பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எஸ்யூவி கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ. வாழ்நாளில் ஒரு ஸ்கார்பியோ காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எஸ்யூவி கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ. வாழ்நாளில் ஒரு ஸ்கார்பியோ காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அந்த அளவுக்கு மக்களின் மனதில் வலுவாக இடம்பிடித்து விட்ட ஒரு கார்தான் ஸ்கார்பியோ. அவ்வளவு ஏன்? ஒரு காலத்தில் பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்ததும் ஸ்கார்பியோதான். இப்படிப்பட்ட ஸ்கார்பியோ கார் குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

23 இன்ஜினியர்களை கொண்ட சிறிய குழு உருவாக்கியதுதான் ஸ்கார்பியோ!

ஸ்கார்பியோ காரை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனத்தின் மிக சிறிய குழுவே ஈடுபட்டது. இந்த குழுவில் 23 இன்ஜினியர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர் என்பது ஆச்சரியமான செய்தி. இதனால்தான் ஸ்கார்பியோ காருக்கு மஹிந்திரா நிறுவனத்தால்தான் குறைவான விலையை நிர்ணயிக்க முடிந்தது.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

ஆரம்ப விலை வெறும் ரூ.5.5 லட்சம் மட்டுமே!

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரை கடந்த 2002ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அந்த நேரத்தில் டொயோட்டா குவாலிஸ் கார்தான் விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருந்தது. அதனை முறியடிக்க புதிய யுக்தி ஒன்றை கையாண்டது மஹிந்திரா.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

ஆம், ஸ்கார்பியோ காரை வெறும் 5.5 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் அதிரடியாக அறிமுகம் செய்தது மஹிந்திரா நிறுவனம். இது டொயோட்டா குவாலிஸ் காரின் விலையை காட்டிலும் 50 ஆயிரம் ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

ஆனால் தற்போது மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் பேஸ் வேரியண்ட்டின் விலையே 10 லட்ச ரூபாயை தொடுகிறது. என்றாலும் பல்வேறு புதிய வசதிகளை மஹிந்திரா கூடுதலாக சேர்த்துள்ளது. இன்ஜினை அப்டேட் செய்துள்ளதுடன், புதிய சேஸிஸையும் மஹிந்திரா வழங்கியுள்ளது.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

இந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தற்போதும் நியாயமான விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறது என்பதே ஆட்டோமொபைல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

முழுக்க முழுக்க மஹிந்திராவே உருவாக்கிய முதல் கார்!

மஹிந்திரா நிறுவனம் தனது 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகதான் ஸ்கார்பியோ காரை 2002ம் ஆண்டு அறிமுகம் செய்தது. முழுக்க முழுக்க மஹிந்திரா நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்ட முதல் கார் ஸ்கார்பியோதான்.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

ஆஸ்திரியாவை சேர்ந்த ஏவிஎல் என்ற நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த சில ஆலோசகர்களும், ஸ்கார்பியோ காரை உருவாக்குவதற்கான சில ஆலோசனைகளை மட்டும் வழங்கினர். அவர்களின் உதவியுடன் மஹிந்திரா நிறுவனம்தான் முழுக்க முழுக்க ஸ்கார்பியோ காரை உருவாக்கியது.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

டீசல் இன்ஜின் உடன் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை வழங்கிய முதல் இந்திய எஸ்யூவி!

டீசல் இன்ஜின் உடன் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை வழங்கிய முதல் பட்ஜெட் எஸ்யூவி வகை கார் என்ற பெருமையை 2008ம் ஆண்டில் பெற்றது மஹிந்திரா ஸ்கார்பியோ. அத்துடன் ஸ்டார்ட்-ஸ்டாப் ஆப்ஷனும் மஹிந்திரா காருடன் வழங்கப்பட்டது.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

செடான் கார்களின் வசதிகளை வழங்கிய முதல் இந்திய எஸ்யூவி!

2002ம் ஆண்டில் அறிமுகமாகியிருந்தாலும் அவ்வப்போது செய்யப்படும் அப்டேட்கள் காரணமாக ஸ்கார்பியோ காரை மஹிந்திரா நிறுவனம் எப்போதும் 'பிரெஷ்' ஆகவே வைத்துள்ளது. இந்த வகையில் ஸ்கார்பியோ காரில் கடந்த 2007ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் சில அப்டேட்களை செய்தது.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

செடான் வகை கார்களில் இருப்பது போன்ற ரெயின் சென்சிங் வைப்பர்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வாய்ஸ் அஸிஸ்ட், ரிவர்ஸ் சென்சார்ஸ் உள்ளிட்ட வசதிகளை எஸ்யூவி வகை காரான ஸ்கார்பியோவுடன் அப்போது வழங்கியது மஹிந்திரா.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

விருப்பம் போல் மஹிந்திராவே மாற்றி தருகிறது!

கஸ்டமைஸ்டு வெர்ஷன் (Customised versions) ஸ்கார்பியோக்களை கம்பெனியில் இருந்து நேரடியாக வாங்க கூடிய வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது மஹிந்திரா நிறுவனம். இந்த விஷயம் பலருக்கும் தெரிவது இல்லை.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

இதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மஹிந்திரா கார்களை ஆல்டர் செய்து கொள்ளலாம். அதனை மஹிந்திரா நிறுவனமே செய்து தருகிறது. இந்தியாவில் உள்ள முன்னணி கார் நிறுவனங்களில் மஹிந்திரா மட்டுமே இப்படியான ஒரு வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

உலகப்புகழ் பெற்ற கார் ஸ்கார்பியோ!

மஹிந்திரா ஸ்கார்பியோ காரானது இந்தியா மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் உருகுவே, எகிப்து என பல்வேறு சர்வதேச மார்க்கெட்களிலும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

ஸ்கார்பியோ மீதான மோடியின் காதல்!

சாதாரண பொது மக்கள் மட்டுமல்லாது நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் பலரும் ஸ்கார்பியோ காரால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் பிரதமர் ஆவதற்கு முன்பாக குஜராத் மாநில முதல் அமைச்சராக நரேந்திர மோடி பதவி வகித்தார்.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

அப்போது அவர் மஹிந்திரா ஸ்கார்பியோ காரையே பயன்படுத்தி வந்தார். ஏராளமான சொகுசு கார்கள் மார்க்கெட்டில் இருந்தாலும், மஹிந்திரா ஸ்கார்பியோ என்றால், நரேந்திர மோடிக்கு கொள்ளை பிரியம். எனவே மஹிந்திரா ஸ்கார்பியோ காரே அவரின் ஆஸ்தான வாகனமாக மிக நீண்ட நாட்களுக்கு இருந்தது.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் நரேந்திர மோடி பயன்படுத்திய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் புல்லட் புரூப் வசதி கொண்டது. இதன்பின்னர் நாட்டின் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி உயர்ந்ததால்தான் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை மாற்றி விட்டார்.

பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்

தற்போது மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு பதிலாக, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறார். சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்களில் பிரம்மிக்கதக்க வகையிலான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

Most Read Articles

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #மஹிந்திரா
English summary
Secrets Of Legendary Mahindra Scorpio SUV. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X