உலகின் முதல் ஃப்ளாட்பேக் டிரக்கை இந்தியா கொண்டு வரும் ஷெல் நிறுவனம்!!

Written By:

அனைத்து சாலைநிலைகளிலும் எளிதாக செல்வதற்கான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் இலகு ரக ஃப்ளாட்பேக் ரக டிரக் மாடலை இங்கிலாந்தை சேர்ந்த குளோபல் வெஹிக்கிள் டிரஸ்ட் அமைப்பு உருவாக்கி இருக்கிறது. இந்த டிரக்கை செயல்விளக்கம் செய்து காண்பிக்கும் நோக்கத்தில் இந்தியா கொண்டு வருகிறது ஷெல் ஆயில் நிறுவனம்.

உலகின் முதல் ஃப்ளாட்பேக் டிரக்கை இந்தியா கொண்டு வரும் ஷெல் நிறுவனம்!!

சர் டார்கில் நார்மன் என்பவரது எண்ணத்தில் உருவான இந்த டிரக்கை மெக்லாரன் எஃப்-1 காரை வடிவமைத்த பிரபல கார் டிசைனர் கார்டன் முர்ரே வடிவமைத்துள்ளார். அனைத்து சாலை மற்றும் சீதோஷ்ண நிலையில் எளிதாக செல்லும் தகவமைப்புகளுடன் வளர்ந்து வரும் நாடுகளை மனதில் வைத்து இந்த டிரக்கை உருவாக்கி இருக்கின்றனர்.

உலகின் முதல் ஃப்ளாட்பேக் டிரக்கை இந்தியா கொண்டு வரும் ஷெல் நிறுவனம்!!

2016ம் ஆண்டு இந்த டிரக்கின் புரோட்டோடைப் மாடல் உருவாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கிரவுண்ட் ஃப்ன்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டு, அதில் இந்த டிரக்கின் கியர்பாக்ஸ், எஞ்சின் குளிர்விப்பு அமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டது. அத்துடன், வீல் பேஸ் 200மிமீ வரை அதிகரிக்கப்பட்டது.

உலகின் முதல் ஃப்ளாட்பேக் டிரக்கை இந்தியா கொண்டு வரும் ஷெல் நிறுவனம்!!

இந்த காரின் காக்பிட் மிக எளிமையாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காக்பிட்டில் கவனிக்க வேண்டிய விஷயம், வாகனத்தின் நடுவில் ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதுதான். முன்புறத்தில் 3 பேரும், பின்னால் இருக்கும் கேபின் பகுதியில் பக்கத்திற்கு தலா 5 பேர் வீதம் 10 பேரும் பயணிக்கலாம்.

உலகின் முதல் ஃப்ளாட்பேக் டிரக்கை இந்தியா கொண்டு வரும் ஷெல் நிறுவனம்!!

பொருட்களை எளிதாக ஏற்றுவதற்கான அமைப்புடன் இந்த டிரக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான சரிவு மேடையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃப்ளாட்பேக் டிரக் ஸ்டீல் லேடர் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருப்பதால், அதிக உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் முதல் ஃப்ளாட்பேக் டிரக்கை இந்தியா கொண்டு வரும் ஷெல் நிறுவனம்!!

இந்த வாகனத்தில் 1,900 கிலோ வரை எடை சுமக்கும் திறனையும் பெற்றுள்ளது. பொருட்களை ஏற்றுவதும் இறக்குவதும் எளிதான வகையில் இடவசதியும் இருக்கிறது.

உலகின் முதல் ஃப்ளாட்பேக் டிரக்கை இந்தியா கொண்டு வரும் ஷெல் நிறுவனம்!!

ஃபோர்டு டிரான்சிட் வாகனத்தில் பயன்படுத்தப்படும், 98 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும். அனைத்து சாலைகளுக்குமான வாகனமாக இருப்பதால் 4 வீல் டிரைவ் சிஸ்டம் அவசியம். இது சாத்தியமான விஷயம் என்று கார்டன் முர்ரே தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் ஃப்ளாட்பேக் டிரக்கை இந்தியா கொண்டு வரும் ஷெல் நிறுவனம்!!

இந்த டிரக்கின் மற்றொரு சிறப்பம்சம், இதன் எளிமையான வடிவமைப்பு மற்றும் உதிரிபாகங்கள் மூலமாக வெறும் 12 மணிநேரத்தில் அசெம்பிள் செய்துவிட முடியும். இதற்கு 3 பணியாளர்கள் மட்டுமே தேவைப்படுவர். ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று அசெம்பிள் செய்வதும் எளிதானதாக இருக்கும்.

உலகின் முதல் ஃப்ளாட்பேக் டிரக்கை இந்தியா கொண்டு வரும் ஷெல் நிறுவனம்!!

ராணுவ பயன்பாடு, வனச் சவாரிகள் மற்றும் சாகச பயணங்கள் செல்வோருக்கு ஏதுவான அம்சங்களை இந்த டிரக் பெற்றிருக்கிறது. இந்தியாவில் இந்த டிரக்கிற்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக ஷெல் ஆயில் நிறுவனம் செயல்விளக்கத்திற்காக இந்தியா கொண்டு வருகிறது.

Source: Autocar

English summary
Shell Is Bringing World's first flat-pack truck To India.
Story first published: Friday, April 13, 2018, 15:46 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark