருந்த தடையை நீக்கிய கடைசி நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது. இதன் மூலம் தற்போது உலகம் முழுவதும் உள்ள பெண்கள் வாகனம் ஓட்ட எந்த தடையும் இல்லை என்ற இலக்கை உலக மக்களாக நாம் இன்று எட்டியுள்ளோம்.

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்

சவுதி பெண்ணான அஸ்சில் அல் ஹாமத் என்ற பெண் சிறு வயது முதலே எப்1 கார் ரேஸிங்கில் விரும்பம் கொண்டவர். இவர் தற்போது சர்வதேச கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு வருகிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டு முதன் சவுதி பெண்ணாக கார் ரேஸிங்கில் கலந்து கொண்டார்.

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்

ஆனால் அவர் சவுதி நாட்டிற்காக ரேஸில் பங்கேற்கவில்லை. சவுதி நாட்டிற்காக அவர் கார் பந்தையத்தில் பங்கு பெற வேண்டும் என்பதை அவர் கனவாக வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று சவுதி பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதியளித்த நிலையில் நேற்று பிராஞ்ச்ஜிபி பந்தையத்தில் அவர் அனைவரது முன்னிலையிலும் காரை ஓட்டி அசத்தினார். அந்த காட்சியை நீங்கள் கீழே காணலாம்.

மேலும் சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதியளிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டு இளவரசர் அல்வாலித் தனது மகள் கார் ஓட்ட அவர் அருகில் அமர்ந்து பயணித்த வீடியோ காட்சி நேற்று வெளியானது. அந்த காட்சியை நீங்கள் கீழே காணலாம்.

உலகம் முழுவதும் இந்த தடை நீக்கத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் சவுதி அரசை பராட்டியுள்ளனர். நாட்டு மக்களிடையே இன்னும் இந்த முடிவிற்காக எதிர்ப்புகள் இருந்தும் அரசு அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தற்போது இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Saudi Women Are Now Driving As Longstanding Ban Ends. Read in Tamil
Story first published: Monday, June 25, 2018, 11:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X