ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் லாரின் அண்ட் க்ளெமண்ட் என்ற புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் பொருந்திய விலை உயர்ந்த மாடலாக விற்பனை செய்யப்படும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பெஷல் மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய கோடியாக் மாடலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரம் மற்றும் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

ஸ்கோடா கோடியாக் லாரின் அண்ட் க்ளெமண்ட் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. கோடியாக் எஸ்யூவியின் அனைத்து வசதிகளும் பொருந்திய விலை உயர்ந்த மாடலாக விற்பனை செய்யப்படும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அசிஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் அதற்கான 360 டிகிரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளன. டோ செய்து எடுத்துச் செல்லப்படுவதை தெரிவிக்கும் இன்டீரியர் மானிட்டரிங் சிஸ்டத்துடன் கூடிய ஆன்ட்டி தெஃப்ட் அலாரம் வசதி உள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

அதேபோன்று, ஒவ்வொரு முறை சாவியை எடுக்கும்போதும், காரின் இக்னிஷியன் சிஸ்டத்தில் குறியீடு மாறிவிடும். இதனால், காரின் குறியீட்டை திருடர்கள் தெரிந்து கொள்வது தவிர்க்க முடியும். அல்லது டூப்ளிகேட் சாவியை போட்டு எடுக்க முடியாது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

திருடு போகும்போது அலாரம் போல செயல்படும் ஹாரன், வாஷருடன் கூடிய ரியர் வியூ கேமரா, அடிப்பாகத்தை பாதுகாப்பதற்கான விசேஷ பாடி கவர் ஆகியவை இந்த காரில் வழங்கப்படுகிறது. இந்த காரில் ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதியும் உள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அனலாக் மானி இல்லை என்பதால், நவீன யுக மாடலாக காட்சி தருகிறது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசா்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடிருப்பதுடன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

இந்த ரகத்திலேயே 9 ஏர்பேக்குகள் கொண்ட மாடலாகவும் இது பெருமை பெறுகிறது. இதுதவிர, எண்ணற்ற பாதுகாப்பு வசதிகளையும் இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது. இதனால், மிகச் சிறந்த பாதுகாப்பை அளிக்கும் எஸ்யூவி மாடலாகவும் தன்னை முன்னிறுத்துகிறது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

புதிய ஸ்கோடா கோடியாக் லாரின் அண்ட் க்ளெமென்ட் மாடல் ரூ.35.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Article Published On: Monday, November 5, 2018, 18:14 [IST]
English summary
Skoda Kodiaq L&K variant launched in India at Rs 35.99 lakhs.
மேலும்... #ஸ்கோடா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+