ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

Written By:

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

சென்னையை சேர்ந்தவர் பிரகாஷ் [வயது 21]. தனது தாய் மற்றும் தங்கையுடன் ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து பின்னர் தனது பைக்கில் இருவரையும் பின்னால் அமர வைத்துக் கொண்டு வீடு திரும்பி இருக்கிறார்.

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

அப்போது பிரகாஷ் ஹெல்மெட் அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரை போலீசார் மடக்கி நிறுத்தி இருக்கின்றனர். மேலும், மூன்று பேர் பைக்கில் அமர்ந்து வந்ததும் தவறு என்று போலீசார் கடுமையாக கூறி இருக்கின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

அப்போது பிரகாஷ் மற்றும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ் தாயை போலீசார் அடித்ததாக தெரிகிறது. இதனை கண்டு கோபமடைந்த பிரகாஷ் போலஸ் சப் இன்ஸ்பெக்டர் சட்டை காலரை பிடித்துள்ளார்.

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் ஒன்று கூடி பிரகாஷை பிடித்து அங்குள்ள கம்பத்துடன் சேர்த்து வைத்து பிடித்துக் கொண்டு சரமாரியாக தாக்குகின்றனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

இந்த சம்பவத்தில் பிரகாஷின் விரல்களை போலீஸ்காரர் ஒருவர் முறிக்கும் காட்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்று போலீசார் வாகன ஓட்டிகளை முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

அண்மையில் திருச்சியில் ஹெல்மெட் போடாமல் வந்த இருசக்கர வாகனத்தை போலீஸ்காரர் ஒருவர் எட்டி உதைத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கின்றன.

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

இந்த சூழலில் அதேபோன்று வாகன ஓட்டியை போலீசார் பிடித்துக் கொண்டு ரவுண்டு கட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

ஹெல்மெட் போடாமல் வருபவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனை நடைமுறைகள் இருக்கும்போது போலீசார் இதுபோன்று சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு வாகன ஓட்டிகளை தாக்குவது முறையாகாது.

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய போலீசார் இதுபோன்று மூர்க்கத்தனமாக நடந்து கொள்வது சரியான தீர்வாக அமையாது.

பிரகாஷை போலீசார் ரவுண்டு கட்டி அடிக்கும் வீடியோ காட்சியை இங்கே காணலாம்.

English summary
Shocking: Police Thrashed Youth For Not Wearing Helment.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark